சிவராத்திரி

சிவராத்திரி

"இறைவன் பெருமை சொல்வது வெறும் புராணம். அவன் அடியார்களின் பெருமை சொல்வது பெரிய புராணம்!"

மனிதனை, மனிதன் இணைக்கும் புண்ணிய நதிகள் கங்கையும், காவிரியும். கங்கைக் கரையிலிருந்து காவிரிக்கு வருவார்கள். காவிரியிலிருந்து கங்கைக்குச் செல்வார்கள். தீர்த்தத்தின் மூலமாக ஆன்மிக ஒருமைப்பாடு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி. காசி - ராமேஸ்வரம் என்று சேர்த்துச் சொல்வார்கள். இரண்டு மூலைகளையும் யாத்திரை மூலம் தரிசிப்பார்கள்.

நாட்டில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்கள் உள்ளன. ஒண்ட், நாகநாத், சம்புகேஸ்வரம், எல்லோரா, குஷ்வனேஸ்வரம் இப்படி ஐந்து சிவ ஷேத்ரங்கள் மகாராஷ்டிரத்தில் மட்டும் உள்ளன. குஜராத்தில் சோமநாதஷேத்ரம், ம.பியில் உஜ்ஜயினியும், உ.பியில் கேதார்நாத்தும், காசியும் ஜோதிலிங்க ஷேத்திரங்கள். இந்த ஜோதிலிங்க ஷேத்திரங்களில் பரமேஸ்வரன் விசேஷமாக அருள் பாலிக்கின்றான்.

சிற்பியால் செதுக்கப்படாமல் இயற்கையாகவே பகவானுடைய வடிவம் எங்கு இருக்கிறதோ அது ஜோதிர்லிங்க ஷேத்ரம். ஒவ்வொரு ஷேத்ரங்களுக்கும் அதன் மகிமையுண்டு. இந்த ஜோதிலிங்க ஷேத்ரங்களின் மகிமையைத் தெரிந்து கொண்டாலே நம் பாவங்கள் விலகி, இந்த ஜோதியின் அருள் பெற முடியும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, ராமேஸ்வரம் ஜோதிர்லிங்க ஷேத்ரம். தவிர பஞ்சபூத ஷேத்ரங்கள் என்று உண்டு. பிருத்விஷேத்ரம் - காஞ்சீபுரம், ஜல ஷேத்ரம் ஜம்புகேஸ்வரம், ஜோதி ஷேத்ரம் திருவண்ணாமலை, வாயுஷேத்ரம் காளஹஸ்தி. ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்தது ஆகாச ஷேத்ரம் சிதம்பரம் இப்படி ஐந்து வடிவத்திலும் சிவபிரான் அருள்பாலிக்கிறான். நாயன்மார்கள் 63 பேர், பரமேஸ்வரனையே அல்லும் பகலும் போற்றி வழிபட்டவர்கள். அவர்களின் பெருமை சொல்வது பெரிய புராணம். இறைவனின் பெருமை சொல்வது வெறும் புராணம். அவனது அடியார்களின் பெருமை சொல்வது பெரிய புராணம்.

ஹிந்து சமயத்திற்கு சைவம் - வைணவம் இரண்டும் இரு கண்கள், எல்லா ஊர்களிலும் இவ்விரு ஆலயங்களும் இருக்கும். மாசி மாதம் சிவராத்திரி வருகிறது. சாதாரண நாளில் சிவஸ்மரணை செய்வதே புண்ணியம். அதுவும் சிவராத்திரியன்று சிவபூஜை செய்வதென்பது அபரிமிதமான பலன் தரக்கூடியது. இதன் மூலம் பரமேஸ்வரனின் அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிட்டும் என்பது ஊறுதி. நம் பாவங்களைத் தான், வாங்கிக் கொள்பவன் அவன். அவன் தலையில் சந்திரன் இருக்கிறான். சந்திரனை விடப் பாவம் செய்தவர் யார்? அவனையே தலையில் சுமக்கும் சிவன், நம்மையெல்லாம் ஏன் காப்பாற்ற மாட்டான்? சிவனை பூஜிப்பது மிக சுலபம். இன்னும் சொல்லப்போனால் செலவில்லாதது. நீரினால் அபிஷேகம் செய்து வில்வத்தால் பூஜித்தால் போதும். மேலும் அவர், தான் விஷத்தை உண்டு, நமக்கு அமிர்தம் அளிப்பவர்.

அப்பேற்பட்ட சிவபிரானை, சிவராத்திரி நாளில், ஆத்மார்த்தமாக பூஜித்து சகல சௌக்கியங்களையும், சகலரும் பெற வேண்டுமாய் வாழ்த்தி, ஆசீர்வதிக்கின்றாம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஐயப்பன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  நவராத்திரி
Next