Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 12 துண்டிராஜர் ஒளிர்மணிமுடித்துராசதனரன்பாவென்றுமுலைவறும்வரமதுற்றிவ் வுலகெலாந்தன்னொருகுடைக்கீழ்தாக்கிமாலா

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

12. துண்டிராஜர்

ஒளிர்மணிமுடித்துராசதனரன்பாவென்றுமுலைவறும்வரமதுற்றிவ்

வுலகெலாந்தன்னொருகுடைக்கீழ்தாக்கிமாலாதியும்பரையலைத்து

நளிர்புனற்றண்காசிமேவியிறைகேதாரண்ணவாழ்நாளினம்மை

நன்னுதலினின்றைமாமுகராயுதித்தைம்பதோடைந்தினணுகுருக்கொண்

டெளிதினடர்படையெலாம்நூறிவிச்சுவவுருவினேத்தலானைக்கழற்கீ

ழிட்டுடுண்டிப்பெயர்வகித்ததாஅன்றயன்வரத்தீசனோர்கற்பத்தினவ்

வளமைபெறுமவிமுத்தம்விட்டுமந்தரமடையவாழ்திவோதாதன்வீடு

மருவநகரரனமரவெழிறுண்டிராஜராய்வருபிரணவச்சோதியே.

இதன் சரித்திர சங்கிரகம்

* இந்தகற்பத்திற்கு முன்-பதமமென்னு மோர்கற்பமுண்டு அதில் சுவாயம்பு மனுவானவர் பிறந்து நெடுங்கால மரசாட்சி செய்திறந்த பின்பு-அறுபதாயிர வருட பரியந்தம்-தக்கவரசும்-மழையுமில்லாமல் உலகுமெங்குங் காடாகக்கண்ட பிரமன் இரங்கி இவ்வுலகத்தைக் காக்க வோரரசனை நியமிக்க வேண்டுமென்றெண்ணி தக்கவர்களைத் தேடுகையில்-காசியில் அரசவமிசத்திற் பிறந்த இரிபுஞ்சயன் தபஞ்செய்திருக்கக்கண்டு இதற்கிவன்றக்கவனென்றெண்ணி யவனிடஞ் சென்று தமது கருத்தை வெளியிட்டு- உலகரசாட்சியையும்-பலவளப்பங்களையும் திவோதாச னென்னும் பெயரையுங் கொடுத்து மகுடாபிஷேகஞ் செய்ய-அத்திவோதாசன் தேவர்கள் காசிப்பதியை விட்டாலொழிய தானரசாட்சிக்குடன் படேனென்று கூற-கேட்ட பிரமனும்-அவ்வாறே செய்யுதுமென்று ஒப்புக் கொண்டு சிவபெருமானிடஞ் சென்ற சமயத்தில்-அக்கடவுள் உமாதேவி ஸமேதராக இடபவாகனத்தின் மீதெழுந்தருளி சமஸ்த தேவர்களடும் தம்மைத் தாங்க வேண்டுமென்று நெடுங்காலம் தவஞ்செய்திருந்த மந்தரபர்வதத்திற் கெழுந்தருளலும்-அதுபோதம்மந்தரகிரி எதிர் கொண்டு பணிந்து மிகவும் துதி செய்து-தன்னிடத்திலும்-காசித்தலத்தையப்ப

