விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 4 பாலசந்திரர்- இதமுறநடித்திடுதிலோத்தமைதன்முலைகாண்வெழினாடியிச்சைபூண்டங் கிளைநமன்விடுத்தசுக்கிலமதிலுதித்த

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

4. பாலசந்திரர்- இதமுறநடித்திடுதிலோத்தமைதன்முலைகாண்வெழினாடியிச்சைபூண்டங்

கிளைநமன்விடுத்தசுக்கிலமதிலுதித்தவவ்வெறுழ்கோரவனலாசுரன்

பதுமன்படைத்தவகிலத்துள்ளவுயிர்களைப்பற்றிப்புசித்தமரர்வாழ்

பதநாடிவருதலோர்ந்தவணிரிந்தண்டரோர்பாற்குழீஇப்பெரிதேத்துமத்

ததிபிரமசாரியாய்வந்தஞ்சலுதவவங்கட்டகுவனுறலுமவனைத்

தமதுமெயுருக்கொண்டெடுத்துள்விழுங்கமெற்றணல்மேனியெங்கும்வீச

வதுபொறாதகிலமதழுங்கசுரருபசாரமாற்றாதுமுனிவரரறு

காற்குளிர்மையாய்ப்பாலசந்த்ரனாமங்கொண்டருட்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

ஓர் தினம் யமதருமராஜன் நிறைந்த கொலுச் சபையில் வீற்றிருக்கையில்-நாட்டியஞ் செய்திருந்த திலோத்தமைக்கு-மேல் வஸ்திரம் நழுவி வெளி தோன்றினவள் கொங்கைகளின் சுந்தரத்தைக் கண்டு-அவன் மனம் காமத்தாலுருகி-கலித்தமான வீரியத்துதித்து-திரிலோகங்களையும் வருந்தின-அனலாசுரனுக்கு அஞ்சி-விஷ்ணு முதலிய தேவர்கள் பிரார்த்திக்க-அவர்கட்கிரங்கி-மான்றோல் முடிந்த பூணூல் மார்ப்பிற்றுலங்க-பிராமண குலத்திற் பிறந்த பிரமசாரியைப்போலக்-கணேசர் எதிரில் வரக்கண்டு-அத்தேவர்கள் சாஷ்டாங்கமாகப் பணிந்து-தங்கள் துன்பத்தை விண்ணப்பஞ் செய்ய-அதற்கஞ்சாதீர்களென்று அபயாஸ்தம் தந்து நிற்குஞ் சமயத்தில் கண்டோர் பயந்து ஓடும் படியாயவண் வந்த அவ்வசுரன் முன்பாக-கத்தி-கேடகம்-வேல்-வில்-இவைகளைத் தாங்கிய சதுர்ப்புஜங்களும்-தேசார்ந்த திருமேனியும்-துதிக்கைப் பொருந்தும் வேழமுகமும்-நுதல்விழியும்-உபயதிருவடியும்-கீரிட- குண்டலம்-தோளணி-முத்துமாலை முதலிய சர்வ பூஷணமும்-திருமார்பிற் கொன்றை மாலையுடன்-பொலிவுறூஉம் தமது நிஜவுருவங் கொண்டருகிற் சென்று-அவனைத் துதிக்கரத்தினா லெடுத்தோர் கவளமாய் விழுங்கியதனா-லக்கடவுட்டிருமேனியி லுண்டான வெப்பம்-சராசரங்களையும் பீடித்து நிற்கையில்-அதனைத் திரிமூர்த்திகளாலுந் தணிக்கத் தணியாது-நாற்பத்தெண்ணாயிர முனிவர்கள் செய்த அறுகார்ச்சனையாற் றணிந்த பின்னர்-அவரவர்கள் விழைந்தவரங்களை நல்கி தமது திருவுருத்தைக் கரந்தருளினர்.

காலன் வீரியத்துதித்த அனலாசுரனை விழுங்கிய காரணத்தால் காலானப் பிரசமொன்றும், பால வயதுடன் வந்து-எல்லாவுயிர்கட்கும் வருந்தி நின்ற வெப்பம் நீங்க-சந்திரனைப் போலக் குளிர்ச்சி தந்தமையால்-பாலசந்திரரென்றும், திருநாமம் வழங்கலாயின.

***********************************************************************