விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 2 சிந்தாமணி விநாயகர்- அமிழ்தைநிகர்தருமொழியிலாளடபிசித்தரசனான்றதவமகவினுக்கா யயர்வனத்தயன்விந்துவளைதடப்புலு

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

2. சிந்தாமணி விநாயகர்- அமிழ்தைநிகர்தருமொழியிலாளடபிசித்தரசனான்றதவமகவினுக்கா

யயர்வனத்தயன்விந்துவளைதடப்புலுண்டவரசியீன்றிடுகணன்வளர்ந்

துமைபதிவரத்தின்முவ்வுலகாளுநாடன்னிலுழைவேட்டமாடிமீண்டங்

குறுகானில்கபிலமுனிதெய்வமணியாலமைத்திடுவிருந்துண்வனதைக்

கமவலிமையாற்கவர்ந்தேகமுனிநொந்துசெய்கனன்மகந்தோன்றியடரக்

கணனைமழுவாற்செற்றுகபிலரார்ச்சனையடுங்கண்டத்தமணியேற்றதாற்

றிமிரபந்தந்தவிர்த்திடுகபிலநாமமொடுசெல்வமெல்லாமளிக்குஞ்

சீர்கொள்சிந்தாமணிவிநாயகருமாயுலகிறிகழ்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

தமிழ்வள நாட்டதிபனான அபிசித்தெனுமரசன் - புத்திரப்பேறு வேண்டி வைசம்பாயன முனிவரால் உபதேசிக்கப் பெற்ற பஞ்சாக்ஷர மந்திரத்தை பக்தியோடு தியானித்து தவஞ்செய்து வருகையில், (அதற்கு முன்னர் அவ்வனத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த பிரமன்- ஓர் நாள் தன் மனைவி சரஸ்வதி தேவியின் மேன்மையல் கொள்ள அதனால் வீரியம் சிதறி விரவின தடாக நீரை) - அவ்வரசன் மனைவியாகிய குணாவதி தாகமிகுதியாலரிந்த-அதுவே கருப்பமாய் நகரமடைந்த பின் புதித்த கண்னென்பவன் மஹா பராக்கிரசாலியாய் வளர்ந்து பரமசிவத்தை நோக்கி தவஞ்செய்து அகண்ட வரப்பிரசாதியாய் விஷ்ணுவும் பிரமனும் நடுங்க திரிபுவனங்களையும்வென்று ஏகசக்கிரேசுவரனாயரசாக்ஷி நடத்தி வருகையில்-ஓர் நாள் வேட்டையாடி மீண்டு அயர்வுயிர்ப்பானாய் தங்கிய அவ்வனத்திற்கபில முனிவரைக்கண்டு சம்பாஷித்து-அவரால் திருப்தியாயிடவுண்ட அவ்விருந்து-சிந்தாமணியாலமைத்திட்டது கண்டு வியந்து-அவாமிகுதியா லதனைக் கேட்டதன்மேல்-அஃது விண்டு வினிடத்திற்பெற்ற இந்திரனால் தனக்கருமையாகக் கிடைத்த வரலாற்றினைக் கூறி-அம்முனிவரதற்கொவ்வாமையாய் மறுத்துரைத்தவுடன்-சற்றும் யோசிக்காமல் அதனைப் பலவாற்காரமாய்க் கவர்ந்து சென்றபின்-மிகவுமவர் மனம் வருந்தி யவனுயிர்க்கிறுதியாம் படி செய்த வேள்வியினின்றும்-இரத்தின கீரிடம்-குண்டலம்-தோளணி-முத்துவட முதலிய ஆபரணங்களோடு, தேசார்ந்து வனப்பெய்தியிருக்கின்ற திருவுருவமும்-வேழமுகமும்-கருணை பொழிகின்ற திரிநேத்திரங்களும்-மோதகம்-தாமரைமலர்-மழுவாயுதம்-பூமாலை-இவற்றை ஏந்தின நான்கு திருக்கரங்களும்-அடியார்க்ளிதய கமலத்தி லுலாவுஞ் சேவடிகளும்-சித்தி-புத்தி சமேதமாக-சிங்கவாகனாரூடராய் விநாயகமூர்த்தி எழுந்தருளினது கண்டு-

அம்முனிவரவரை மகிழ்வாகவோராதனத்திருத்தி பூசித்திருக்கையில், அன்றிரவில் துற்கனவு கண்ட கணராஜன்-உடனே எழுந்து சேனாசமேதனாய் அக்கபிலமுனிவ ராச்சிரமத்தை நெருங்கின சமயத்தில்-சித்தி தேவியரால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பூதப்படைகளும்-அரசன் படைகளு மொன்றோடொன் றெதிர்த்துப் போர் செய்கையில்-அச்சித்தி தேவியார் திருவருளால் வந்த இலக்கனென்னு மோர் மகாவீரன்-அச்சத்துருதளத்தை நாசஞ்செய்து-அந்த-கணனுடைய புத்திரர்களான-சூலபாணி-சுலபனிருவரையும் கைப்பிடியாகப் பிடித்துச் சென்று ஸ்வாமியிடமாகச் சேர்க்க-அச் செய்தியறிந்த கணராஜன்-அவ்வாச்சிரமத்தை யணுகி-யங்கெழுந்தருளியிருந்த கணேசரது-நெற்றி-புஜம்-பாதங்களிற் பாணப்பிரயோகஞ் செய்ய-அது பொருட்டா யக்கடவு ளாதனம் விட்டெழாமல்-திருநோக்கஞ் சாத்தற்கெழுந்த மழுவாயுதத்தா லவன்மடிந்தனனாக, மறுநாள்-அவன் பிதாவான அபிசித்தரசன் வந்து பிரார்த்தித்தவாறு-அவன் பெனத்திரர்களை விடுத்து-அவ்வரசனால் தந்த சிந்தாமணியை கபில முனிவர் பிரார்த்தித்வாறே விநாயகமூர்த்தி தரித்தருளினர்.

சிந்தாமணியைத் தரித்தருளினவாற் சிந்தாமணி விநாயகரெனவும், கபிலராற் பூசிக்கப்பட்டனவாற் கபிலவிநாயகரெனவும், மலர்ந்த திருமுகத்தோடெழுந்தருளினவாற் ஸுகரெனவும், திருநாமம் வழங்கலாயின.

***********************************************************************