குருதக்ஷிணை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

படிப்பு முடிந்து சிஷ்யன் தருகிற தக்ஷிணை என்னவென்று மநு சொல்லியிருக்கிறார். பசு, பூமி, ஸ்வர்ணம், வஸ்த்ரம், தான்யம், காய்கறி, குடை, பாதரக்ஷை முதலியவற்றில் ஒரு சிஷ்யனால் எது முடியுமோ அதைத் தரலாம் என்கிறார்.

முதலிலேயே பேசிக்கொண்டு கொடுக்கல் – வாங்கல் பிஸினஸாக “வ்ருத்யர்த்தம்” கற்பிக்கும் வாத்யார் கற்றுக்கொள்ளும் மாணவன் இரண்டு பேரையுமே ச்ராத்தம் முதலான கர்மாக்களில் ப்ராஹ்மணர்களாக வரிக்கக்கூடாது என்றே மநு தீர்ப்புக் கொடுத்திருக்கிறார். இப்படிக் கற்றுக் கொடுப்பவர்தான் “உபாத்யாயர்” என்று ஞாபகமிருக்கலாம்.

ரக்த பந்துக்கள் மட்டுமேயான ஒரு குலத்திலிருந்து வேதத்தில் அதிகாரமுள்ள எல்லாருக்கும் பொதுவான சாகைக்கு கல்வி போதனை வளர்ச்சி கண்டபோது ப்ராம்மணர்களோடு க்ஷத்ரிய, வைச்யர்களுக்கும் சேர்த்து போதிக்கும் பெரிய குருகுலங்கள் ஏற்படலாயின என்று தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குலம், சாகை, சாத்ரன், சரணம் முதலியன
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பூர்வகாலக் கலைகளும் ஸயன்ஸ்களும்
Next