த்து பசுக்களைப் பராமரித்துப் போற்றினால் நாடும் வீடும் நலம் பெறும்

பசுக்களைப் பராமரித்துப் போற்றினால் நாடும் வீடும் நலம் பெறும்.

புராதனப் பெருமை வாய்ந்த ஆலயங்களக்கும், இன்று பிரபலம் ஆகியுள்ள புதிய

ஆலயஙகளக்கும் என்ன வித்தியாசம்? சில ஆலயங்கள்

புராதனச்சின்னங்களாகவே கூட மாற்றப்பட்டுள்ளன. எல்லாமே வழிபாட்டுக்க

உரியவைதானா?

இந்த ஆலயங்கள் மூன்று வகைப்படும் முதலாவது ரிஷிகளும் மகான்களும்

சென்று வழிபட்ட சுயம்புவான மூர்த்திகள் எழுந்தருளியுள்ள புரதான ஆலயம்

இவற்றிற்குப் புராணப் பின்னணியும் இருக்கும். இரண்டாவது இத்தகைய

முனிவர்களும் மகான்களும் தமது ஆண்மீக வழிப்பாட்டிற்கு பிரதிஷ்டை செய்து,

பூஜை செய்து வழிபட்ட மூர்த்திகள் அமைந்துள்ள ஆலயம் இவையும் புராதனப்

பெருமை வாய்ந்தவை தான் மூன்றாவது அரசர்கள் போரில் அடைந்த

வெற்றியையோ ஆட்டியில் நேர்ந்த முக்கியமான வைபவத்தையோ கொண்டாடும்

விதமாகக் கட்டிய சிற்ப அற்புதங்கள் நிறைந்த ஆலயங்கள். இவை

அவர்களுடைய பெருமையைப் பறைசாற்று உருவானவை இவை வரலாற்றுச்

சிறப்புமிக்க கோயில்களும் கூட.

இந்த மூன்று வகைகளைத் தவிர, இன்று கிராமங்களிலும் புறநகர்ப்

பகுதிகளிலும் குடியிருப்புகளிலும் பல புதிய கோயில்கள் உருவாகி வருகின்றன.

இவை அளவில் சிறியவையாகவும், பெரியவையாகவும் இருக்கின்றன. இங்கே

பிரதிஷ்டை செய்ய்பபட்டுள்ள மூர்த்தங்களும் பெருமை வாய்ந்தவைதாம்.

ஆங்காங்கே மக்கள் சென்று வழிபட வசதி செய்யப்பட வேண்டும் என்ற நல்ல

நோக்கத்துடன் இவை நிறுவப்படுகின்றன. இவற்றில் இலக்கியப் பேருரைகள்

நடைபெறகின்றன. மக்களிடையே பக்தியைப் பரப்பி சமூக சேவையும்

செய்கிறார்கள்.

கிராமங்களில் முக்கியமாக சிவன், விஷ்ணு, அம்மன் ஆகிய தெய்வ

ஆலயங்கள் அடிப்படையாக நிறுவப்பட வேண்டும். புராண வரலாற்றுப் பின்னணி,

ஆகியவை கொண்ட அநேக ஆலயங்கள் இன்றும் கிராமங்களில் உள்ளன.

அவற்றை அரசர்களும், பிரபுக்களும், மானியமும், நெல் விளையும் நிலங்களும்,

ஆடு, மாடு, போன்ற கால்நடைகளும் தந்து பராமரிப்பை நன்கு கவனிக்க ஏற்பாடு

செய்து வைத்திருக்கிறார்கள்.

