காஞ்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமை மடையத்தூர் கிராம நல சங்கம்
மற்றும் மடையத்தூர் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும்
சங்கரா உழவர் முகாம்
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆசியுடன் சங்கரா உழவர் முகாம், மடையத்தூர் கிராமத்தில் (திருப்போரூர் ஒன்றியம் காஞ்சிபுரம் மாவட்டம்) வருகிற செப்டம்பர் மாதம் 12-ம் தேதி 2004 (ஆவணி மாதம் 27-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெரும். காலை 9.00 மணி அளவில் கோமாதா பூஜையுடன் மகளிர் துவக்கிவைப்பார்கள்.
நிகழ்வுகள்
1. கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை.
2. பசுத் தீவன பயிர்கள் விநியோகம்
3. இயற்கை ஒன்றிய வேளாண்மை பற்றி விவசாயிகளுக்கு விளக்கவுரை.
4. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயிற்சி
5. மூலிகைச் செடியின் பயன்கள்.
எனவே விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள், தாங்களும் தங்கள் கால்நடைகளுடன் முகாமிற்கு வந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கனம்.
காஞ்சி கல்வி நலவாழ்வுச் சங்கம்
148-150, லஸ் சர்ச் ரோடு,
மைலாப்பூர்,
சென்னை-4.
எபோன்-24986673.