உலகளாவிய மஹாபாரத மாநாடு டிசம்பர் 24 முதல் 28 வரை நம் பாரததேசம் புண்ணிய பூமி எண்ணற்ற மஹான்களும், ஞானிகளும், ரிஷிகளும் நிறைந்து விளங்கும் தவபூமி இந்நாட்டில் உள்ள ஆலய

உலகளாவிய மஹாபாரத மாநாடு
டிசம்பர் 24 முதல் 28 வரை

நம் பாரததேசம் புண்ணிய பூமி. எண்ணற்ற மஹான்களும், ஞானிகளும், ரிஷிகளும் நிறைந்து விளங்கும் தவபூமி. இந்நாட்டில் உள்ள ஆலயங்கள் ஏராளம். அளவிறந்த அருள்நூல்களும், காவியங்களும் இம் மண்ணில் தோன்றி அன்று முதல் இன்று வரை மக்களின் வாழ்வை வளப்படுத்தியும் நெறிப்படுத்தியும் வருகின்றன.


கஜலஷ்மி - பந்தே ஸ்ரீ - கம்போடியா - 9-ம் நூற்றாண்டு

விஷ்ணு அனந்தசயனம் - வெஸ்டர்ன் மெபோர்ன் ஆலயம்- கம்டபோடியா 11-ம் நூற்றாண்டு

உலகெங்கும் உள்ள ஆன்மிகப்பயிர்களுக்கான ஜீவ ஊற்று இப்பாரத நாட்டில் தான் உள்ளது" என்பது அருளாளர்களின் முடிவு. இதனால்தான் இந்நாட்டின் கலாசாரம் - பண்பாடு, மிகப் பழமை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.


18-ம் நூற்றாண்டின் ஒவியம் - பிரிட்டிஷ் மியூசியம்

அப்ஸரஸ் - கம்போடியா

பாரததேசத்தில் தோன்றிய தெய்வ அருள் நூல்களும், cF நூல்களும் தர்ம சாஸ்திரங்களும், சிறந்த காப்பியங்களும் இந்நாட்டு மக்களுக்குத் தெய்வநெறிகளை - தர்மவழிகளை, cF முறைகளை விளக்கஞ்செய்வதோடு உலகுக்கும் உணர்த்துகின்றன.. மக்கள் வாழ்வு நெறிப்பட இவை முன்னோடிகளாகத் திகழ்கின்றன.

இவற்றுள் இதிஹாசங்கள் என்னும் தனிச்சிறப்பு பெற்றவை, மஹாபாரதமும், இராமாயணமும் ஆகும், இவையிரண்டும், வெறுங் காப்பியங்களாக மட்டுமின்றி, தேசத்தின் கலாசாரத்தை - தர்மத்தை - இசை, சிற்பம் முதலான நுண்கலைகளை - விளக்கும் கண்ணாடியாகவும் விளங்குகின்றன.

மஹாபாரதம் சிறந்த தர்ம சாஸ்தீரம். நீதிகளும் கலைகளும், வாழ்க்கை நெறிகளும் கொண்ட உயர்ந்த ஞானப் பெட்டகம், இதன் சிறப்பினை உலகுக்கு அறிவிக்கும் நோக்கில், ஆங்காங்கு, அவ்வப்போது மாநாடுகள் - கருத்தரங்குகள் பலராலும் நடத்தப்படுகின்றன.

அவ்வழியில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில்.ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள்,ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் ஆகிய அருளாளர்களின் பரிபூர்ண ஆசியுடன் "உலகளாவிய மஹாபாரத மாநாடு" 2003 டிசம்பர் 24முதல் 28 வரை- சென்னையில் நடைபெறவுள்ளது ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் - இசை, நடனம், நாடகம் முதலான கலைகள் - இலக்கியங்கள் ஆகியவற்றில் மஹாபாரதத்தின் பங்கு பற்றிய ஆய்வு இம்மாநாட்டில் இடம் பெறும்.

இந்தியா உட்பட, நேபாளம், திபெத், பங்களாதேஷ், பூடான், மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, முதலான நாடுகளின் சமயத்தலைவர்களும் சமயப்பேரறிஞர்களும், தத்துவ இலக்கிய ஆயவாளர்களும் பிரதிநிதிகளாக இம்மாநாட்டில் பங்கேற்று ஆய்வுரைகள் நிகழ்த்தவுள்ளனர்.

வேத மரபுகள், விவசாயம், தொல்பொருள் ஆய்வு, கலைகள், சிற்பம், வானியல், தர்மசாத்திரங்கள், மொழியியல், சம்ஸ்க்ருதம் மற்றும் வட்டாரமொழிகளின் இலக்கியங்கள், இசை, நடனம், நாடகம், சமயமும், தத்துவமும், சமுதாயத்தில் பெண்கள், குழந்தைகளின் பங்கும், வளர்ச்சியும், கிராமியக் கலைகள் முதலான பல பிரிவுகளில் இம்மாநாட்டில் முக்கியக்கவனம் செலுத்தப்படும்.

இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுரைகள் படிக்கவும், உரைகள் ஆற்றவும் விரும்புவோர், பிரதிநிதிகளாக வருகை தர விரும்புவோர், பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்,

டாக்டர் .இரா.நாகசாமி அவர்கள்அமைப்பாளர் - உலகளாவிய மஹாபாரத மாநாடு
நெ.11, 22வது குறுக்குத்தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை - 600 090.
இந்தியா.
தொலைபேசி - 091 44 24916005
மின்அஞ்சல் - na gas amy@x1web.com or na gas amy@msn.com

ல்லது

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
1, சாலைத் தெரு,
காஞ்சிபுரம் - 631 502
போன்:04112 - 222115
மின் அஞ்சல்: kanchimutt@vsnl.com
இணைய தளம்: www.kamakoti.org

பதிவு படிவம் : Registration Form