காவேரி நதியின் உற்பத்தியும் அதன் மகிமையும் அ கஸ்திய மஹரிஷி காவேரியைப் பார்த்துக் கூறுகிறார்:- ''ஹே காவேரி, இந்த மலைக்குப் பிரம்மகிரி என்று பெயர் இங்கிருந்

காவேரி நதியின் உற்பத்தியும் அதன் மகிமையும்

கஸ்திய மஹரிஷி காவேரியைப் பார்த்துக் கூறுகிறார்:- ''ஹே காவேரி, இந்த மலைக்குப் பிரம்மகிரி என்று பெயர். இங்கிருந்துதான் c நதிரூபமாகக் கிளம்பப்போகிறாய் என்று முந்தியே பிரம்மா சொல்லியிருக்கிறார். ஆகையால் என் கடத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களுடன் சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டு கொஞ்ச காலம் இருந்தாலும் உன் இஷ்டம் நிறைவேறும்''என்று அவளுக்கு அறிவித்து, அருகிலிருக்கும் சீடர்களைக் கூவி அகஸ்தியர், ''நான் சுவர்ணமுகி நதியில் ஸ்நானம் முதலிய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு சீக்கிரம் வந்து சேருகிறேன். நான் வருகிறவரையில் இதோ இருக்கும் புண்ணிய தீர்த்தங்களால் விளங்கும் கடத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்''என்று உத்தரவிட்டு, நதிக்கு ஸ்நானத்துக்குச் சென்றார். இவ்விதம் சிஷ்யர்களிடம் ஒப்பித்துவிட்டுத் தன் பர்த்தா ஸ்நானத்துக்குச் சென்ற பிறகு காவேரி, 'எப்பொழுது நாம் வெளியில் சென்று லோகங்களை ரக்ஷிக்கப்போகிறோம்?எவ்வளவு காலம் இருந்தாலும் கும்பஸம்பவர் திருப்தியாக அநுமதி அளிக்கமாட்டாரென்று தோன்றுகிறது. இவ்விடம் வருவதற்கு முன், '' ஸஹ்யபர்வதம் போனவுடன் c நதி ரூபமாகத் தக்ஷிணதிக்கை அடையலாம்''என்று சொல்லியிருந்தும், இங்கு வந்தபிறகு சமயத்தை எதிர்பார்க்கும்படி சொல்லுகிறார். நாம் என்ன செய்வது?'என்று யோசித்தாள். ஆனால், 'முன்பு பிரதிஞ்ஞை செய்யப்பட்ட சமயம் வந்துவிட்டது. நாம் கிளம்பிப் போனாலும் தோஷமில்லை'என்று நினைத்துகொண்டு ஒரு முகூர்த்த காலம் தியானத்தில் இருந்தாள்.

