Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 9 மகவாகவந்தமயூரேசர் ஏலவார்குழலம்மைதிரிசந்தியென்றிலங்கிடுகேத்திரத்தமர்ந்தா றிரண்டாண்டுதவமுஞற்றிடவெண்ணுக

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

9. மகவாகவந்தமயூரேசர்

ஏலவார்குழலம்மைதிரிசந்தியென்றிலங்கிடுகேத்திரத்தமர்ந்தா

றிரண்டாண்டுதவமுஞற்றிடவெண்ணுகோலத்தினின்பமகவாய்வந்தவன்

பாலூட்டவுண்டதிவிசித்ரவிளையாடல்பலபனவச்சிறாரொடாடிப்

பணிகாற்கியர்க்ககுறுதியுரைசெய்துகாசிபர்பரிந்துவரநல்கிநெடிதாய்

மாலுநான்முகனோடுமிந்திரன்றன்னையும்வன்சிறையிலிட்டசிந்து

மாநகரடைந்தவன்படையைக்கணங்களான்வாட்டிவெம்பரசுவீசி

கோலமாரவன்மார்பிடந்தாள்வினுதையருள்குழகார்மயூரமூர்ந்த

கொள்கையின்மயூரேசரெனவுலகுவாழ்த்தகுலாம்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

