விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் கணேசர் உளற்றமார்தவபலத்தாற்பலியெனுந்த்ரிபுரனும்பர்துயருறவாட்டலா லுற்றபதம்விட்டவர்களிமயத்தினெடுநாளளித்த

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

கணேசர்

உளற்றமார்தவபலத்தாற்பலியெனுந்த்ரிபுரனும்பர்துயருறவாட்டலா

லுற்றபதம்விட்டவர்களிமயத்தினெடுநாளளித்திடருழந்துமிகவும்

போற்றியைங்கரவருளெனக்கலாதரராய்ப்பொருந்துதானவனேறீஇப்

புரிசைடையர்பூஜிக்குமணிமூர்த்தமதையவன்பொன்றுசூழ்ச்சியின்வேண்டலாய்ச்

சாற்றவங்வனும்வெம்போர்செயக்கைலையச்சாரவதுகண்டபரமன்

றனியோகுபுரியவர்நுதல்வந்தொர்மனுவினைத்தழையன்பினோடுணர்த்தி

யாற்றல்சாலவ்வவுணனனிகத்தொடுழல்புரமுமட்டருளுவித்துவானோ

ரவலங்களைந்தைமுகமருவுங்கணேசராயவிர்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

திரிபுரனெனும் பலியவுணனுக்கஞ்சிய தேவர்கள் கூடி நெடுநாள் பிரார்த்தித்ததன் மேல்-பிறை- யணிந்த சொர்ணகிரீடமும்-நவரத்ன குண்டலமும்-புஜ- கவசமும்-அரைஞாணும்-மருப்பிற் சுற்றியிருக்கின்ற துதிக்கையும்-பாசம்-அங்குசம்-மழு-தாமரைப்பூ வென்னு மிவைகளை தரித்திருக்கின்ற நான்கு திருக்கரமும்-பேரொளிவீசும் திருமேனியுமான கோலத்துடன் அவர்கட்குப் பிரத்தியக்ஷமாகி-அபயாஸ்தம் தந்து மீண்ட விநாயகக் கடவுள்-அவ்வசுரனிடத்தில் தேவி சமேதராய்-பிராமண வடிவங் கொண்டு கலாதரரெனும் பெயருடன் சென்று-அவனை வஞ்சகமாகப் புகழ்ந்து-சிவனிடத்திருக்கும் சிந்தாமணி விநாயகரை அழைப்பித்துத் தரவேண்டுமென்று யாசித்து-அவ்வாறே செய்விப்பதாயவனால் வாக்குத்தத்தம் வாங்கிக் கொண்டழுந்தருள-உடனே யவ்வவுணன் அது பொருட்டாய்-கயிலையை நோக்கி யுத்தத்திற்குச் செல்ல-அதனை உணர்ந்த சிவபெருமான் தியானிக்க-அவரது திருமுகத்தினின்றும்-ஐந்துமுகங்களும்-பத்துக்கைகளுமுடையவராகி முத்து மாலைகளும்-இரத்தினாபரணங்களும் விளங்க-கணேசரெனத் தோன்றி-அப்பலியசுரனை சங்கரிக்கும் உபாய முதலியன அனுக்கிரகித்து-அங்கெதிராகத் துதித்து நின்ற விஷ்ணு முதலியோர்க்கும் வேண்டும் வரங்களை நல்கி-தமது திருவுருவத்தைக் கரந்தருளினர்.

***********************************************************************