கலைக் கண்ணோட்டத்துடன் சிற்பங்கள், ஒவியங்கள், அலங்கார

மண்டபங்கள் ஆகியவற்றை அழகுற வைத்து அமைக்கப்ட்ட பல வரலாற்றுக்

கோயில்கள், இன்று நமது நாட்டின் கலைப்பெருமைக்குச் சான்றாக

விளங்குகின்றன. இவற்றைத் தொல்பொருள் ஆராயச்சி நிலையத்தார் பாதுகாக்கும்

பொறுப்பை மேற்கொண்டு பராமரித்து வருகிறார்கள். இங்கே கல்வெட்டுகள்

அந்தக் காலத்துச் சரித்திரக் குறிப்புகளையும் தருகின்றன. ஆகவே இவை புராதனப்

பெருமையை நமக்கு அருளியவை என்பதால் இவற்றில் உறையும் தெய்வத் திரு

உருவங்களும் புனிதமும் மேன்மையும் கொண்டவைதாம்.

ஆகவே இந்த எல்லாவகை ஆலயங்களும் வழிபாட்டுக்குரிய பெருமை

மிகுந்தவைதான். பின்னணி வெவ்றோக இருந்தாலும், இவற்றில் முறைப்படி

பூஜையும் வழிபாடும் நடைபெறுகிறது. மக்களிடையே பக்தி உணர்வைப் பரப்ப

இவை எல்லாமே உதவுகின்றன. ஆகவே மக்கள் பக்தியுடன் ஈடுபட்டு வழிபாடு

செய்வதே முறை.

இவை தவிர சில ஆலயங்களில் அருள் வாக்கு சொல்வது, மருளை

நீக்குவது, பிரார்த்தனைகள் நேர்ந்து கொள்வது, பால்குடம் எடுப்பது, காவடி

எடுப்பது போன்ற பலவும் முக்கியமாகச் செய்யப்படுகின்றன. இவற்றுக்காகவும்

பக்தர்கள் பெரும் அளவில் வந்து கூடுகிறார்கள். இவையும் இறைவனுடைய

சக்தியை நமக்கு உணர்த்தி அருளைப் பெருக்கி ஆன்மிக உணர்வை

வளர்ப்பவைதாம். இவற்றிலும் நாம் சென்று முறைப்படி வழிபடுவதே சிறப்பாகும்.

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு என்ன? சிவ பெருமானுக்குத் தனியாகச் சன்னிதி

இல்லாத ஆலயங்களில் இந்த வழிபாட்டை செய்வது எப்படி?

வளர்பிறையில் திரயோதசியன்று, தேய்பிறையில் திரயோதசியன்றும் மாலை

நாலரை மணி முதல் ஆறு மணி வரையில் உள்ள காலம் பிரதோஷகாலம் என்று

சொல்லப்படும். இது சிவபெருமானுக்கு விசேஷமான நாள் ஆகும். இறைவன்

நந்தியின் இரு கொம்புகளுக்கு விஷேமான நாள் ஆகும். இறைவன் நந்தியின் இரு

கொம்புகளுக்கு நடுவில் நின்று நடனம் செய்து தரிசனம் அருளும் புண்ணிய

காலமாக இது கருதப்படுகிறது. பிரதோஷம் என்பது தவறுகளையும் மகா

பிரதோஷம் என்பது மிகப் பெரிய தவறுகளையும் நேரச் செய்யக் கூடிய காலமாம்.

அந்த நேரத்தில் இறைவனை வழிபாடு செய்வதால் துன்பங்கள் யாவும் நீங்கும்,

தோஷமே வராது. வழிபடத் தவறினால் தீங்குகள் நேரும், தோஷங்கள்

சம்பவிக்கும்.

சிவபெருமானையும், சிவனுடைய அம்சங்கள் பொருந்திய தெய்வங்களையும்

இந்தக் காலத்தில் வழிபட வேண்டும். இவை தவிர நரசிம்ம மூர்த்தியையும்,

இராமரையும் வழிபடலாம். நரசிம்மர் சந்தியாகாலத்தில் அவதரித்தார். அதனால்

அந்த நேரத்தில் வழிபடுவது பொருத்தம். இராமர் தனது இனிய உருவத்தாலும்

பண்புகளாலும் அனைவரையும் இரமித்து மகிழச் செய்பவர். அதனால் அவரை

வழிபடுத்தும் உசிதம். சிவன், சிவாம்சம் கொண்ட மூர்த்திகள், நரசிம்மர், இராமர்

ஆகிய தெய்வ உருவங்களே இந்த நேரத்தில் வழிபடுவதற்குரியவை.

