பரிசுத்தி செய்துகொள்ளும் பணி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அது லக்ஷ்யமான உச்ச ஸ்தானத்தில், கர்மா எல்லாம் போய் மனஸ் பரிசுத்தியாகி ஒருமுகப்பட்டு நின்ற பிற்பாடுதான் அந்த ஸ்தானத்துக்குப் போகமுடியும். அப்படிப் போகிற மட்டும் நன்றாக த்வைத ஸாதனைகளைத்தான் பண்ணவேண்டும் – ஆனாலும் அத்வைத நினைப்பை ஒரு அடியிழையாக அறாமல் வைத்துக்கொண்டே.

பரிசுத்தி செய்வதற்காக ஸ்வதர்மப்படி அவரவருக்கு வாய்த்த கார்யங்களை வேத சாஸ்த்ரம் விதித்தபடி பண்ணவேண்டும். காம க்ரோதாதி அழுக்குப் போவதற்காக மனஸை பகவானிடம் ப்ரேமையில் நனைத்துக்கொண்டு பக்தியில் உருகவேண்டும். சும்மாவுக்காக இப்போது நாம் இருக்கிற ஸ்திதியிலேயே, ‘நான் எதுவும் பற்றாத ஆத்மா’ என்று கதை பண்ணிக்கொண்டிருப்பதில் ப்ரயோஜனமில்லை. அதிலே (ஆத்மாவிலே) தான், என்ன மாயையோ, இத்தனை அழுக்கை ஜன்ம ஜன்மமாக ஏற்றிக் கொண்டிருக்கிறோமே! முணுக்கென்றால் எத்தனை கோபம், பயம் எல்லாம் வந்து விடுகிறது? எத்தனை ஆசைகள் இழு இழு என்று இழுக்கின்றன?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is த்வைத ருசிக்குத் துன்பம் தவிர்க்கவொண்ணாதது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாஷை ஆராய்ச்சி, அதிலும் பரமாத்ம - ஜீவாத்மா
Next