Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்தெட்டாவது- கீர்த்தியெனும் இராஜபத்தினியுபாசித்தது துணர்விரைதருங்குழற்கீர்த்தியெனுமரசிதன்சுகமேன்மை

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்தெட்டாவது- கீர்த்தியெனும் இராஜபத்தினியுபாசித்தது

துணர்விரைதருங்குழற்கீர்த்தியெனுமரசிதன்சுகமேன்மைதாழமன்னன்

றுனுமிளையநாயகிவசத்தனானதுமவள்சுபுத்திரப்பேறுற்றது

முணர்புதன்றளர்வொருவுவான்கணேசர்ச்சனிதியுற்றகினர்ச்சிப்பவஃ

தோர்திணங்கிடையாதுவன்னியாற்பூசித்துளத்தயர்வுறக்கனவின்வந்

திணர்முடியிலங்கவேற்றனமஞ்சன்மாதராயென்றவணலருள்வரத்தா

லிதமாகநாதனொடுமருவிவாழ்நாளிலரிதீன்றவெழின்மைந்தன்மானப்

புணர்நஞ்சபூபமாற்றாளூட்டமூன்சமிப்பூசித்தபலனைசேய்கைப்

பொருந்தவன்போடுதத்தஞ்செய்த்துயிலகன்றோன்போலெழுந்ததம்மா

இதன் சரித்திர சங்கிரகம்

விண்ணுலகத்தினரு மதிக்கத்தக்க மண்ணுலகத்தில் எண்ணற்ற தருமங்களையுந் தானங்களையுமிடைவிடாதியற்றி - வறியார்களுக்கெல்லாம் வரையாது கொடுத்துப் - பகையாயினாரையும் பணிப்பிக்கவல்ல பராக்கிரமத்தோடு சகல நற்குணங்களினுஞ் சிறந்தவனாய் மநுநீதி தவவறாமற் செங்கோற் செலுத்தி மகாகீர்த்திமானாயிருந்த-பிரியவிரதனென்னுமரசன்-கீர்த்தி-பிரபை-யென்னுமனைவியரிருவருடன் வாழ்நாளில் அரசன் மூத்தாளையறுத்து இளையாளிடத்திற்றானே கேவலம் பிரியம் வைத்துப்பதுமநாபனென்றோர் புத்திரனைப் பெற்று அவன் பருவமுற்றகாலத்தி லவனுக்குப் பாஞ்சாலன் குமாரியை விவாகஞ் செய்வித்து சிறப்போடுங் கூடியிருக்கும்போது ஓர்நாள் மூத்தாளை இளையாள் திரணமாகமதித்துநிரேதுவாய்க்காலாலுதைக்க அம்மூத்தாள் நாயகன் தன் பக்ஷத்தில் சார்வதாநிஷ்பிரியனாயிருப்பதையும், கண்ணிற்கெதிரா நடந்த அக்கிரமத்தைக் குறித் தவன்கேளாதிருந்துவிட்டதையும், யோசித்து மனவருத்தமாற்றாது உயிரையழிக்குமாறு துணிந்தவளாயரண்மனையைவிட்டு வெளிப்படுஞ் சமயத்தில்-சந்தித்த புரோகிதன் அவ்வரசி மனோவியாகுலத்தையறிந்து பலதேறுதலையான வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபின் கணேசரைப்பூசிக்கில் சர்வாபீஷ்டமும்ஸித்தியாமென்று அக்கடவுளையாசிக்கு முறைமையையுஞ் சொல்லக் கேட்டு மனந்தேறி அவ்வாறே ஸ்நான முடித்து மந்தார விருக்ஷத்தடியிலிராநின்ற கணேசர்க்கு அபிஷேகஞ் செய்து-அறுகினான்மந்திர முறையாக அர்ச்சித்து வருநாளில் ஓர் நாள் அஃதகப்படாமல் வன்னிப்பத்திரத்தால் அர்ச்சிக்க நேர்ந்ததன் மேல் அது குறை நீங்குமாறு அன்றுணவுதவிர்த்தவளாயிரவில் நித்திரை செய்திருக்கையில் அவள் கனவில் கணேசரெழுந்தசருளி c வன்னியாற் செய்த அர்ச்சனையை யாமேற்றுக்கொண்டனம் அஃது நமது முடிமீதிருக்கின்றதுபார், இனியக்கவலையை யழிந்துவிடென்று கூறி புத்திரப்பேறு முதலான வரமருளின தன்றியும்-இனிபிறக்கு மப்புரத்திரனுக்கு நேரிடவிருக்கு மிடையூறும் அது நீங்கத்தக்க ஹேதுவுமனுக்கிரகித்துக் கரந்தருளினவுடனே கண்விழித்து மனமகிழ்வாக மறுநாளுதயத்தினும் தன்னியமப்படி அக்கடவுளைப் பூசித்துத்துதித்து தனதிருக்கையைச் சேர்ந்த சின்னாட்பின் மாற்றாட்கு வெப்பநோயுண்டாகக் கண்டவரசன் அவளைவெறுத்து அக்கீர்த்தியிடத்தில் அன்போடளவளாவுகாலையில் ஓர்புத்திரன் பிறக்க அவனுக்குக்ஷிப்ரப்பிரசாதனென நாமகரணஞ்சாற்றி வளர்த்து வருங்கால் நான்காம் வயதில் அப்பிள்ளைக் குமாற்றாளா லுட்டினவிஷந்தலைக்கேறி மூர்ச்சித்தது கண்டு அரசன் வருந்து கையில்-பட்டத்தரசியாகிய கீர்த்தியானவள் விநாயகக்கடவுள் வாக்கியத்தை நினைந்து மைந்தனையெடுத்துக் கொண்டு கிருச்சமதமுனிவ ராச்சிரமத்திற்குச் செல்லும்போது மார்க்கமத்தியில் புத்திரனுக்குயிர்மோசம் நேர்ந்ததாகக்கண்டு அவணின்று பிரலாபித்திருக்கையில் ஞான நோக்கினாலவையாவுமுணர்ந்த கிருச்சமதமுனிவரவணடைதலும் உடனே எழுந்து பணிந்த அவ்வரசியின் மனதையவர்தேற்றி கணேசமூர்த்தியையவளோர் நாள்வன்னிப் பத்திரத்தால் பூஜை செய்த பலனை அப்புத்திரன் கையில் தத்தஞ்செய்விக்கலும் அக்கணமே உயிர்பெற்றெழுந்த புத்திரனுடன் தானுமவரைவணங்கி விடைபெற்று மனமகிழ்வுடன் தனது நகரையடைந்தனள்.

இஃது எல்லாப் பத்திரங்களைவிடவன்னிப் பத்திரத்தில் கணேசமூர்த்திக்கு அதிகவிழைவுண்டான காரணம் வினவின உமையவட்கு-சிவபிரான் திருவுளம் பற்றினது.

*********************************************************************** htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it