தீயகுணங்களை நீக்குவோம் தீபஒளி ஏற்றுவோம்

தீய குணங்களை நீக்குவோம் தீப ஒளி ஏற்றுவோம்

உலகில் பல உயிரினங்கள் இருக்கின்றன. தீபாவளி பண்டிகை போன்றவைகள் எல்லாம் மனித சமுதாயம் தவிர எந்த ஒரு உயிரனங்களுக்கும் கிடையாது. ஒவ்வொரு உயிரினமும் உறங்குவது, இதைத் தவிர வேறு மனிதனைப் போல படிப்பது, வேலை செய்வது, சம்பாதிப்பது வியாதிகள் இருந்தால் தானே ஆஸ்பத்ரிக்கு சென்று வியாதியை போக்கி கொள்வது போன்றவைகள் எல்லாம் உயிரினங்களுக்குத் தெரியாது.

மனிதன் ஒருவன்தான் தன் உறுப்புகள் மூலமாக தன் புத்தியின் மூலமாக நல்லதையே தேடிக் கொள்வான். துன்பத்தையும் தேடிக் கொள்வான்.

மற்ற எந்த உயிரினத்துக்கும் துன்பம் தானாக, வருமே தவிர தேடிக் கொள்ளத் தெரியாது. மனிதன் தேவனாக வாழ வேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. ஆனால் மனிதன் மிருகம் போல் புத்தியை உபயோகப்படுத்தாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் போல் வாழ்க்கை நடத்தி அவன் அசுரனாக ராட்சதனாக ஆகிவிடுகிறான். இப்படித்தான் நரகனும் ராவணனும் கூட தன் செய்கையினால் ராட்சதனாக ஆனான் என்று சொல்வார்கள்.

தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. 'ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை எல்லோரும் இன்பமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கண்ணபிரானால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் இன்றும், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருவதற்கு முன்பே, தீபாவளி பண்டிகை வரும் போது, நரகாசுரனின் கதை, நிலையை நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நினைத்து பார்க்கத்தான் செய்கிறோம்.

நரகாசுரன் ஒரு காலத்தில் இருந்ததாக கதை கூறினாலும் இன்றும் நரகாசுரனின் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இருந்து வருகிறார்கள். அன்று ஒரு நரகாசுரன். ஒரு கண்ணபிரான். இன்று பல நரகாசுரர்களின் நிலை. பலருடைய வாழ்க்கையில்.

ஆகவே அனைவரும் தீபாவளி திருநாளன்று ஸ்ரீ கண்ணபிரானை மனதில் நினைத்து, நரகாசுரனின் தீய குணங்கள் நம்மிடம் இருந்து அகலுவதற்கும், கண்ணபிரான் சொன்ன எல்லோரும் இன்புற்றிருக்கும் வேண்டும், எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வாக்கினை பொய்யாக்காமல், அனைவரையும் ஆசிர்வதிக்கிறோம்!'


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is மனித வாழ்க்கை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஒற்றுமை ஒங்கட்டும்
Next