Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -26

ஹோபிலம் பள்ளியில் பல ஆண்டுகளாக நல்ல படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அத்துடன் தமிழில் ஸ்தோத்திரங்கள், பிரபந்தம், ஸங்கீதம் இம்மாதிரியானவற்றையும் சொல்லிக் கொடுத்து நல்ல மாணவர்களை தயாரித்து வருகிறது. '' தர்மோ ரக்ஷதி ரக்ஷித :'' தர்மத்தை நாம் காப்பற்றினால் அது நம்மை காக்கும். நமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர் இத்தகையதான பாரம்பரியம் (HERITAGE) வேறு எங்கும் கிடையாது என ஆச்சர்யப்படுகின்றனர். இந்த நாட்டிற்கு சுதந்திரம் வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நமது நிர்வாகம் தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இப்போதே தர்மவழியில் நடக்கவில்லை எனில் பின்னால் ஏற்படாது. நமது பக்தி, ஆத்ம குணம், பெருமை, தானம், உண்மை பேசுதல், துவேஷம் இல்லாமை, கஷ்டப்படுவோர்க்கு உதவுதல் ஆகியவற்றினைச் சொல்லிக் கொடுத்து அவை மனதில் பதிந்து பின்பற்றப்பட வேண்டும். இதனை நடத்திக் காட்ட வேண்டும். அதற்காகத்தான் இந்த ஒரியண்டல் பள்ளி (ORIENTAL SCHOOL) பழைய காலத்தில் ஏற்படுத்தியது. இந்தப் பள்ளியில் நல்ல பெயர் பெற்று பலரை தயார் செய்துள்ளது. யாவரும் சாந்தமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கு தர்மம் இருந்தால் தான் முடியும். அந்த தர்மத்தினை இங்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கு இரண்டு ஏற்பாடு, 1. கிருஷ்ண &ஸீதீsஜீ;யஜுர்வேத வேதாத்யயனம், 2. முத்து ஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளை சொல்லிக் கொடுத்தல், சரீரம், புத்தி, மனஸ் யாவும் விசாலமாக நல்ல விஷயத்தில் ஈடுபட்டதாக இருக்க வேண்டும். நம்முடைய தேசத்திற்கு பொதுவான பாஷை ஸம்ஸ்க்ருதம். இதனை அறிந்தவர்கள் எங்கும் சமாளித்துக் கொள்கின்றனர். இது இருந்தால் தான் எதனையும் புரிந்து கொள்ள முடியும். தென் இந்தியா வேதம் வளர்த்த பூமி. வடக்கில் அதிக கஷ்டங்கள் இருந்தால் அவர்களால் இதனை காப்பாற்ற முடியவில்லை. அங்கு ஒவ்வொரு வேதத்திலும் சிலர் தான் இருக்கின்றனர். சதுர்வேதி, த்ரிபாடி, துவேதி, போன்ற பெயர்களைப் பார்க்கும் போது வேதம் அங்கும் நிரம்பி இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. வேதம் இந்தியா முழுவதும் இருந்தது. சதுர் வேதி மங்கலம் என்று இருந்தது. விழுப்புரம் அருகே '' எண்ணாயிரம் '' என்று ஒரு கிராமம். லௌகீகத்தில் சிந்தனை இல்லாமல் வேதத்தினை படித்தவர்கள். தற்போது வேதம் மிகவும் குறைந்து விட்டது. வேதங்கள் ஞானத்தின் நிலை. எப்படி இருந்தால் இக லோக பரலோகத்திற்கு நல்லது என்று சொல்லி இருக்கிறது. சுகதால் என்ற இடத்தில்தான் பாகவதம் சொல்லியது. விதர குடி என்ற இடத்தில் தான் விதுர cF சொல்லப்பட்டது. வேதத்தில் சொன்னதைத்தான் புராணங்களும் கதைகள் ரூபமாக சொல்லியுள்ளன. இதனையே தான் காப்பியங்களும் சொல்லப்பட்டுள்ளது. எழுத்திற்கு மக்களின் மாற்றக் கூடிய சக்தி உண்டு. எதுவும் தர்மத்தை தழுவியதாக இருந்தது. காவியங்கள் cF, பக்தி, தர்மம் இதனை அடிப்படையாகக் கொண்டு இருந்தன. மனிதர்கட்கு என்ன தேவை, யாவற்றிக்கும் முன்னதாக எது வேண்டும் என்பதை வெளிப்படுத்தியது நமது தர்மம். புதிது புதிதாக நிலைமை இப்போது மாறுகிறது. என்ன மாறினாலும் ஸ்வதர்மம் என்று ஒன்று உண்டு. ஸ்வதர் மமா நிதனம் ச்ரேய : இந்த காலத்தில் முழுவதும் வேதத்தினை படிக்க முடியாவிட்டாலும் சில விஷயங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும். வித்வான்களை தயாரித்தால் மட்டும் போதாது. அதனை ரசிக்க கூடிய ரசிகர்களையும் தயாரிக்க வேண்டும்.

