சதாவர்த்தி ருக் வேத ஸம்ஹிதா ஹோமம் - 2004 ஸ

 சதாவர்த்தி ருக் வேத ஸம்ஹிதா ஹோமம் - 2004

ஸ்ரீ குருப்யோ நம:

       காஞ்சீபுரத்தில் மூலாம்நாய பீடமாக பரமேஸ்வரரின் அவதாரமாகிய பகவான் ஆதிசங்கரரால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ மடம் நிறுவப்பட்டது. இந்த பீடம் பல அவதார புருஷர்களால் இன்றைய வரையிலே அலங்கரிக்கப்பட்டு வரப்பட்டுள்ளது. இன்றைய மக்கள் சமுதாயம், 69ம் பீடாதிபதியாக மக்களை உடலால், உணர்வால், பொருளாதாரத்தால் ஆன்மீகத்தால் உயர்த்துவதற்காக தீட்டப்படும் எல்லா திட்டங்களுக்கும் முன்னோடியாக, தெய்வீக புருஷராக விளங்கும் ஆசார்யாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நம்மிடையே பெற்றுள்ள பாக்கியத்தை படைத்திருக்கிறது. எண்ணிக்கையற்ற நிறுவனங்களை தோற்றுவித்து, பல தனிப்பட்டவர்களை ஊக்குவித்து,      ஸ்ரீமடம் தன்னுடைய குறிக்கோளை நிறைவு செய்து கொள்ள பல ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறது.

       இத்தகைய குறிக்கோளை மேலும் வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட வளாகத்தில் 2004ம் ஆண்டு      23 ஜூலை முதல் 2 ஆகஸ்ட் வரை சதவர்த்தி ருக் வேத ஸம்ஹிதா ஹோமமும் பாராயணமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரப்படுகிறது.

       கடந்த பல ஆண்டுகளாக சமுதாயம் தொழில் துறையில், பொருளாதாரத்தில், முன்னேற்றம் அடைந்திருந்தாலும் வேதத்திலும் அதன் ஸம்ப்ரதாயத்திலும் பொதிந்து கிடக்கும் அறிவு சுரங்கத்தைப் பற்றியதான உணர்வு மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலை நீடிக்குமேயானால், இதனை சீர்படுத்த இன்றைய சமுதாயம் தவறிவிடுமேயானால், இத்தகைய அறிவு களஞ்சியம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமோ என்கிற நியாயமான பயம் ஏற்பட்டுள்ளது. ஆக இந்த வேத பாராயணத்தை ஏற்படுத்துவதின் மூலம் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு நம்மிடையே இருக்கும் அறிவுத் திறனைப் பற்றிய மதிப்பும் கவுரவமும் பெருமையும் மக்களுக்குக் கிட்டும் வாயப்பு அளிக்கப் பட்டுள்ளது. நம்மிடையே உள்ள இந்த பழமையான வேதத்தின் அறிவு வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத ஒரு தனித்தன்மை கொண்டது என்பதில் நமது சமுதாயம் பேருவகை பூண்கிறது.

பொதுவாக சமுதாயத்தில் நம் அறிவுச் செல்வத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதுடன் இந்த வேத பாராயணத்தின் மூலம் மக்களை தற்போது வாட்டும் பல்வேறுவகைப்பட்ட மன உடல் சம்பந்தப்பட்ட இடர்பாடுகளைப் போக்குவதற்கு என ருக் வேதத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளான ஹோமங்களைச் செய்வதன் மூலம் அந்தந்த தேவதைகளை திருப்தி படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் பொதுவான முன்னேற்றம் ஆகியவை கிட்டுவதற்கு வழி

செய்யப்படுகிறது. மக்கள் பொதுவாக தேவலோகத்தில் உள்ள தேவர்களும் பூவுலகில் உள்ள மனித இனமும் ஒன்றை ஒன்று சார்ந்தும் தொடர்பு கொண்டும் நம்பியும் தங்கள் தங்கள் வாழ்வில் நிம்மதியையும், ஒழுங்கினையும், உபயோகமான வாழ்க்கையையும் நடத்துவதற்கு இருக்கின்றனர் என்பதை பொதுவாக உணர்வதில்லை. நம்முடைய பழமையான முனிவர்கள் பூலோகத்தில் உள்ளவர்கள் தேவலோகத்தில் உள்ள தேவர்களை திருப்தி செய்து அவர்களின் அருளைப் பெறுவதற்கு எனப் பல்வேறு சடங்குகளை வழிவகுத்து அளித்துள்ளார்கள். இதனை பின்பற்றுவதால் தேவர்கள் மனம் குளிர்ந்து தங்களின் அருளை நம்மீது பொழிகின்றனர். இநத நோக்கத்தை அடைவதற்கு என்றே இந்த ஹோமங்கள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

