பட்டுக்கோட்டை ஜனகல்யான் சார்பில் ஸ்ரீ பெரியவாளின் ஜயந்தி விழாவை முன்னிட்டு நடந்தேறிய நிகழ்ச்சிகள்:
1. 29-8-04 அன்று கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பட்டுக்கோட்டை ஸ்ரீ ஜெயந்திராள் இலவச ஹோமியோ மருத்துவமனையின் சார்பில் 103-வது மாபெரும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம் நடைபெற்றது. பத்து மருத்துவர்கள் அடங்கிய இம்முகாமில் சுமார் 500 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இம்மாதிரி முகாம் கும்பகோணம் நகரில் மட்டும் 8வது தடவையாக நடத்தப்படுகிறது.
மேலும் மருத்துவமனை சார்பில் சேகரிக்கப்பட்ட பழைய உடைகளை இம்முகாமில் கலந்து கொண்ட பல ஏழை மக்கள் பெற்றுக் கொண்டனர்
2. அன்று மாலை பட்டுக்கோட்டை ஸ்ரீ ஜெயந்திராள் இலவச ஹோமியோ மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் விளக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டனர்.
3. அதே நாளில் பட்டுக்கோட்டை சிவன் கோவிலில் 1008 அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது.
4. அதே போன்று தொக்காலிக் காடு என்ற கிராமத்திலும் 1008 அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு நடந்தது.