இந்தச் சமயத்தில், தயைக்கு இருப்பிடமான சதுர்முகன் லோகத்தை ரக்ஷிக்கவேண்டி, மற்றுமுள்ள தேவர்களுடன் ஸஞ்சாரம் செய்கையில் அநேக புண்ணிய தீர்த்தங்களுடன் பிரகாசிக்கும் பிரம்மகிரி என்ற ஸஹ்ய பர்வதத்தைக் கண்ணுற்றார். பல வகைகளான விருக்ஷங்களாலும் கொடிகளாலும் பழங்களாலும் புஷ்பங்களாலும்மிகவும் சிறப்பாக விளங்கும் தேஜோமயமாக இருக்கும் அந்த மலையில் தளிர்த்த இலைகளோடும் நன்கு பழுத்த பழங்களோடும் ஓங்கி விரிந்து வளர்ந்திருக்கும் நெல்லிமரத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்து, அதனால் இழுக்கப்பட்டவராகச் சமீபத்திற் சென்று, 'இவ்விதம் நம்மை இது செய்வதற்கு யாது காரணம்?'என்று தெரிந்துகொள்ளும் பொருட்டு ஸமாதியில் இருந்து தியானம் செய்தார். உடனே அவரது சித்தத்தில் அந்த நெல்லிமரத்தில் சங்கம் சக்கரம் முதலிய ஆயுதங்களால் அலங்கரிக்கப்பெற்ற நான்கு புஜங்களுடன் ஸ்ரீவிஷ்ணு பரமாத்வும் பிரகாசித்தார். உடனே அந்த நெல்லி மரத்தை ஸாக்ஷ£த் ஸ்ரீநாராயண ஸ்வரூபமாக அறிந்து பத்மஜர் தண்டம்போல் நமஸ்காரம் செய்தார். அந்த க்ஷணமே, ''ஸ்ரீவைகுண்டவாஸியாகிய லக்ஷ்மீபதி ஸ்வரூபமான இந்த மரத்தை நீர் பூஜை செய்யும். அவ்விதம் செய்தால் உம்முடைய ஸ்தானம் உமக்கே நிலைபெறும்''என்று கூறிய அசரீரி வாக்கை கேட்டு, இந்த நெல்லிமரத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கிறதா!' என்று புளகாங்கிதராக:அந்த ஆமலக விருக்ஷத்தைப் பிரதக்ஷிணபூர்வகமாக நமஸ்கரித்து உயர்ந்த புஷ்பங்களாலும், திவ்ய கந்தங்களாலும் நன்கு அர்ச்சித்துத் தம் கடத்திலுள்ள ஸர்வ புண்ணிய தீர்த்த ஸ்வரூபமாக விளங்கும் விரஜாநதியின் தீர்த்தத்தை, காயத்ரீரூபமான சங்கத்தால் மிகுந்த பக்தியுடன் அபிஷேகம் செய்தார்.

அப்பொழுது காவேரியை நோக்கி ஆகாயவாணி உணடாயிற்று-அஃதாவது, ''அம்மா காவேரி, உன் மனோரதம் இப்பொழுதுதான் ஸபலமாகப் போகிறது. c மகோததியை அடைவதற்குச் சமயமும் கிட்டிற்று. உனக்குத் தக்ஷிண கங்கை என்ற பெயர் பிரசித்தமாகப் போகிறது. ருதுக்களுக்குள் முக்தியை அடைவதற்கு மிகவும் முக்கிய காலமான சரத்காலம் நேர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் அற்பமான தர்மத்தைச் செய்தாலும் அளவிறந்த பலனைக் கொடுக்கும். உன் தபோவிசேஷத்தால் துலா மாஸ ஸங்கிரமணமும் வந்துவிட்டது. பரிசுத்தமான இந்த ஸஹ்ய பர்வதத்திலிருக்கும் விஷ்ணு ஸ்வரூபமான ஆமலகத்தின் பாதத்தில் பிரம்மாவால் விரஜாநதி முதலிய புண்ணிய தீர்த்தங்களால் நிரம்பிய தம் கடத்திலிருந்து காயத்ரீ ஸ்வரூபமான சங்கத்தால் அபிஷேகம் செய்யப்பெற்ற தீர்த்தம் விஷ்ணு பாதங்களினின்று ஓடுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தத்துடன் நீயும் சேர்ந்து போனால் லோகத்திற்கு மிகவும் உபகாரம் செய்யலாம்''என்று கூறியது.

இந்த வசனத்தைக் கேட்ட காவேரி அதிக சந்தோஷம் கொண்டு தன்னுடன் கடத்தில் இருந்த புண்ணிய தீர்த்தங்களைப் பார்த்து, ''நீங்கள் ஆகாச வாக்கைக் கேட்டீர்களா?நான விஷ்ணு பாத தீர்த்தத்துடன் தக்ஷிண திக்கை ரக்ஷிப்பதற்காகப் போகிறேன். உங்களுக்கும் திருப்தி இருந்தால் வாருங்கள்''என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு, மற்றத் தீர்த்தங்கள், ''நாங்களும் கூடவே வருகிறோம்''என்று சொல்லவே, ஆனந்தம் உணடாயிற்று.

