காஞ்சிபுரம் S S K V - பள்ளியில் ஸ்வர்ண ஜயந்தி கொண்டாட்டம் டிசம்பர் 8 2003 டிசம்பர் 8-ம் தேதி 2003 அன்று மாலை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்

காஞ்சிபுரம் S..S.K.V - பள்ளியில் ஸ்வர்ண ஜயந்தி கொண்டாட்டம்
டிசம்பர் 8 2003

டிசம்பர் 8-ம் தேதி 2003 அன்று மாலை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பீடமேற்று 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி விழா ஒன்று, காஞ்சியில் உள்ள 100-வருடப் பழமையான S.S.K.V பள்ளியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடவுள் வாழ்த்தோடு தொடங்கிய இந்த விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தாளாளர் திரு.சி.ரி.ராமன் அவர்கள் ஸ்வாமிகள் அவர்கள் கல்வித்துறைக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்ந்தார். ஸ்வாமிகளின் வழிகாட்டுதலுடனும் ஆசியுடன் பள்ளி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்ட அவர் ஆச்சார்ய ஸ்வாமிகளுக்கு வெள்ளியில் செய்த ஸரஸ்வதி பீடம் (சிக்குப்பலகை) ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.