காஞ்சித் தவ மாமுனிவர் தவத்திரு பி டி இராகவன் திருவான்மியூர் விண்ணில் தவழ்ந்த வேல்விழியாள் மண்ணில் தவழ்ந்திட ஆசைகொ

காஞ்சித் தவ மாமுனிவர்

தவத்திரு பி.டி.இராகவன்

திருவான்மியூர்

விண்ணில் தவழ்ந்த வேல்விழியாள்

மண்ணில் தவழ்ந்திட ஆசைகொன்டாள்

யுகங்கள் பலப்பல உருண்டதினால்

யாகம் மிகமிக குறைந்ததினால்

உலகம் யாவும் உய்ய எண்ணி

தவத்தின் வடிவாய் தோன்றினாள் கன்னி

இரண்டு என்று ஏதுமில்லை

இரண்டும் இணைந்தால் இருப்பது ஒன்று

வேதங்களின் சாரம் இதுவே என்று

அத்துவித அறிவை விளக்கச் சென்று

சங்கரன் உருவாய் மண்ணில் பிறந்து

சாற்றும் மறைகள் நான்கும் சிறந்து

மாந்தர் மனமும் பண்படவே

மண்ணின் சிறப்பும் உயர்ந்திடவே

காஞ்சி பீடத்தில் தானே அமர

காஞ்சி தவ மாமுனியாய் வந்தாள்.

தமிழகம் செய்த தவமே இதுவோ

தர்மம் கொண்ட வடிவே இதுவோ

ஞானம் பெற்ற உருவும் இதுவோ

சங்கடம் தீர்க்கும் சங்கரன் வடிவோ !

ஞாலம் போற்றும் உயர் சீலமே

ஞானியர் வணங்கும் தவச் செல்வமே

பாமரர் ஏற்றும் பரம பிதாவே

பாவலர் பாடும் பண்ணின் பொருளே


காஞ்சியில் கோயில் கொண்டாள் காமாட்சி

காட்சிக்கு அவள்தான் மனசாட்சி

பேசாமலே நின்றாள் கற்சிலையாய்

பேசவே பிறந்தாள் மாமுனியாய்

ஏற்றம் பலவும் தந்திடுவார்

இருளைப் போக்கும் பகலவனாய்

நம்முள் ஒளியாய் வாழ்ந்திடுவார்

வாழ்த்திவணங்கி போற்றிடுவோம்.