வெழுந்தருளி சகலருக்கும் வேண்டிய வரங்களை அனுக்கிரகஞ் செய்து கொண்டு தனக்குப் பெருமையையும்-மகிமையையும் கிருபைசெய்ய வேண்டுமென்று பிரார்த்தித்த தருணத்தில்-பிரமனும் தான் திவோதாசனுக்குக் கொடுத்த வரத்தை விண்ணப்பித்து-குறையிரக்க-பெருமானும் திருவுளமிரங்கி அம்மந்தர பர்வதத்திற்றானே வசித்திருந்தாராக-அது காலையில்-சிவபெரான் அக்கிரியருகிற்றவஞ் செய்து கொண்டிருந்த மரீசி முனிவர்க்கு தரிசனக் தந்துனுக்கு வேண்டிய வரத்தினைக் கேளென்று திருவாய் மலர்ந்தனர். அதற்கு கம்பத்தியும் சிவலோகவாசமுந் தரவேண்டுமென்று பிரார்த்தித்தனர். உடனே பரம சிவகடாக்ஷத்தால் அவரெண்ணத்தின்படி ஓர் விமானம் வர, அதில் அம்முனிவர் ஆரோகணித்துச் சிவலோகம் போய்ச் சேர்ந்து வாழ்ந்திருந்தனர். அதன் பின்பு-திவோதாசன் ஆதிசேடன் மகளாகிய அனங்கமோகினியை மணந்து-தேவர்கள் கற்பக முதலியன பலவளப்பங்களைக் கொடுத்து குறைவறுக்க-எவ்வகைப்பட்ட உயிர்களும்-நரை-திரை-பிணி-மூப்பு சாக்காடின்றி-அறம் பொருள்-இன்பம் வீடென்னு நால்வகைப் பொருளையு மொருங்குபெற்று நிச்சிதையராய் வாழும்படி காசிப்பதியில் செங்கோல் செலுத்தி வருநாளில்-தேவர்கள் எண்பதாயிர வருடவரையிலக் காசி நகரைப்பிரிந்ததினால் மனவருத்தமுற்று-திவோதாசனை அழிக்க அவனிடத்துயாதொரு கொடுங்கோலும் குற்றமில்லா திருப்பதாலு மனநொந்து-அவனைச் செங்கோல் ஒழுக்கத்தினின்றுந் தவறு விக்கும்படி-மழை-காற்று-தீ-முதலியவற்றை அவனரசிலுபயோகிக்க வொட்டாமற் தடுக்க கண்ட அவ்வரசன் தானதுவதுவாயிருந்துபகரித்து-எவ்வுயிர்களையும் பாதுகாத்து வருகையில்-யோகினி-சூரியன்-பிரமன்-முதலானவர்கள் சென்று வஞ்சக போதனை செய்தும்-அவன் தன்னொழுக்கத்தில் சற்றுந் தவறாமைகண்டு-அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடத்தில் விண்ணப்பிக்க-அவர் துண்டிராஜரை அனுப்பி அருள-அங்குற்றி-யோர்பால ஜோதிடராய்ச் சென்று-அந்நகரவாசிகளஞ்சி புறம் போடும்படி சிலவுற்பாத அற்புதங்களைக் காட்டி-ஜோதிடஞ் சொல்லித்திரிய-அரசன் கேள்விப்பட்டு வரவழைக்க-ஸ்வாமிகளுஞ் சென்று-கண்டவுடன் மனங்குழையும் விதமாகத் தரிசனந் தந்த சமயத்தில் அவன் உபசரித்துபற்றற்ற சிந்தையனாய்-அரசாட்சியில் தனக்குண்டாயிருக்கும் வெறுப்பைத் தெரிவித்து-இவ்வரசாட்சி தன்னைவிட்டு நீங்குங் காலம் யாதென்று வினாவ-கேட்ட பெருமானும்-பதினேழாநாளிவிடத்தோர் வேதியர் வருவாரவரை வினவி-யவர் மொழிப்படி நடந்து கொள்ளக் கடவையென்று திருவாய் மலர்ந்தருளி அந்தர்த்தானமானபின் விண்டுவானவர் லக்ஷ்மி ஸமேதராய்-பெனத்தாசிரியக் கோலமாகச் சென்று-அந்நகரவாசிகளாகிய-ஆடவர்களுக்கும் மாதர்களுக்கும்-அறவொழுக்கங்களும் கற்பு ஒழுக்கங்களுமொருங்குகெட-துற்போதனைகள் செய்து பிரஷ்டராக்கிப்பின்பரசனிடத்திற்குச் செல்ல அரசன் வந்தவர் விஷ்ணு என்றும் -அவர் வருகையின் காரணமும் தெரிந்து கொண்டவனா யவ்விண்டுவை உபசரித்து விஸ்வரூப தரிசனமும் பெற்று அவர் கற்பித்த படியே-தன்னரசை குமாரனிடத்தொப்புவித்து-பொக்கசதிரவியத்தை சிவபணி விடைகளுக்கு உபயோகித்து-சிவலாயப் பிரதிஷ்டை செய்து-தியானபரனாய் பூஜித்திருந்த அச்சிவலிங்கத்- திலயிக்கியமாயினன்-சிவபெருமானு மந்தரகிரியை விட்டு-மஹா தேவியாரொடும் சமஸ்த தேவர்கள் புடைசூழ்க் காசிக்ஷேத்திரத்திற் கெழுந்தருளி-சர்வான் மாக்களு முய்யும்படி-தாரகமந்திரானுக்கிரகஞ் செய்து வீற்றிருந்தருளினர்.

***********************************************************************

* இதற்குமுன்னான-உடுண்டி விநாயகர் செய்யுளிற் சேர்பாநிற்கு மிச்சரித்திரம்-சொரூபான்வயத்திரிபின் பிரகாரம் படத்துடனிங்ஙனம் வேறான தெனத்தெளிக. htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it