பிரதோஷ காலத்தில் வீட்டிலேயே இந்த மூர்த்திகளை வைத்துப் பூஜை

செய்து வழிபடலாம். காலையிலிருந்து விரதம் இருந்து வழிபட்டு, மாலையில்

பூஜையை முடித்து உணவருந்தலாம். கோயில்களில் சிவபெருமானுக்குப் பூஜை,

அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதைக் கண்டு வழிபாடு செய்யலாம்.

ஆலயத்தில் சோமாஸ்கந்தரை வழிபட்டு, ஊர்வலம் நடைபெறும் போது உடன்

சென்று துதித்து, பிறகு பிரதோஷ வழிபாடு செய்யலாம்.

இப்படிப்பட்ட வசதிகள் இல்லாதபோது, சிவசம்பந்தமான மூர்த்திகளை

வழிபட்டால் போதுமானது. தட்சிணாமூர்த்தி, சுண்டேசுவரர் போன்ற மூர்த்திகளை

வழிபடலாம். கணபதி, முருகன் ஆகிய தெய்வ உருவங்களைக் கூடச்

சிவபெருமானை நினைத்துக் கொண்டு வழிபடலாம்.

அதிகம் செலவு செய்ய முடியாதவர்கள் எளிய முறையில் பூஜை செய்வது எப்படி?

அலுவலகத்துக்குப் போகிறவர்கள் நேரம் குறைவாக இருக்கும்போது வழிபடுவது

எப்படி? மானஸீக பூஜை என்பது என்ன?

நாம் அன்றாடம் எததனையோ செலவுகளைத் தேவை இல்லாமற் போனாலும்

கூட மேற்கொள்கிறோம். ஆகையால் பூஜைக்கு அதிகம் செலவு செய்ய

முடியவில்லை என்று சொல்லுவது பொருந்தாது. ஜலத்தினால் அபிஷேகம்,

புஷ்பத்தினால் அர்ச்சனை, அலங்காரம், நைவேத்தியம், ஆரத்தி, நமஸ்காரம்

முதலியவைகள் மூலமாகப் பூஜை செய்வது வெளிப்புறப் பூஜை - பாஹ்ய பூஜை

என்பது. மேற்சொன்ன இத்தனை உபசாரங்களையும் மானஸீகமாக, பொருள்

செலவில்லாமல் ஆராதனை செய்வது மானஸீக பூஜை.