உடனே பிரம்மாவினால் ஏற்பட்ட நல்ல வாசனையுடன் கூடிய குளிர்ந்த பெருங்காற்று வீசத் தொடங்கிற்று. இந்திரனுடைய கட்டளையினால் மேகங்கள் நான்கு பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டு அற்பமாக வருஷிக்க ஆரம்பித்தன. இந்தச் சமயத்தில் அகஸ்தியரால் தம் கமண்டலுவை ரக்ஷிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சீடர்கள் அனைவரும் பெருங் காற்றுக்கும் மழைக்கும் பயந்து, அந்த இடத்தை விட்டு ஒரு மரத்தடியிற் சென்றுவிட்டார்கள். அப்பொழுது வீசின பெருங்காற்றில் காவேரி முதலிய புண்ணிய தீர்த்தங்களால் நிரம்பிய அகஸ்திய முனியின் கடம் பூமியில் சாய்க்கப்பட்டது. அவ்விதம் சாய்ந்த கடத்திலிருந்து காவேரி, வெகு காலமாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயம் இப்பொழுதுதான் கிடைத்தது என்று, லோகோபகாரத்தில் தனக்கு இயற்கையாக இருக்கும் கருணையால் மிகுந்த உத்ஸாகத்தால் தன்னுடன் இருந்த புண்ணிய தீர்த்தங்களுடனும் பிரம்மாவால் தன் காயத்ரீரூப சங்கத்தால் நெல்லிமர ரூபமாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரண கமலத்தில் அபிஷேகம் செய்யப்பெற்று அதிலிருந்து பெருகி வருகிற விரஜை முதலிய புண்ணிய நதிகளின் தீர்ததத்துடனும் அந்த ஸஹ்ய பர்வதத்திலிருந்து அதிக நுரைகளாலும் குமிழிகளாலும் சுழல்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெற்றவளாகத் தக்ஷிணதிக்கில் சென்றாள்.

ஸஹ்ய பர்வதத்திலிருந்து வெளியில் வர ஆரம்பித்ததனால் 'ஸஹ்யஜா'என்ற காரணப்பெயரும் இவளுக்கு வாய்த்தது. ஸ்நானத்துக்குப் போன அகஸ்தியர் சீக்கிரம் திரும்பிவந்து தமது கடத்தைப் பார்த்தபோது அது சாய்ந்து காவேரி வெளியில் போயிருப்பதையும் கண்டு அதிக கோபங்கொண்டு, தம் ஸமீபத்தில் வந்து மிகுந்த பயத்துடன் நின்ற சீடர்களைப் பார்த்து, ''நான் வருகிற பரியந்தம் காவேரியை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னபடி சரியாக நீங்கள் ஏன் நடத்தவில்லை?''என்று கேட்டார். அவர்கள் நமது குருவின் சாபத்திற்கு உள்ளாகாமலிருக்க வேண்டுமே என்ற கவலைகொண்டு, நடந்ததை அறிவித்து, ஓர் பெருங் காற்றால் இவ்விதம் நேர்ந்தததென்றும் கூறினர். பிறகு, ''நாங்களும் ஓடிப்போய் எங்கள் குரு வருகிற வரையில் இருந்துவிட்டுப் பிறகுதான் போகவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அபராதிகளாகி விடுவோம்''என்று பலவாறாகப் பிரார்த்தித்தபோது காவேரி கூறியதாவது-''இவ்விடம் வருவதற்கு முந்தியே பிரம்மாவினாலும் இவராலும் இங்கு வந்தவுடன் இவ்விதம் போகலாமென்று என் அபிப்பிராயத்தை அநுஸரித்து அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மஹரிஷியின் அநுமதியின்பேரில்தான் நான் போகிறேன். இது அவருக்கும் நன்றாகத் தெரியும். நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்களுக்குக் குருவால் யாதொரு சி¬க்ஷயும் ஏற்படாது''என்று காவேரியம்மன் சொன்ன வார்த்தைகளை உண்மையாக நம்பித் தாங்கள் திரும்பி வந்துவிட்டதைச் சிஷ்யர்கள் தெரிவித்தார்கள்.

