கவானின் பக்தர்கள் யாவரும் பந்துக்கள் என்கிறார் ஆதிசங்கரர். இதனால்தான் பொதுக்கூட்டங்களில் சகோதர்களே என்கின்றனர். படித்தவர், படிக்காதவர், ஏழை பணக்காரன் ஆகியோர் யாவரும் பகவானின் பார்வையில் ஒன்றே. பகவான எல்லோருக்கும் ஆசீர்வாதம் அளிக்கிறார். இங்கு கடலை பார்க்கின்றனர், பகவானும் ஒரு கடல். '' தயா ஸிந்து '' இங்கு பஜனை கீர்த்தனைகள் நடந்ததை நாமும் கேட்கிறோம், பலரும் கேட்கின்றனர், பகவானும் கேட்கின்றார். கேட்டு பின் க்ருபையுடன் ஆசி அளிக்கிறார். அரசர்கள் தேரில் வருவது போல பகவானின் தேரை பிரம்மா ஓட்டிவர காட்சி அளிக்கிறார். நீங்கள் இங்கு வசித்து பகவானின் பெயரை சொல்லி தரிசனம் செய்யும் பாக்கியத்தை பெற்றுள்ளீர்கள். காஞ்சிபுரம் தமிழ் நாட்டில் உள்ளது. காஞ்சிபுரத்திற்கும் பூரிக்கும் ஸம்பந்தம் உண்டு. ஸர்வ தர்ம ஸம்மேளனாக்காக ஒரு தடவையும் இப்போதும் இரண்டு முறையாக குருநாதர் வந்திருக்கிறார். அவர் குருவும் வந்துள்ளார். கோயிலுக்கும் காஞ்சிபுரத்திற்கும் ஸம்பந்தம் உண்டு. சுற்றி வரும் போது கணேச விக்ரஹம் உள்ளது. அதற்கு ''காஞ்சி வினாயகர்''எனப் பெயர் உள்ளது. இதிஹாஸத்தின் படியும் ஸம்பந்தம் உள்ளது. புருஷோத்தம் அரசன் காஞ்சி அரசன் மகளை திருமணம் செய்து கொண்டான். இந்த கல்யாணத்தை முடித்து வைக்க ஜகன்நாத ஸ்வாமிகளே காஞ்சிக்கு வந்து முடித்து வைத்துள்ளார். கலாசார பார்வையிலும் ஸம்பந்தம் உண்டு. நமது கலாசார அறிவு நமக்கு ஏற்பட வேண்டும். தினமும் ஸுப்ரபாதம் ஏற்பட வேண்டும். காலையில் பகவானின் சிந்தனையுடன் ஸ்ரீஹரிஸ் சரணம் என்று குரு அளித்த உபதேசத்தை ஏற்று அதன் படி நடந்து நமது தேசத்தின் தர்மத்தினை கடைபிடித்து ஈஸ்வர பக்தி, ஸதாசாரம், தேசபக்தி ஆகியவை ஏற்பட வேண்டும். ஜகன்நாதரின் பக்தியினால் தான் ஒரிஸ்ஸா மக்கள் நன்கு உள்ளனர். சிரத்தையும் பக்தி செய்தால் நல் வாழ்வு உண்டாகும். பக்தி, ஞான, கர்மமாகிற மூன்று வழிகளில் சென்று, ஜெயதேவரின் பக்தி பிரசாரம் ஏற்பட்டு, இந்தப் பூமியில் வாழும் நீங்கள் யாவரும் நன்கு வாழ ஆசீர்வதிக்கிறோம்.

(23-04-1998 பூரியில் ஹிந்தியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 35
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 37
Next