Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்தொன்பதாவது - சந்திரனுபாசித்தது அற்புதத்திசைமகதிமுனிதருங்கனியைமுனருங்கைலையமலனயனை யார்க்கிதுதர்க்க

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்தொன்பதாவது - சந்திரனுபாசித்தது

அற்புதத்திசைமகதிமுனிதருங்கனியைமுனருங்கைலையமலனயனை

யார்க்கிதுதர்க்கடவதெனவறுமுகற்கெனவளிப்பவதுகண்டுசீறுங்

கற்பகக்களிறடிமலர்ப்பணிந்தையவிக்காழ்பிழைபொறுத்தியென்னக்

கருணைசெய்போதுகண்டெள்ளமதியத்தினெனிகழலமேற்கண்டோர்சுகந்

துற்பலமுறக்கொடுஞ்சூளுரைத்திடலுந்துணுக்குற்றவவனுமெம்மான்

றுணையடிபணிந்துகுறையேற்பவருள்கூர்ந்தவன்றுன்பங்கடொலையநாலாம்

விற்பொலிதினத்திதிறமைவழிபடுபினவனையுமேதினியில்பூஜிக்கவும்

விழைபலன்பெறவுமவனோர்கலையைமுடியின்மிலைந்தருள்புரிந்தானரோ

இதன் சரித்திர சங்கிரகம்

கைலாயத்திற் சிவபெருமான் கணேசர் முருகவேளுடன் திருவோலக்கத்திலெழுந்தருளியிருக்கையில் நாரத முனிவர் வந்து பணிந்து சந்நிதிக்கெதிராக வைத்த வோர்கணியை மருங்கினுற்ற விருவரில்யாவர்க்குக் கொடுப்பதென்றவர் வினவப் பிரமன் இளையபிள்ளையார்க்கெனக் குறித்துரைத்தவாறே யவர்க்கப்பழத்தைக் கொடுத்து விட்ட பின்னர் அது காரணமாகக் கணேச மூர்த்தி கோபங் கொண்டருளலும் பிரமன் அஃதறிந்து கணபதி சந்நிதிக்குத் தேவ கணங்களுடன் சென்று தான் செய்த அபசாரத்தை மன்னித்தருள் கெனத்துதித்து வணங்க அவனுக்கருள் புரியுஞ்சமயத்தில் சிறிதவ மதிப்பாக நகை செய்த சந்திரனை வெகுண்டு c யுலகிற் பிரகாசமின்றி மறைவுபட்டு உனதுருவத்தைக் கண்டவர்களுமிடருழக்கக்கடவரென்று சபித்தருள அப்போது இந்திரன் விண்மண்ணுலகத்தார்க் கமுதஞ்சுரத்துலும், பயிரைவளர்த்தலுஞ், சந்திரனுக்குரிய கடமையாயிருப்பதால் அவன் பிழையை க்ஷமித்து, நேர்ந்த சாபம் நீங்கலாகவருள்கவென்று அப்பிரணவ சொருபரை மிகவுந்துதிசெய்ய அதற்கிரங்கி ஆவணி மாதம் பூர்வபக்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியில் மாத்திரம் ஒருவரும் பாராதிருக்கவும் மற்றைய நாட்களில் முன்போலவே யவனைக் காணலாகுமெனப் பரிகார வாக்கருளப் பெற்று மீண்ட இந்திரன் அச்சந்திரனுக்கு அக்கடவுளது சடக்ஷர மந்திரத்தை உபதேசிக்க அவனும் கங்கா நதியருகில் சர்வஸித்தி நகரத்தில் இருபத்திரண்டு வருடவரையில் அம்மனுவையுபாசித்திருக்கையில் விநாயகக்கடவுள் அவனுக்குப் பிரத்தியக்ஷமாகி சங்கடங்களை நீக்கிக்கொள்ள வேண்டினேரனுட்டிக்கும் அங்காரக சதுர்த்தி தோறும் c உதயமாகின்ற சமயத்தில் நம்மைப் பூசை செய்தவுடன் உன்னையும் அர்ச்சித்துத் துதி செய்யத் தக்கதாக உனதோர்கலையை நமது முடிமீதணிவோ மென்றனுக்கிரகிக்க அவ்வாறே அவன் அவ்விடத்தோர் கோயிலமைத்து அதிற்பாலசந்திர விநாயகரென மூர்த்தப்பிரதிஷ்டை செய்து சிறந்த பூசனைகளையியற்றி யக்கடவுண் முடியிலோரணியாகவும் தமது மண்டலத்தில் பழையபடியே பரிசுத்தப்பிரகாசனாகவும் அமர்ந்து விளங்கினன்.

*********************************************************************** htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it