மைதல தேயத்தைச் சார்ந்த-கண்டக நகரத்தரசனான-சக்கிரபாணி யென்பவன்-மனைவியாகிய உக்கிரை யென்பவளோடு கூடிவாழ்கையில்-பிறந்தபிள்ளைகள் யாவும்-ஒன்றேனும் ஜீவித்திராமல் உடனைக் குடனே இறந்து விடுவதை யோசித்து மனதிவருத்தமுற்றிருக்கையில்-அவண் வந்த செனனக ரிஷியை வணங்கி-தனது குறைகளை முறையிடலும்-அது கேட்டம்முனிவர்-சூருயனுடைய விரதத்தை யோர்மாதவரையிலுபாசிக்கும் படி அதற்குரிய விதியையுங்கூறி திருமந்திரங்களையு முபதேசிக்க-அவ்வாறே யத்தம்பதிகளனுட்டித்து வருகையில்-சூரிய பகவான்-இருபத்தொன்பதாநாள்-அவ்வரசனுக் கொண்டவ்வரசியைப் புணர-அவள் வயிற்றினின்றும்-முக்கண்ணும்-சிவந்த ஜடையும்-சக்கரமும் சூலமுங் கொண்டோர் புத்திரனுதித்து சிந்துவெனும் பெயராய் வளர்கையில்-அவன் இளம்பருவத்திற்றானே-அசாத்தியமான கருமங்களை யெலலாஞ் செய்யக் கண்ட சுக்கிரனால்-வேண்டும் வரங்களைப் பெறத்தக்கதான மேலான மந்திரங்களை யுபதேசிக்கப்பெற்று பரமசிவனை நோக்கி இரண்டாயிர வருட மரிய தவத்தைச் செய்ததன் மேல்-கயிலாசபதி பிரத்தியக்ஷமாகி-விஷ்ணு முதலிய தேவர்களெல்லாம் வணங்கவும்-மூன்று உலகத்தினு அவன் அரசு செலுத்தவும் வரங்கொடுத்தேழுந்தருளினர்-பின்பு சிந்துவானவன்-மூன்று உலகத்தையும் வென்று-தேவர்களைச் சிறையிலிட்டு-உற்கை என்பவளை மணந்து-தர்மன்-அதர்மனெனு மிரண்டு பிள்ளைகளைப் பெற்று-கொடுங்கோல் செலுத்தி வருநாளில்-சிறையிலகப்படு வருந்துகின்ற தேவர்கள்-பிரகற்பதி கூறின விதமாக-கணேசரைத் தியானித்துப் பிரார்த்திக்க-கணேசரும்-அவ்வர்கள் மனத்தின்கண் தரிசனம் தந்து-உமாதேவியாரிடத்திற் றிருவவதாரஞ்செய் தந்த சிந்து என்பவனை சங்கரிப்பதாகத் திருவாய்மலர்ந்து கரந்தருளினர்-அதைக் கேட்ட தேவர்களெல்லாம் களிப்படைந்தார்கள். அந்த தருணத்தில் திரிசந்தி க்ஷேத்திர வாசிகளாகிய-கெனதமர் முதலிய முனிவர்கள்-அச்சிந்துவிற்குப் பயந்து வேற்றுருக்கொண்டு-சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்ய-ஸ்வாமிகள்-மஹாதேவியாரோடு எழுந்தருளி தரிசனை கொடுத்தருளும் உடனேயம் முனிவர்கள் கர்த்தனை வணங்கி சிந்துவைச் சங்கரிக்கவும்-அதுவரையில் தங்களிடத்தி லெழுந்தருளியிருக்கவுமாக விண்ணப்பிக்க-பெருமானுமிரங்கி-யவ்வாறே ய்வ்விடத்தமைத்ததோர் இரத்தினமண்டபத்தி லெழுந்தருளி யோகநிலையி லிருக்கையில்-பிராட்டிகண்டு சந்தேகங் கொண்டவராய்-தம்பெருமானை நோக்கி-தேவரீர் யோகநிலைக்கு இலக்கியப் பொருளாவார் யாவரென்று வினவ-பெருமான் கேட்டு-பெண்ணே- இனிதேவர்களுடைய சிறையை நீக்கும் பொருட்டு உம்மிடத்திற் புத்திரனாக-திருவவதாரஞ் செய்தருளப் போகின்ற பிரணவப் பொருளாகிய கணபதிகளே நமதிலக்கியப் பொருள்-அங்குற்றியை நீரும் தரிசிக்க வேண்டில் நம்முரையை கடைப்பிடித்து வழிபடுவீராக வென்று-ஏகாக்கரத்தை யுபதேசித்தருள-அம்மையு அவ்வாறே அன்போடு உபாசிக்கையில்-கணேசரும் பிரசன்னமாய் தரிசனை கொடுத்தருளி-தாமவர்க்குத் திருக்குமாரராக வந்தருளுதாய் திருவாய் மலர்ந்து மறைந்தருளினர்-பின்பு விநாயகசதுர்த்தி வரக்கண்டு அம்மையாரும்-அன்போடு விடாப்பற்றினராய்-மிருத்திகையினாற் சமைத்து பூஜித்த மூர்த்தத்தினின்றும்-சோமவாரம்-விசாகநக்ஷத்திரம்-சிங்கவோரையுங் கூடிய சுபமுகூர்த்தத்தில்-கணேசப்பிரான் ஜோதிவடிவமா யெழுந்தருள-அம்மை தரிசிக்க வங்காற்றதவராக-அங்ஙனே-விஸ்வரூபங் கொண்டருள-பிராட்டி கண்டஞ்சி-பிரார்த்தித்த வண்ணமே-மூன்று திருக்கண்களும்-ஆறுதிருக்கரங்களும்-முத்து மாலையைத் தரித்தமார்பும்-தவளத்திருமேனியும் விளங்க பாலமூர்த்தமாயெழுந்தருளலும்-அது போதில் உமாதேவியும் களித்தெடுத்துமடிமீதிருத்தி-திருமுலைப்பால் கொடுத்தருள நிவேதனங் கொண்டருளி-கெனதமராதியர்கள் வந்திக்க விருக்கையில்-ஆங்காங்கு பலமுனிவர்களும்-மரீசி

