டிசம்பர் 8 2003 அன்று ஸ்ரீமடத்தில் கார்த்திகை தீபம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 7-12-03 அன்று திருவண்ணாமலைக்கு விஜயம் செய்து அங்கு நடந்த மஹா தீபத்திருவிழாவில் கலந்து கொண்டார். பல லட்சம் மக்கள் இத் திருவிழாவைக் காணக் கூடியிருந்தனர். தீபத்தை ஒட்டி அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உற்சவங்கள் நடைபெற்றன. சரியாக மாலை 6 மணிக்கு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
8ம் தேதி மாலை ஸ்ரீமடத்தில் தீப பூஜைகள் நடைபெற்றன.