கேதாரநாத் - ஹிமாலயம் சுமேரு மலை என்று அழைக்கப்படும் ருத்ர ஹிமாலய மலைப் பகுதியில் 11735 அடி உயரத்தில் கேதாரநாத் ஆலயம் அமைந்துள்ளது கேதரம் சிவபுராணத்திலும் ம

கேதாரநாத் - ஹிமாலயம்

சுமேரு மலை என்று அழைக்கப்படும். ருத்ர ஹிமாலய மலைப் பகுதியில் 11735 அடி உயரத்தில் கேதாரநாத் ஆலயம் அமைந்துள்ளது.

கேதரம் சிவபுராணத்திலும் மஹாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்ரிநாத்தில் விஷ்ணு நரனாகவும் நாராயணணாகவும் தவம் செய்து வந்ததாக வரலாறு பேசப்படுகிறது. அந்த இரண்டு உருவங்களிலும் இருந்த ரிஷிகள் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டனர். அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து சிவன் அவர்கள் முன்தோன்றி அவர்கள் விருப்பத்திற்கு இணங்க ஜ்யோதிர் லிங்க வடிவில் கேதாரத்தில் தங்கினார்.

பத்ரிநாத்தை போன்றே பனிக்காலத்தில் கேகாரநாத் மூடப்பட்டுவிடுகிறது. அப்போது இறைவன் தன் பக்தர்களுடன் "உகிமத்"என்ற இடத்திற்கு வந்து விடுகிறார்.