சைவம் த்ரயம்பகேஸ்வரர் - நாஸிக்,மஹராஷ்டிரம் சஹ்ய மலைச்சாரலில் கோதாவரி நதி தீரத்தில் உள்ள த்ரயம்பகேஸ்வரரை தரிசித்தால் பா

சைவம்

த்ரயம்பகேஸ்வரர் - நாஸிக்,மஹராஷ்டிரம்

சஹ்ய மலைச்சாரலில் கோதாவரி நதி தீரத்தில் உள்ள த்ரயம்பகேஸ்வரரை தரிசித்தால் பாவம் எல்லாம் அழியும்.

த்ரயம்பகத்திலிருந்து 36 A.e தூரத்தில் உள்ள நாசிக் தொழில்கள் நிறைந்த பகுதி. தற்சமயம் உள்ள கோயிலானது அந்த இடத்தில் இதற்கு முன்பு இருந்த பழமையான கோயிலுக்குப் பதிலாக பாலாஜி பேஷ்வா என்பவரால் கட்டப்பட்டது. வேதத்திலும் வேதசடங்குகளிலும் விற்பன்னர்களுக்கு பெயர் பெற்ற பிராம்மணர்கள் மிகுந்து வாழ்ந்த இடம் த்ரயம்பகம்.


த்ரயம்பகேஸ்வர ஜ்யோதிர் லிங்கத்தின் உச்சியில் உள்ள ஒரு சிறிய துவாரத்திலிருந்து நீர் எப்போதும் தொடர்ச்சியாக வெளிப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. நதி கௌதமி பரமேஸ்வரனுக்கு எப்போதும் அபிஷேகம் செய்து கொண்டிருப்பதுதான் இப்படி தோன்றுகிறது என்று மக்கள் நம்புகின்றனர். ஐந்து முகங்கள் கொண்ட தங்க கவசத்தால் லிங்கம் மறைக்கப்பட்டுள்ளது.