உடனே முனிவர் கோபம் தணிந்து, சந்தோஷமாகக் காவேரியைப் பார்க்க வேண்டுமென்று வேகமாய்ச் சென்று அவளருகிற் போனவுடன், பக்தி விசுவாசத்துடன் அவள் வந்து நின்றதைக் கண்டு, ''ஏன் நான் இல்லாத சமயத்தில் புறப்பட்டு வந்தாய்?''என்று வினவினார். ''நான் முந்தியே தங்களிடமிருந்தும் பிரம்மாவினிமிருந்தும் வாங்கியிருக்கும் சமமதியைக் கொண்டு விஷ்ணு ஸ்வரூபமான நெல்லி மரத்தின் அடியிலிருந்து கிளம்பும் விரஜை முதலிய புண்ணிய நதியின் சேர்க்கையும் நோந்தபடியால் சீக்கரமாக லோகோபகாரம் செய்ய வேண்டுமென்ற என் கோரிக்ககையை நிறைவேற்ற வேண்டி, முன் அறிவித்திருப்பதே போதுமென்ற எண்ணத்துடன் வந்தேனேயன்றி வேறு வித்தியாசமில்லை''என்று காவேரி சொன்ன வார்த்தையைக் கேட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அவளைப் பலவாறாகப் போற்றி, ''உன்னால் தக்ஷிண தேசத்திற்கு ஏற்பட்ட பாக்கியத்தை யாரால் தான் கூறமுடியும்?''என்று இத்தேசத்தைப்பற்றியும் புகழ்ந்து பேசி, பிறகு காவேரி விஷயமாகத் தம் உள்ளத்திலிருக்கும் ரகசியமான சமாசாரத்தையும் அவளுக்கு அறிவிக்கும் வண்ணம் அவளை ஸம்போதனம் செய்து, ''பின்னும் அதிக ரகசியமான ஓர் ஸமாசாரத்தையும் உனக்குத் தெரிவிக்கிறேன், கேள்''என்று கூறத் தொடங்கினார்