முனிவரா லுபதேசிக்கப்பெற்ற கணபதி கவசமஹா மந்திர தியானத்தாற்-றுன்பம் நீங்கி சுகித்திருந்தனர்-ஓர் நாள்-உமாதேவியார் சிவபூஜை செய்கையில்-பால் உண்ணுமாறு கேட்டருள-அவர் மறுத்தாராக-அங்ஙனே அவரது பாவனாமூர்த்திவடிவமாக நின்று அஞ்சுவித்தனுக்கிரகித்தும்-முனிவர்கள் தவச்சாலை தோறுந் திரிந்து-அம்முனி பத்தினியரஞ்ச-பலசிறுகுறும்புகளைச் செய்து அருளி-அவர்கள் அர்ச்சனை ஏற்றும்-விஸ்வ- கர்மன்-காணிக்கையாக சன்னிதிக்கண் வைத்த பாசம்-அங்குசம்-பரசு-தாமரையைத் தரித்தருளியும்-காற்கிய முனிவர்க்கு ஞானோபதேசம் செய்தும்-காசிபர்-அதிதிக்கு அனுக்கிரகித்தும்-வினதை பயந்த முட்டையை நகத்தினாற்கீறி-வெளிவந்த மயின் மீதாரோகணித்து மயூரேசரெனு நாமம் பெற்றும்-அவ்வினதை பிரார்த்தித்தபடி-அவள் புத்திரர்களைச் சிறைமீட்டதன்றியும், திருவவதாரதினத்திற் றன்னகரத்திலுண்டான உற்பாதங்களைக் கண்டஞ்சிய சிந்துராஜன் அம்மூலத்தை அறிய வேண்டி அனுப்பின தூதர்கள் திரிபுவனங்களினுஞ் சென்று நாடியும்-யாதொன்றுந் தேற்றாதவர்களாகி-கடைமுறை -திரிசந்திக்ஷேத்திரத்தில் வந்து, பெருமான் திருவவதார வைபவங்களையும் மகிமைகளையும் கண்டும் கேட்டுமுணர்ந்தளவில்-அவர்கள் அற்புதமு மச்சமுமடைந்து ஓடோடி தங்களரசனுக்குத் தெரிவிக்க-அவன் கவலை கொண்டு மயங்குகையில்-அவனே உன்னைக் கொல்வானென்று அசரீரி கூறக் கேட்டஞ்சி-இப்பகையை இச்சிறுபோதே களையவேண்டுமென் றெண்ணங் கொண்ட சிந்துராஜனால்- (அப்பால விநாயகர் ஜனித்தது முதற் பத்தாம்வயதளவினும்) ஏவின அசுரர்கள் யாவரையும் மீளவிடாமல் பார்வையாலும்-நெட்டுயிர்ப்பாலும்-திருவடியாலும்-திருக்கைகளாலும்-படைகளாலும்-இன்னும் பலவாற்றானும் சங்கரித்தருளியும்-மற்றவ் வசுரர்களாகன் மாய்ந்த தமது தோழர்களாகிய முனிச்சிற்றார்களை மீட்டு முயிர்ப்பித்தருளியும்-இவ்வாறு பெருமானடாத்திவரும் அனந்தலீலாவினோத் திருவிளையாடல்களை அது வரையிற்சற்றும் தெரிந்து கொள்ளாதவனோயேக்கமுற்றிருந்த சிந்துவானவன்-முடிவில் அனுப்பி-காதறைமூக்கறையாகப்- பட்டு மீண்ட-ஊர்த்த கஜனுடையமுறையையும்-அவனை அவமானப்படுத்தினதையும் கண்டு-மிகவும் கோபமேலிட்டவனா அப்பொழுதே பன்னிரண்டக்குரோணி சேனைகளுடன் கனலாசுரனை ஏவ-அவனையும்-அச்சேனைகளையும் சூலத்தான் மாய்த்தருளக்கண்ட சிந்துராஜன்-சூரியன்-சந்திரன்-அக்கினி-வருணன்-வாயு முதலிய உலகபாலகர்களைத்-தத்தந் தொழின்முறை செலுத்தமாற்றடுக்க-பெருமானவற்றைத் தாமே தமதருளாற் செலுத்தி-பின் பூதப்படைகளுடன்-சுப்பிரமணியபாரதி-பதினேழு படைவீரர்களோடு-முனிச்சிறார்களும் புடை சூழ-இராதாரூடராய்ப் போர்க்கோலங் கொண்டு கண்டக நகரத்தை நோக்கிச் செல்கையில்-வழியிடையிலெதிர்த்த இலக்ஷம் அசுரர்களையுங் கொன்று-சிந்தவினிடத்தில்-ஒற்றாக நந்தியை ஏவ அவர் சென்று-கூறிய புத்தியைக் கேளாமற் கோபிக்க-அது போதத்திரு நந்தி அவனையும் அவன் சபையையும் நெட்டுயிர்ப்பாலுரப்பியலைத்தருளி மீள-பின்னர் பூத மன்னவனான புட்பதந்தனால் கோட்டையையும் அதற்குக் காவலர் கவிருந்த நாற்பது கோடி வீரர்களையும் அதப்படுத்தி வித்ததன் மேல் அச்சிந்து ராஜன்-பதினாலாயிர வெள்ளம் சேனைகளுடன் வெளிப்பட்டு போர்க்கு வர-பெருமானும் தமது படைவீரரையும் சேனைகளையும் அவன்படைமீதில் வகுத்துச் செலுத்தி தாம் மயூராரூடராய் சிந்துவோடெதிர்த்து-மூன்று நாள் பரியந்தம்-முதற்பெரும்போராற்றி-சேனைமுற்றுந் தொடைத்து அவன் கீரிடத்தைத் தகர்த்து-செவிகள் சின்னபின்னப்படக் கொய்த்தன் மேல்-அவன் நாணமும் துன்பமு மேலிட்டவனாய் முக்காட்டிக் கொண்டு தன்னகரிற் சென்று-துக்கமயக்கமுற்றிருக்கும் போது-அவனை யுத்தத்திற்கு வரச்செய்விக்கும் நோக்காயேவின-பிருங்கி முனிவரால்-அவன் நகரம்-கோட்டை-அரண்மனை முதலியவற்றை அழித்து-அவன் மனைவி சிகையை அவன் காண அறுத்து-அவனோடு போரிட்டு-மகுடம் கீழ் வீழவுதைத்து-மீளச்செய்வித்தபின் மறுநாள்

