Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 6 மல்லாலரெனவந்தமயூரேசர் உரியநான்மறையைக்கவர்ந்துகமலாசுரனொளித்தபின்பிரமனுறுக ணொழிப்பமல்லாலனெனும்வேதியோனா

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

6. மல்லாலரெனவந்தமயூரேசர்

உரியநான்மறையைக்கவர்ந்துகமலாசுரனொளித்தபின்பிரமனுறுக

ணொழிப்பமல்லாலனெனும்வேதியோனாய்ச்சுருதியோதிபலமாணாக்கரால்

விரவுமெண்டிசையினுளமுனிவர்களிகொளவேவிரித்திடவுணர்ந்தவவுணன்

வெம்போர்க்குவரவேறுருக்கொண்டுவேள்வியெழுவிறன்மஞ்ஞையூர்ந்துசென்று

பரவையினடர்ந்தசேனையைபுத்திதேவியமைபாரிடக்கணமாய்த்தன்மேற்

பன்மாயவமருடற்றவுணர்கோனைக்கழுமுளாற்றுண்டுபடவீழ்த்தியத்

திரிசந்தியாங்களத்தயனிடக்கவிழ்கமண்டலநாமநதிதீரமாத்

திருந்துமணிநிலயமிடைமாயூரநாதராய்த்திகழ்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

முன்னொரு கற்பத்தில் பரமசிவம் திருவாய்மலர்ந்தருளிய வேதாகம புராணங்களை-பிரமதேவன் புத்தகங்களாக வெழுதி நிதமுமவற்றை யர்ச்சித்து வருகையில்-தேவர்களும் அசுரர்களுமொருவரை யருவர் பகைத்து நெடுங்காலம் போர் செய்த பின்-தேவர்கள் வேதமந்திரங்களைப் படைகளாக்கி-யவற்றை பிரமாஸ்திரத்தோடுங் கூட்டி பிரயோகிக்க-அதனால் அசுரர்கள் பயந்து-சங்காசுரனிடத்தில் தங்களைத் தேவர்கள் வென்னிடச்சாடினதையும் மற்றவர்கள் முயற்சித்த தந்திரத்தையுங் கூறி-முறையிடலும்-அவன்-தம்பியாகிய கமலாசுரனைக் கொண்டு அவ் வேதபுத்தகங்களைக் களவாயெடுத்து வரச்செய்து கடற்கு ளளித்து வைத்தனன்-யோகந்தெளிந்த பிரமன் புஸ்தகங்களைக் காணாமல் மனவருத்தமுற்று-விஷ்ணுவிடம் சென்று அவர் யோகநித்திரையிலிருப்பது கண்டு மீண்டு-கைலாயத்தில் சிவபெருமான் சன்னிதானத்தையடைந்து-தன் குறைகளைச் சொல்லி முறையிட்ட தன் மேல்-அவர் உன் வேத புத்தகத்தை விண்டு சில காலத்திற்குள் தருவித் துதவுவரென்று சொல்லக்கேட்டு-பிரமனாற்றதழுது நிற்க-அதுகண்ட பெருமானும் திருவுளமிரங்கி ஆக்கியாபித்த பிரகாரம்-பிரமன் கணேசமூர்த்தி ஏகாக்ஷர மனுவை பக்தியோடும் உபாசித்து வருகையில்-அக்கடவுள்-பிரசன்னமாகி அஞ்சலிதந்தனுக்கிரகித்து-அப்பொழுதே மல்லாலரென்னும் பெயரையுடைய அந்தணராகி-அளவற்ற மாணாக்கர்கள் புடைசூழ-நிர்மித்தவோர் புஸ்தகத்தோடு சுந்தராச்சிரம மடைந்து-அங்குள்ள முனிவர் கூட்டங்களுக்கு அனுக்கிரகித்து அவற்றைப் பரவச் செய்து வருகையில்-அஃதுணர்ந்த கமலாசுரன் யுத்தத்திற்குவர-ஸ்வாமிகளும் சதுரங்க சேனைகளையும் படைத்து-மல்லாலராயிருந்த அவ்வுருவத்தி னின்றுமாறி-பத்து திருக்கரங்களும்-பருந்து நீண்ட திருமேனியோடும்-யுத்தத்திற்கெழுந்தருள-அன்றைய-யுத்தத்தில்-கமலாசுரன் ஆற்றாதோடி மறுநாள் வர-ஸ்வாமிகள் சுந்தராச்சிரம முனிவர்கள் வேள்வியிலுதித்தமயின் மீதாரோகணித்து மயூரேசராய் போர்க்கெழுந் தருளுகையில்-புத்தி தேவியார்-தாம் யுத்தத்திற்குச் செல்வதாக ஸ்வாமியித்தில் அனுக்ஞை பெற்று-அதுகண்ட சேனைகளையும்-ஐம்பத்தாறாயிரம் படைத்தலைவர்களையும் படைத்தனுப்ப-அவர்களவ்வசுரனோடு யுத்தசெய்து பின்னிடலும் -அது கண்ட அத்தேவியார்-மேலும் அளவற்றசேனைகளோடு இலாபனெனுமோர் மஹாவீரனையும் சிருட்டித்தனுப்ப-அவனும் சென்று அவ்வவுணசேனைகளோடு ஆறுநாள் வரையி லிரவுபகலாகப் பெரும் போர் செய்து அவர்களையழித்து-கமலாசுரனையும் அயர் வுறத்தக்கதாக வாட்டின பின்னர்-அவ்வுணன் இலாபனுடைய சேனைகளை மோகனாஸ்திரததால் மூர்ச்சிக்கச் செய்து மறைந்து விடலும்-அப்போது இலாபன கணேசரைப் பிரார்த்தித்து-தன் சேனைகளை எழுப்பிக் கொண்டு-ஸ்வாமிகளிடஞ் சேர்ந்து-பலவரங்களைப் பெற்ற வனிருக்க-மயூரேச்ரும் அவ்வுணனோடெதிர்த்து யுத்தஞ்

