வருங்காலத்துக்காக : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வித்வான்கள் பணத்துக்காகப் பறக்கப்படாது, ப்ராபல்யத்துக்காகப் பறக்கப்படாது என்று நான் சொன்னதால் அவர்களைக் காயக் காயப் போடவேண்டும், எந்த ரெகக்னிஷனும் இல்லாமல் மூலையில் தள்ளி வைக்க வேண்டுமென்று மற்ற ஜனங்கள் அர்த்தம் பண்ணிக்கொண்டவிடக் கூடாது. பரம த்யாகிகளாக இருந்தாவது வித்யகைளைப் பேண வேண்டுமென்பது அவர்களுடைய லக்ஷ்யமாக இருக்கவேண்டுமென்பது போலவே, அவரவரும் ஏதோ கொஞ்சமாவது பணம், பொழுது முதலியவற்றை த்யாகம் செய்து நம்முடைய தேசத்தின் இந்த அறிவுப் பிதுரார்ஜிதம் நசித்துப்போகாமல் காப்பாற்ற வேண்டுமென்பது மற்றவர்களுடைய லக்ஷ்யமாயிருக்க வேண்டும். அதாவது, இப்போதுள்ள வித்வான்களையும் மற்ற பண்டைய கலைகளை அறிந்தவர்களையும் தேடிக் கண்டுபிடித்து பொருளாதார ரீதியிலும், ஸமூஹ கௌரவத்திலும் அவர்களுக்கு உயர்வு தந்து, அவர்களுக்கு சிஷ்ய பரம்பரை உண்டாகி இந்த வித்யைகள் வருங்காலத்துக்கும் போகும்படியாகப் பண்ணவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நேரில் கண்ட ஆதர்ச வித்வான்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உயிரோடு ஒட்டிவைக்க வேண்டும்
Next