விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்தேழாவது- கார்த்தவீரியனுபாசித்தது நிற்காரமாய்க்கரசரணமிலாதுதிகார்த்தவீரியன்குறைகணீங்க நிகரிறத்தாத

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்தேழாவது- கார்த்தவீரியனுபாசித்தது

நிற்காரமாய்க்கரசரணமிலாதுதிகார்த்தவீரியன்குறைகணீங்க

நிகரிறத்தாத்திரயமுனிவனருள்வழிவனந்நேர்ந்துறுதியடுசெய்தவத்

திற்காங்குபிரசன்னமாங்கணேசரையவனெழுந்தன்பொடஞ்சலித்தற்

கேலாமையான்மனத்துட்டுதிக்கக்காலிரண்டஸ்தமாயிரமுமாய்

விற்காட்டுமைஞ்நூறுபாணமோடியாவரினுமிக்கவலிமையுமருள்செய

விழைந்துநிலயமொடுபிரவாளகணபதிகண்டுமெய்யன்பொடேத்திமீண்டு

சொற்காதிபனுமுண்ணடுங்கமண்டலவேந்தர்தொழுதிறைசெலுத்தமேலாஞ்

சுகோச்சசக்கரவர்த்தியென்னவெங்கணுமிசைதுலங்கிவாழ்ந்தனனென்ப்வே

இதன் சரித்திர சங்கிரகம்

கணேசப்பிரசாதத்தினா லுதித்த புத்திரனுக்குக் காலுங்கையுமின்றி முடமாயிருக்கக்கண்ட சுகந்தையெனுந்தாய் வருந்துவதறிந்து அவள்காந்தனான கிர்தவீரியராஜன் வந்து பார்த்து வருந்தனபின் விநாயகர் விரதபலத்தினாலுண்டான இப்புத்திரனுடற் குறையை யக்கடவுளே விலக்கியருளுவரென்று சொல்லி அவளுடையமனதைத் தேற்றி அக்குழந்தைக்குக் கார்த்தவீரியனென நாமகரணஞ் சாற்றி வளர்த்து வருகையில் அக்குமாரனுக்கு பன்னிரண்டு வயதான பின்பு அங்கு வந்த தத்தாத்திரய முனிவரை கிர்தவீரியராஜன் பணிந்து தனது புத்திரனுடற் குறையை விண்ணப்பஞ் செய்ய அதற்கவரிரக்கமுடன் அப்புதல்வனை வருவித்துத் தீ¬க்ஷ செய்து ஏகாக்ஷர மந்திரத்தையுபதேசித்துச் சென்றபின் கார்த்தவீரியன்வனத்திற்சென்று அம்மனுவைத் தியானித்து அன்னபானாதிகளையுநீத்துப் பன்னிரண்டு வருடவரையிலருந்த வஞ்செய்கையில் அடுத்தவோர் தடாகத்தினிடமாக விநாயகமூர்த்தி பிரத்தியக்ஷமாகலும் அவனெழுந்து வணங்கக்கூடாமையான் மனத்தலனந்த முறை வணங்கி நிற்கையில் அவனுக்கிரண்டுகால்களையும், ஆயிரங்கைகளையும், அதற்கேற்றவலிமையையும், ஐந்நூறுபாணங்களையு, மனுக்கிரகிக்க அப்போதங்குவந்திருந்த பிரமன் முதலியோர்களாலும் ஆசீர்வதிக்கப்பெற்றவனா யக்கடவுளைப் பேருவகையுடன்று தித்துப் பவளவொளியோடு தனக்குக் காக்ஷி கொடுத்த அவ்விடத்தில் பொன்னாலுமணிகளாலு மோராலயமமைத்து பவளத்தினாற் செய்த கணேசமூர்த்தியையதிற்றாபித்துப் பூசித்து மீண்டு தனது நகரமடைந்த பின்னர் [வரம்பில்காக்ஷி, வரம்பிலின்பம், வரம்பில்லாற்றலோடும், சராசரத்திலும் சர்வஞ்ஞத்துவமும், பொருந்த மேற்படிதத்தாத்திரயமகர் முனிவரால் கிருபைகூர்ந்தனுக்கிரகிக்கப் பெற்று ஓர்கற்பகால வரையில்]உலகம் முழுவதும் தனதாஞ்ஞை செல்லச்செலுத்தித் தேவர்களெல்லா மேவல் கேட்க சக்கரவர்த்தியாய் சுகித்தரசாண்டனன்.

மேற்கூறின மூர்த்தமும் வனமும் பிரவாள விநாயகர் பிரவாளவனமென்னும் பெயராய் வழங்கி வருகின்றன.

பின்பொருகாலத்தில் ஆதிசேடன் பூபாரந்தாங்கமாட்டாதவனாய் அப்பிரவாள கணேசமூர்த்தியையடுத்து அன்போடுபாசித்து வேண்டினவரங்களைப் பெற்று அவ்வனத்தின்கண்தரணீதரமென வோர்நகரமுண்டாக்கி யதில் தரணீதர விநாயகரெனமற்றோர் கணபதிமூர்த்தப் பிரதிட்டையுஞ்செய்தனன்.

அவ்விநாயகரை இராவணன் பூஜித்து இலங்காதிபத்தியமும், பாண்டவர்கள் பூசித்துத்

துரியோதனாதிகளை ஜயித்தரசாட்சியும் பெற்றனர்.

[ ] இக்குறியினுள்ளாக விளம்பினவைகள் பிரம்மாண்டபுராண ஸம்ஹிதையில் சக்கரவர்த்திகள் வம்சாவளியிற் கூறப்பட்டிருப்பது

***********************************************************************