காஞ்சிபுரத்தில் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி விழாக் கொண்டாட்டம் 14-ம் தேதி டிசம்பர் 2003 ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி கா

காஞ்சிபுரத்தில் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி விழாக் கொண்டாட்டம்
14-ம் தேதி டிசம்பர் 2003

ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி காஞ்சிபுரத்தில் 14-ம் தேதி டிசம்பர் 2003 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவின் ஒர் அங்கமாக புஷ்பத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ பெரியவாளை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இவ்வூர்வலம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி மேட்டுத் தெருவில் உள்ள வீராசாமி கல்யாண மண்டபத்தில் நிறைவடைந்தது. நாதஸ்வர மேளம் முழங்க, கோயில் குடைகள் அணிவகுத்துச் செல்ல, நாட்டுப்புற நடனக் கலைஞர்களின் நடனத்தோடு சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருவாரியாக கலந்துகொண்டனர்.

விழா நடந்த கல்யாண மண்டபத்தில் ஆசார்ய ஸ்வாமிகளுக்கு பூர்ணகும்ப மரியாதையை நகர கமிட்டியினர் அளித்தனர்.. பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் தொடக்க உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உச்சநீதிமன்ற நீதிபதி K. ஞானப்ரகாசம் பங்கேற்றார். விழாவில் காஞ்சிபுரம் நகர கமிட்டியின் சார்பில் ஆச்சார்யாளுக்கு செங்கோல் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காஞ்சிபுரத்திலுள்ள பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ ஆசார்யாளின் ஆசியை பெற்றனர். பூஜ்ய ஸ்ரீ ஆச்சார்யாள் அநுக்ரஹபாஷனம் அளித்தார்கள். டாக்டர் சீர்காழி சிவச்சிதம்பரம் அவர்களின் இசை நிகழ்ச்சியோடு விழா நிறைவுற்றது.