ஸெளகீகமாக எப்படி இருந்தாலும் தனது தர்மத்தினை தெரிந்து கொள்ள வேண்டும். வித்யாரண்யர் என்பவர் எல்லா வேதங்களுகும் அர்த்தம் சொல்லியுள்ளார். வ்யாகரணம் தெரிந்தால் தான் அர்த்தம் தெரிந்து கொள்ள முடியும். தனித்தன்மை காப்பாற்றாபடுவதற்காக இங்கு முயற்சி நடக்கிறது. நமது தர்மம் சிருஷ்டியிலிருந்து வருகிறது. ஸெளகீகர்களும் ஸ்வதர்மத்தினை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை கடமை என உணர்ந்து செயல்படவேண்டும். வேதம் நமது தர்மத்தின் அடிப்படை. இதனைக் காப்பாற்றினால் எல்லாவற்றினையும் காப்பாற்றியதாகும். ஸம்ஸ்க்ருதத்தை தற்சமயம் கற்றுக் கொள்கிறார்கள். ஸம்ஸ்க்ருதம் மூலமாகவே யாவும் படிக்கப்படுகிறது. ஒழுங்கு முறை ஆங்கிலம் மூலம் தான் ஏற்படுகிறது என்பது தவறான கருத்து. வேதத்திலும் ஸம்ஸ்க்ருதம் தெளிவாக, படிப்படியாக சுருக்கமாக சொல்லப்படுகிறது. இதனை வெளிப்படுத்த வேண்டும். ஸங்கீதம் மனிதனின ஒருமைப்பாட்டிற்காகவும், அமைதிக்காகவும் ஏற்பட்டது. வியாகரணம் எப்படி ஒரு சொல் உச்சரிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. ஸங்கீதத்தினை பல ரிஷிகள் பிரகாசப்படுத்தினார்கள். ஸங்கீதம் மனதை தூய்மைப்படுத்தி, அமைதிப்படுத்துகிறது. '' ம்யூசிக் '' அங்ஙனம் இல்லை. தீக்ஷிதர் கீர்த்தனைகளை ஸம்ஸ்கருதம் மூலம் தெரிந்து கொண்டால் «க்ஷத்திர மஹிமையையும் வரலாற்றினையும் அறிந்து கொள்ள முடியும். தீக்ஷிதர் க்ருதிகள் ஸம்ஸ்க்ருதத்தில் இருப்பதால் இதனை வடக்கில் பிரசாரம் செய்ய உத்தேசிகப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பக்தி அதிகமாக உள்ளது. இதனை வளர்த்தவர்கள் ஆழ்வார்களும், நாயன்மார்களும். பணம் ஆயுதம் இருந்தாலும் தேசத்திற்கு அந்த நாட்டின் உண்மையாகவும், ஒழுக்கமாகவும், பக்தியுடனும் இருந்தால்தான் சுபிக்ஷம் ஏற்படும். நல்ல மனிதர்களை தயார்படுத்த வேண்டும். நம்முடைய தேசத்தின் மரியாதை, தர்மம் யாவும் காப்பாற்றப்பட்டு, தவறான வழியில் செல்வதைக் கட்டுப்படுத்தி சரியான வழியில் கொண்டு சென்று தர்ம பிரசாரம் நடந்து இந்த பள்ளி மூலம் யாவர்க்கும் சிரேயஸ் கிட்ட ஆசீர்வதிக்கிறோம்.

(17-03-98 சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அஹோபிலமட ஒரியண்டல் பள்ளியில் ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 25
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 27
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it