மஹாரஹஸ்யம் கிஞ்சாத்ர ஷ்ருணுஷ்வாத்யத்புதம் ஸுபே I

ப்ரவீமி திவ்யத்ருஷ்ட்யாத்ய ஸர்வசாஸ்த்ரேஷ§ நிஸ்சிதம் II

மஹாபாதகிநாம் பாபம் மோ சயந்த்ய க்ஷணேந U I

கங்காதிகா மஹாநத்யஸ் தீர்த்தாநி ச மஹாந்திச II

மலீக்ருதாஸ்ச தத்பாபைரஸக்ததாஸ் தத்விமோசநே I

ஸோசயந்த்ய பரம் தேவம் யாந்தி லோகபிதாமஹம் II

தாஸாம் விஸுத்தயே ப்ரஹ்மா ஸபாயாம் முநிபி ஸஹ I

ஸம்யக் விசார்ய ஸாஸ்த்ரேஷ§ வேதேஷ§ ச புந புந II

ஹரிணா ச தத ப்ரோக்தம் ப்ராயஸுசித்தம் விதாஸ்யதா I

ஸ்நாஸ்யந்து ஸஹ்யதாத்ர்யக்ரே காவேர்யாம் தௌலிஸங்கமே II

''யோகதிருஷ்டியால் ஸமஸ்த சாஸ்திரங்களாலும் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தை அறிந்து சொல்லுகிறேன். எவ்வித மகாபாவிகளுடைய பாவங்களையும் க்ஷணகாலத்தில் நிவிருத்தி செய்துகொண்டுவரும் கங்கை முதலிய நதிகளும் மற்றுமுள்ள புண்ணிய தீர்த்தங்களும் தங்களிடத்தில் அடிக்கடி வந்துசேரும் பாவங்களை விலக்கத் தங்களுக்குச் சக்தி இல்லாததனால் துக்கமடைந்து, இந்தப் பாவத்தைப் போக்கடிக்கவேண்டிச் சதுர்முகனைச் சரணமடைந்தன. இவற்றின் பாவத்தை எவ்விதம் விலக்கலாமென்று தீர்மானிக்கவேண்டித் தன்னுடைய ஸபையில் முனிகளுடன் சாஸ்திரார்த்தங்களையும் வேதார்த்தங்களையும் நன்கு விசாரித்து, முடிவில் விஷ்ணு பரமாத்மாவால் ஸஹ்யபர்வதத்தில் விளங்கும் நெல்லிமரத்திற்கு முன்னிலையில் துலாஸங்கிரமண காலத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தால் இவர்களின் பாவம் நீங்குமென்று, கங்கை முதலிய தீர்த்தங்களின் பாவங்கள் கூட உன் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதனால் விலகிவிடுமென்று பிராயச்சித்தமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் உன்னுடைய புண்ணிய தீர்த்த மஹிமையையும் பெருமையையும் இவ்விதமென்று யாரால் கூற முடியும்?''என்று நிரூபித்து, இவ்வித மஹிமையால் பிரகாசிக்கிறவளாயும், லோகோபகாரத்தில் அதிக ஆவல் கொண்ட c தக்ஷிண தேசத்தில் விளங்கும் பிராணிகளுக்கும் ஐஸ்வர்யம் க்ஷேமம் விஜயம் முதலிய சிரேயஸ்ஸையும் உண்டுபண்ணும்பொருட்டு யாதோர் இடையூறுமின்றிச் சுகமாகப் போ என்று என்னாலும் அநுமதி கொடுக்கப்பட்டாய்.

விபூத்யை தாக்ஷிணாத்யாநாம் க்ஷேமாய விஜயாய சமி

மயா சைவாப்யநுஜ்ஞாதா கச்ச தேவி யதாஸுகம்மிமி

அகஸ்திய முனிவர் இப்படி காவேரியை ஆசீர்வதித்துத் தமது ஆசிரமத்துக்கு ஏகினார். பிறகு காவேரி அகஸ்திய மஹரிஷியின் பிரியமான ஆசீர்வாதத்தால் அதிக உத்ஸாகத்துடன் கிராமம் கிராமமாகச் சமுத்திரம் வரையிற் சென்று, உற்பத்தி ஸ்தானம் முதல் சமுத்திர சங்கமம் வரையில் தன் தீரங்களிலுள்ளவர்களையும், தேசாந்தரங்களிலிருந்து வந்து ஸ்நானம் முதலியவற்றைச் செய்யும் எல்லாப் பிராணிகளையும் நன்கு பரிசுத்தம் செய்துவருகிறாள். ஆகையால் இவ்வுலகத்தில் பற்பல தேசங்கள் இருந்தாலும் அவற்றுக்குச் செல்ல விருப்பமின்றி நம் முன்னோர்கள் செய்த புண்ணிய கர்மத்தாலோ நம்போன்ற ஜனங்களின் அதிர்ஷ்ட விசேஷத்தாலோ அல்லது காவேரிக்கு இயற்கையில் இந்தத் தேசத்திலுண்டான கருணையாலோ யாதொரு பயனையும் எதிர்பாராமல் அற்பமேனும் சிரமமின்றி நம்மையும் நம் பித்ருக்களையும் நமது சந்ததிகளையும் மற்றுமுள்ள பிராணிகளையும் கிருதார்த்தர்களாகச் செய்யவேண்டுமெனக் கருதியே இந்தத் தென்திசையை அலங்கரிக்கிறாள் என்பது திண்ணம்.

இவ்விதம் இருக்கும் கருணைக்கடலான காவேரி தேவியின் உற்பத்திக் கிரமத்தையும், அவளது வைபவத்தையும், லோகரக்ஷணத்தில் அவளுக்கு இருக்கும் HgF விசேஷத்தையும், கலியில் முக்திபெற இவளைத் தவிர வேறு சுலபமான நெறி கிடைப்பது அரிது என்பதையும் நன்கு உணர்ந்து அவரவர் ஒவ்வொரு தினமும் சாஸ்திரங்களில் கூறியவாறு காவேரியை அடைந்து ஸ்நானம் பானம் தர்ப்பணம் ஜபம் முதலிய ஸத் கர்மானுஷ்டானங்களைச் செய்து, சம்சாரத்திலிருந்து விலகி மோக்ஷமென்ற பரம புருஷார்த்தத்தை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.