செய்கையில்-இலாபனால்-அவ்வசுரனேறியிருந்த குதிரையைக் கொன்று பாதசாரியாக்க-கமலாசுரன் மாய வித்தையினால் தனது ரூபத்தை மறைத்து ஆகாயத்தெழும்பி யகோரமான போரிடும் போது-பெருமானும்-தமது கையிலிருந்த பாசத்தை ஏவி-அவனை நேரில் தருவித்து சில புத்திகளை கூற-அவனதனைக் கேளாது ஸ்வாமிகள் மீதோர் தண்டாயுதத்தை ஏவ-அத்தண்டத்தைப் பெருமானும் கரத்தாற் பற்றி-அவ்வசுரன் மார்புபிளக்கத் தாக்கின தன் மேல்-உதிரப் பெருக்கெடுத்து-அதில் நின்றும் அனந்த அசுரர்களுதித்து யுத்தஞ் செய்ய அது கண்ட இலாபனும் சித்தி புத்தி தேவியர்களைப் பிரார்த்திக்க-அவர்களங்ஙனே படைத்தனுப்பின ஒன்பது கோடி பூதவீரர்களும் இரணக்- களத்திற்கு வந்து-அஙகிருந்த அசுர வீரர்களையும் சேனைகளையும்-கமலாசுரனுதிரத்தையும் வகையற விழுங்கியுண்ட பின்-கமலாசுரன் கண்டு தெய்வப்படைகளாற் போரிட-மயூரேசரும் அவ்வவுணனைத் தமது சூலத்தை ஏவி-மூன்று துண்டமாக வீழ்த்தியருளினர்-அந்த யுத்தகளம்-திரி சந்திக்ஷேத்திரமென வழங்கலாயின.

அது தினத்தில்-மயூரேசரைப் பிரமன் பூஜிக்கையில்-வைத்த கமண்டலம் கவிழ்ந்-தந்நீரோடி-கமண்டல நதியெனும் பெயராய் வழங்குகின்றது-அந்நதிதீரத்தில்-பிரமனாற் சமைத்த ஆலயத்துள் மயூரேசர் மூலட்டானத்தெழுந்தருளினது கண்டு-சிவபெருமான் விஷ்ணு முதலிய சமஸ்த தேவர்களும்-அவ்வாலயத்து ளினிதமர்ந்தருளினர்.

*********************************************************************** htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it