காஞ்சீபுரம் காஞ்சீபுரம் தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது, காஞ்சீ எனவும் பரவலாகப் புகழ் பெற்றது சென்னை நகரத்துக்குத் தெற்

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது, காஞ்சீ எனவும் பரவலாகப் புகழ் பெற்றது. சென்னை நகரத்துக்குத் தெற்கே 74 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த காஞ்சி நகரத்துக்கு வந்து போக வசதியாக பஸ் வசதியும், ரயில் தொடர்பும், ரயில் நிலையமும் உள்ளது. செங்கல்பட்டு - அரக்கோணம் சந்திப்புகளுக்கிடையில் காஞ்சீ ரயில் நிலையம் இருப்பதால் வடமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளும், தெற்கிலிருந்து வடமாநிலம் செல்லும் பயணிகளும், காஞ்சியில் இறங்கிச் செல்ல முடியும். காஞ்சிபுரி அல்லது "ஸத்யவ்ரத க்ஷேத்ர"மெனப்படும் இந்த க்ஷேத்ரம் ஏழு மோக்ஷ புரிகளில் ஒன்றாகும். இங்கு வசித்தாலோ அல்லது மரித்தாலோ மனிதர் பிறப்பு இறப்புப் பிணைப்பிலிருந்து விடுபட்டு மோக்ஷமெய்துவர்.

பரமேச்வரனின் சிறப்புமிக்க வழிபாட்டு ஸ்தலங்கள் பஞ்சபூத ஸ்தலங்கள் எனப்படுகின்றன. அவற்றில் காஞ்சி பிருதிவிக்ஷேத்ரமாகும்.

மார்கண்டேய புராணத்தின் ஒருபாகமான காமாக்ஷி விலாஸத்தில் காஞ்சீபுரம் உலகின் நாபிஸ்தலமாக (நடுபாகமாக) குறிப்பிட்டுள்ளதைப் காண்கிறோம்.

கல்வி-கேள்விகளின் வளர்ச்சிக்கும், உயர்கல்விக் கூட்டங்களுக்கும் மையப்பகுதி என சிறப்பிக்கப்படுகிறது. காஞ்சீ, பல்லவர் காலத்தில், காஞ்சீபுரத்தில் கடிகாஸ்தானம் எனறு உயர்கல்வி நிலயங்கள் இருந்தன என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உலகப்புகழ் வாய்ந்த ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம் சார்பாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயமும் (பல்கலைக்கழகம்) அதனையட்டிய பன்னாட்டு புத்தகாலயமும் இங்கு நம்நாட்டு மொழி கலாச்சாரங்களுக்கு எடுத்துக்காட்டுக் கழகங்களாக விளங்குகின்றன. இந்த பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் ஸமஸ்கிருத மொழியும், இன்னும் பல நவீன கலை விஞ்ஞான பாடங்களும் கற்பிக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம் கோயில் நகரமாகவும் திகழ்கிறது. இங்குள்ள மிக முக்கியமான கோயில்கள் - ஸ்ரீ காமாக்ஷியம்மன் கோவில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீ கைலாஸநாதர் கோயில், ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில், ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் மற்றும் பல கோவில்கள் பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றன.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பாதயாத்திரை முடிந்தபின் காஞ்சியில் தங்கி தனது ஆயுட்கால கடைசீ பாகத்தை தவத்தினால் முத்திரை பதித்தார்கள் என்பது வரலாறு. மேலும் காஞ்சீ நகர சீரமைப்பும், முக்யகோயில்களான ஸ்ரீ காமாக்ஷி கோயில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களை புதுப்பித்தலும், ஸ்ரீ பகவத்பாதர்களைச் சார்ந்திருந்தது என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ பகவத்பாதர்கள் காஞ்சியில் தமக்கான ஸ்ரீ மடத்தை நிறுவி, தமக்குப்பின்னும்

ஆசார்ய பரம்பரை தொடர வேண்டிய ஏற்பாட்டையும் செய்திருந்தார். அந்த ஆச்சார்ய பரம்பரையில் தற்போது 69ஆவது பீடாதிபதியாக பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஸிம்ஹாஸனாபிக்ஷிக்தராய் இருந்து கொண்டு, பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸங்கராச்சார்ய ஸ்வாமிகளை தனது அடுத்த பீடாதிபதிகளாக பெயரிட்டுள்ளார்கள்.