காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -19

ம்முடைய தர்மம் ஸனாதன வைதீக தர்மம். மிகவும் பழமையானது. பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் I தர்ம ஸம்ஸ்தாபனாய ஸம்பவாமி யுகே யுகே II இது கீதை. நல்லோர்களை காக்கவும் தீயவர்களை அழிக்கவும் யுகங்கள் தோறும் நான் தோன்றுகிறேன் என்பதன் இதன் பொருள். எங்கு தேவையோ, மகான்களின் கோரிக்கையோ, அப்போது தீயவர்களிடம் இருந்து நல்லோர்களைக் காப்பாற்ற அவதாரம் தேவைப்படுகிறது. பகவான் எங்கும் நிறைந்தவர். அவரை அடைய மனத்தில் தூய்மை தேவை. பல வித மூர்த்திகள் உள்ளன. மக்களும் உபாசிக்கின்றனர். எந்த மூர்த்தியின் மனம் சாத்வீகமாகிறதோ அதே சமயத்தில் பகவான் அருள் கிடைக்கிறது. ஸத்ஸங்கம் தான் இதனை அளிக்க முடியும். கோயில்கள் மூலம் தர்ம பிரசாரம் ஏற்பட்டு வந்தது. மகான்களின் மூலம் ஏற்பட்டு வந்தது. அரசர்கள் புதிய கோயில்களை கட்டினர். பழைய கோயில்களை புதுபித்தனர். நம்முடைய நாட்டில் குறிப்பாக தென் நாட்டில் தர்ம பிரசாரத்தைத் துவக்கி அதனை கடைபிடிப்பற்காக அவதாரம் ஏற்பட்டது. கேரளத்தில் சங்கர : சங்கர ஸாக்ஷ£த் என்பதற்கு ஏற்ப அஞ்ஞானத்தை அழித்து ஞான தானம் அளிக்க அவதாரம் ஏற்பட்டது.இதற்கு முன் இந்த மூர்த்தி பூஜை தேவையில்லை, பலன் இல்லை, வேதம் இல்லை என்கிறார்கள். துர்பிரசாரம் நடந்து வந்தது. பக்தி, கர்ம, ஞான, மார்க்கங்களை சரியானபடி வழிகாட்டிட ஏற்பட்டது அவதாரம். எட்டு வயதிலேயே எல்லா சாஸ்திரங்களையும் கற்று கனகதாராஸ்தவம் செய்து தேவியின் அருளால் அந்தணப் பெண்மணியின் ஏழ்மையைப் போக்கினார். சங்கரர் மத்திய பிரதேசத்தில் ஓங்காரேஸ்வரர் சன்னதியில் வந்து, குருவின் மூலம் தான் ஞானத்தை பெற வேண்டும் என்ற சாஸ்திரத்தை நிச்சயப்படுத்தினார். தான் ஞானியாக இருந்தும் கோவிந்தபாதர்களிடம் ஞான தீ¬க்ஷ பெற வந்தார். அது போன்று நீங்களும் உத்தியோகம் காரணமாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளீர்கள். சங்கரர் பல உபதேசங்களைச் செய்து உள்ளார். பஜகோவிந்தம், ப்ரச்னோத்தரமாலா போன்றவைகளையும், வேதாந்தத்தின் இரகசியத்தை புரிந்து கொள்ள விவேக சூடாமணியையும், ஆகாரம் முதல் அத்வைதம் வரை கூறியுள்ள பகவத் கீதைக்கு பாஷ்யத்தையும், பிள்ளையார் முதல் ஹனுமான் வரையில் உள்ள எல்லா தெய்வ ஸ்தோத்திரங்களையும் அருளிச் செய்துள்ளார். நாம் இன்று நம்பிக்கைக் கொண்டுள்ளதற்கு மூலகாரணம் சங்கரர். சாஸ்தாரம் மீடே ஸகலார்த்த ஸித்தயே என்று பாடியுள்ளார். உங்கள் வாழ்க்கையில் பக்தி, நல்லொழுக்கம் ஏற்பட பகவானைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம்.

(மதுராவில் அய்யப்ப ஸ்வாமி கோயிலில் ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 18
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 20
Next