சைவம் ஸ்ரீ விஸ்வநாதர் (வாரணாஸி) - உத்திரப்பிரதேசம் இந்தியாவின் கலாசார, ஆன்மிக, மத மையமாக விளங்குவது காசி அல்லது வாரனாசி என அழைக்கப்பட

சைவம்
ஸ்ரீ விஸ்வநாதர் (வாரணாஸி) - உத்திரப்பிரதேசம்.

இந்தியாவின் கலாசார, ஆன்மிக, மத மையமாக விளங்குவது காசி அல்லது வாரனாசி என அழைக்கப்படும் தலம். தெற்கு வடக்காக ஒடும் கங்கையின் கரையில் தத்துவமும், ஆன்மிகமும் சேர்ந்து இங்கு வளர்ந்து வந்தன. வேதத்தினை நான்காக வகுத்துக்கொடுத்த வியாஸ முனிவர் இங்கு தங்கி பிரம்மஸ¨த்ரத்தினை எழுதினார் என்று சொல்லப் படுகிறது. ஆதிசங்கரர் தான் எழுதிய பிரம்மஸ¨த்ர, உபநிஷத், பகவத்கீதை பாஷ்யங்களை இங்கு வியாசரை சந்தித்து அளித்து ஒப்புதலும் ஆசியும் பெற்றார். காசி விஸ்வேஸ்வரரை ஆதிசங்கரர் பஞ்சம (தாழ்ந்த) ஜாதியினராக தரிசித்து அவரால் மஹாவாக்யமாகிய "அஹம் பிரம்மா" என்ற வாக்கியத்திற்கு உண்மையான பொருளை தெரிந்து அதனால் உந்தப்பட்டவராக மனீஷா பஞ்சகம் என்ற கிரந்தத்தை அருளிச் செய்தார்.

ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று காசி. பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்க தலங்களில்

ஒன்று. இங்குள்ள லிங்கம் வடிவத்தில் மிகவும் சிறியது. இங்கு பக்தர்கள் தங்கள் கைகளால் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். காசியில் அமர்ந்து இறப்பவர்களின் காதுகளில் தாரக மந்திரமாகிய ராம மந்திரத்தை விச்வநாதர் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுவதால் பலர் தங்களது கடைசீ காலத்தினை இங்கு வந்து கழிக்க விரும்புகின்றனர். காசியில் விச்வநாதர் சிவ வடிவில் பக்தர்கட்கு ராம மந்திரத்தை வெளிப்படுத்த ராமேஸ்வரத்தில் சிவனை ராமன் வழிபட்டார். ஸ்ரீ விஸ்வநாதரின் பழமைக்காலப் பெயர் ஸ்ரீ மர்கடேஸ்வரர்