ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர் நிலைப் பல்கலைக்கழக்கத்தின் 7-வது பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம், ஏனாத்தூரிலுள்ள ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர

ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர் நிலைப் பல்கலைக்கழக்கத்தின் 7-வது பட்டமளிப்பு விழா.

காஞ்சிபுரம், ஏனாத்தூரிலுள்ள ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கழக்கத்தின் 7-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சர்வதேச நூலகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் லட்சுமிநாராயணன் தலைமையில் பட்டமளிப்புக் குழுவினர் ஊர்வலமாக அரங்கினுள் பிரவேசித்தனர், ஸ்ரீ மடத்து வித்யார்த்திகள் ஸ்வஸ்தி வசனம் வாசிக்க, பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் நி.யி.க்ஷி.ஜகன்னாத ராஜு விழா தொடங்கியதாக அறிவித்தார். துணை வேந்தர் டாக்டர். ழி.ஜெயசங்கரன் வரவேற்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், இந்த 7-வது பட்டமளிப்பு விழாவானது பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் நேரத்தில் நடப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் சமுதாய நலனுக்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் ஸ்வாமிகள் எடுத்த முயற்சிகளை அளப்பறியது என்றும் அப்பேர்ப்பட்ட ஸ்வாமிகள் நமது பல்கலைக்கழக்கத்திற்கு காப்பாளராக அமைந்தது பாக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலாளர் பேராசிரியர் டாக்டர் க்ஷி.ஷி.ராமமூர்த்தி இவ்விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்தார். அவர் தனது உரையில் மாணவர்களு நமது நாட்டினை பேணி வளர்க்க அயராது பாடுபடவேண்டும் என்றும், மாறிவரும் நவீன உலகத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்களை புரிந்து அதற்கு பழகிக் கொள்பவரே வெற்றி பெறலாம் என்றும் கூறினார். அறிவியல் துறையிலும் தொழில்நுட்பத்திலும் மிகவும் உறுதியான அடித்தளம் அமைக்கக் கோரிய அவர் அதற்காக மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிக் கூட விஞ்ஞான அறிவை வெளிச் சந்தையில் வெற்றிகரமாக செயல்படுத்தும் உத்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்தியர்களின் தொழில்நுட்ப அறிவு உலகத்தில் எவ்வாறு பாராட்டப்படுகிறது என்பதையும் நினைவு கூர்ந்தார். இப்பொழுதும் நிறைய வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன, அதை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்வது மாணவர்களின் கைகளில் உள்ளது என்று கூறி உரையை முடித்தார். பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் நி.யி.க்ஷி.ஜகன்னாத ராஜு தனது உரையில், மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு பற்றி குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் மாணவர்களுக்கு கல்வி என்பது cF, நேர்மை, ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் முதலியவற்றின் அடிப்படையில் கற்பிக்கப் படவேண்டும் என்பதை வலியுறுத்தினார். எப்படி இந்த நூலக வளாகமானது புராதன மற்றும் நவீன நுட்பத்தின் கலவையாக இருக்கிறதோ அதுபோல கல்வியறிவு என்பது நமது கலாசாரம், நவீன தொழில்நுட்பம் ஆகியவையின் கலவையாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார். பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மாணவர்களுக்கு அநுக்ரஹ பாஷனம் மற்றும் ப்ரஸாதங்களை அளித்தார்கள். சுமார் 650 மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். இதில் B.S.C.S ( Bachelor of Sanskrit & Computer Science ) , E.C.E., M.E., Bacheleor of Ayurvedic Medicinal Studies, M.C.A., M.B.A., M.A (Sanskrit) மற்றம் ஆய்வுப் படிப்புக்கான மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்ட மாணவர்களை பல்கலைக்கழக துறைத்தலைவர் திரு. திருவெங்கடாச்சாரி அறிமுகம் செய்தார். அனைத்து துறையிலும் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க மெடல் வழங்கி கௌரவிக்கப் பட்டது. மாணவர்களுக்கு சான்றிதழ்களை பல்கலைக்கழக வேந்தர் வழங்கினார். பதிவாளர் நிறைவுறையாற்றினார். பட்டமளிப்பு முடிந்ததாக பல்கலைக்கழக வேந்தர் அறிவித்தார். நிறைவாக ஆதிசங்கரர் இயற்றிய 'மைத்ரிம் பஜத'மற்றும் தேசிய கீதத்துடன் விழா முடிவுற்றது. இவ்விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணைச் செயலர் திரு. ரவி மாத்தூர், IIT சென்னையின் கணிப்பொறி பேராசிரியர் திரு. ஷி.க்ஷி.ராகவன், தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக்கத்தின் துணை வேந்தர் திரு. சேதுராமன் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.