அச்சிந்துவானவன் தனியனாய்ப் போர்க்கு வந்து-தன்னுடன் பிறந்த-சக்கரப்படை- சூலப்படையைப் பெருமான் மீது ஏவ-அவற்றைப் பெருமான் பரசாயுதத்தாற் அகர்த்து-அவனை சங்கரித்தருளினார்-பின்பு வீரபத்திரர்-அவனாற் சிறைப்பட்டிருந்த தேவர்களை விடுவித்து சன்னிதிக்கண்ணேவிட-அவர்கட்கனுக்கிரகித்தருளி-இது செய்தி உணர்ந்து சிந்துவின் பிதாவான சக்கிரபாணிராஜன் சன்னிதியையடைந்து-அபராதத்தை மன்னிக்கும்படி பலவாகத்துதித்தான பின் பிரார்த்தித்தவாறு-அக்கண்டக நகரத்தை அடைந்து அவனர்ச்சனையை ஏற்று மீண்டு திரிசந்திக்ஷேத்திர மடைந்த சின்னாட்பின் தமது மயூரத்தை முருகக்கடவுளுக்கு நல்கி-முனிச்சிறார்களுடன் தமதுலகுக்கெழுந்தருளி அவ்விடத்தில் ஆன்மகோடிகளுக்குப் பேரருள் வழங்கியிருந்தனர்.

***********************************************************************

htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it