       இந்த பாராயணங்களிலும் ஹோமங்களிலும் மிகுந்த எண்ணிக்கையில் வேத விற்பன்னர்கள் கலந்து பங்கேற்க இருக்கிறார்கள். இத்தகைய பாராயண ஹோமங்களினை ஏற்பாடு செய்வதின் அடிப்படை நோக்கமே சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வரை நம்மிடையே நடைமுறையில் இருந்து வந்தவற்றைப் பற்றியதான ஒரு அறிமுகமும் அதனை பின்பற்றுவதற்கான அவசியத்தை உணர்த்துவதுமேயாகும்.

       இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஸ்ரீ மடம் மக்களிடையே வேண்டுவது, பொதுமக்கள் வெகுவாக இதில் கலந்து கொண்டு இந்த பாராயண ஹோமங்களின் பயன்களைப் பெற்று வாழ்வில் நல் பயன்கள் யாவையும் முழுமையாக பெற  வேண்டும் என்பதே.

       தற்போது நிகழ இருக்கும் சாதுர்மாஸ்ய காலத்தில் நம்முடைய பூஜிக்கத்தகுந்த ஆசார்யாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 70-வது ஜயந்தி மஹோத்ஸவ தினமாகிய ஆகஸ்ட் 2-ம் தேதியில் முடிவடையும் விதத்தில் விரிவான செயல் திட்டங்கள் தனியாக அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமடத்தின் பக்தர்கள் யாவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இதில் வெகுவாக பங்குகொண்டு ஆன்மீகப் பயன் அடைந்து ஆசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அநுக்ரஹத்திற்கு பாத்திரர்களாக ஆகுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இந்த பாராயணமும் ஹோமங்களும் ஆசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற இருக்கின்றன.

சதாவர்த்தி ரிக்வேத ஸம்ஹிதா ஹோமம் 2004

நிகழ்ச்சி நிரல்

தேதி

கிழமை

    காலை

    மாலை

23 ஜூலை

வெள்ளி

கணபதி ஹோமம்

மன்யுஸ¨க்த பாராயணம்

24 ஜூலை

சனி

மன்யுஸ¨க்த ஹோமம்      

ஐக்யமத்யஸ¨க்த பாராயணம்

25 ஜூலை

ஞாயிறு

ஐக்யமத்யஸ¨க்த ஹோமம்

26 ஜூலை

   முதல்

1 ஆகஸ்ட்

திங்கள்

முதல்

ஞாயிறு

ருக்வேத ஸம்ஹிதா ஹோமம்

 சொற்பொழிவுகள்

      மற்றும்

 வேத பாராயணம்

2 ஆகஸ்ட்

திங்கள்

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 70-வது ஜயந்தி பூர்ணாஹ§தி

       ருக் விதானத்தில் கூறியுள்ளபடி ரிக்வேத ஸம்ஹிதா ஹோமத்திற்கான ஏற்பாடுகள்.

       10 ஹோமகுண்டங்கள் 10 ரித்விக்குகளுடன் ஒரு குண்டத்திற்கு, 10 திரவியங்களை நெய்யுடன் உபயோகப்படுத்துதல். 10 ஹோம குண்டங்களுக்கும் ருக்வேதத்தின் 10 மண்டலங்களின் பெயர்கள் இடப்படும்.

1. சதார்த்தினம் மத்யமம்   2. கிருத்ஸமதம்

3. விஸ்வாமித்ரம்            4. வாமதேவம்

5. ஆத்ரேயம்               6. பாரத்வாஜம்

7. வாசிஷ்டம்                8. ப்ரசாதம்

9. பவமானம்                 10. க்ஷ§த்ர மற்றும் மஹா ஸ¨க்தம்

       ருக்வேதம் 10 மண்டலங்களாகவும் 85 அநுவாகங்களாகவும், 1017 ஸ¨க்தங்களாகவும், 10472 ருக்குகளாகவும், 394317 எழுத்துக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

காலை 8 மணி முத்ல 12 மணி வரை ஹோமங்கள் நடத்தப்படும்.

ஜபங்கள் மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஜபிக்கப்படும்.

மேற்கொண்டு தகவல்களுக்கு அணுக வேண்டிய முகவரி

       மேலாளர்

      ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸம்ஸ்தானம்

      1, சாலைத் தெரு, காஞ்சீபுரம் -631502

            Tel: 04112-222115, 231102

            Email: kanchimutt@vsnl.com