பதினாறு வகையான உபசாரங்களுடன் வழிபடுவது உத்தமம். அதாவது,

மூர்த்தியில் பகவானை தியானிப்பது, மூர்த்தியில் பகவானை ஆவாஹிப்பது,

ஆவாஹித்த பகவானுக்கு ஆசனம் அளிப்பது, ஆசனம் அளித்து அர்க்கயம்

விடுவது, பகவானுக்கு ஆசமனம் அளிப்பது, பால் - தயிர் - சந்தனம் போன்ற

பொருட்களால் அபிஷேகம் செய்வது, வஸ்திரம் அணிவிப்பது, புஷ்ப அலங்காரம்,

அர்ச்சனை முதலியன செய்வது, தூபம் காட்டுவது, தீபம் காட்டுவது, நைவேத்தியம்

செய்வது, அநேக வித ஆரத்திகள், புஷ்பாஞ்சலி செய்வது, பிரதட்சணம் செய்வது,

அபராத, ஷமாபண, பூர்வக நமஸ்காரம் செய்வது, இவையாவும் இந்தப் பதினாறு

உபசாரங்களில் அடங்கும். (கந்தம்) புஷ்பம், தூபம், தீபம் நைவேத்தியம்

ஆகியவை சுருக்கமாகப் பூஜை செய்வதற்குரிய ஐந்து உபசாரங்கள். இதைப்

பஞ்சோபசாரம் என்று கூறுவார்கள். இவ்வளவு பொருட்களும் கிடைத்தால்,

அவைகளால் பூஜை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எந்தப் பொருள்

இல்லாமற் போகின்றதோ, அந்தப் பொருளின் பிரதிநிதியாகப் புஷ்பத்தையோ,

அட்சைதையையோ சுவாமியின் மேல் இடலாம். இந்தப் பூஜைகளையே மனத்தாற்

பாவித்து அர்ப்பணமும் செய்து விடலாம். இப்பூஜைகள் மூலம் வாழ்க்கையில்

ஏற்படக் கூடிய துன்பங்களும் குறையும். ஆத்யாத்மிக விசாரமும் ஏற்படும்.

அலுவலகத்திற்குப் போகிறவர்கள், இம்முறையில எந்த விதத்திலும் பூஜை

செய்யலாம். சுருக்கமாகச் செய்வதில் தவறு இல்லை. ஆனால் நேரம்

இருக்கும்போது, நிதானமானக ஷோடசோபாரப் பூஜை செய்யலாம்.

பித்ரு தேவதைகளின் நிலை என்ன? அவர்களுக்குத் தனி உலகம் உள்ளதா?

அவர்களுடைய ஆசியினால் குடும்பத்துக்கு நன்மை ஏற்படுமா? பித்ரு

கர்மாவைச் சரியாகச் செய்யாவிட்டால் என்ன தீமை ஏற்படும்?

பித்ருலோகம் இருப்பதும் அங்கே பித்ரு தேவதைகளாக மூதாதையர்

இருப்பதும் உண்மை. என்பதைச் சான்றுகளுடன் சாஸ்திரங்களும் கூறுகின்றன.

அவர்களுக்கு நாம் பிதுர்கர்மாவைக் கட்டாயம் செய்தாக வேண்டும். தோஷமும்

அதனால் குடும்பத்தில் பாதிப்புகளும் நிச்சயம் உண்டாகும். புருஷதேவதை மட்டும்

இன்றி, பித்ரு, மாத்ரு, (தாய்வழி, தந்தைவழி) தேவதைகள் அனைவருக்குமே

இந்தக் கடமைகளை விடாமற் செய்ய வேண்டும்

சிலபேர் கயாவுக்குப் போய்ச் சிராத்தம் செய்து, பிரம்ம கபாலத்தில் பிண்டம்

போட்டு விட்டு வந்தால், அப்புறம் கர்மாக்களைச் செய்ய வேண்டியதில்லை என்று

கருதுகிறார்கள். இது தவறு, கங்கா ஸ்நானம் செய்வது மோட்ச பதவியை அளிக்கும்

என்பதனால், கங்கையில் நீராடியவர்கள் மறுபடி தினம் கங்கா ஸ்நானம் செய்ய

வேண்டியதில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அதே போலப் பிரும்ம

கபாலத்தில், போட்ட பிறகும், தொடர்ந்து நமது பித்ருக் கடன்களைச் செய்து

வருவதே முறை. உடல் நலம் இல்லாதவர்களும், வம்சவழி இல்லாதவர்களும் கூட,

மூதாதையர்களுக்கு அடுத்தவர் மூலம் இந்தக் கடமையைச் செய்தாக வேண்டும்.

ஜோதிஷம் சாஸ்திரத்தில் எத்தகைய அங்கம் வகிக்கிறது? எதிர்காலத்தைப்

பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பது இறைவனின் சித்தமாக

இருக்கும்போது, நாம் அதை அறிய முற்படுவது சரியாகுமா?

ஜோதிஷ சாஸ்திரம் என்பது வேதத்தின் கண்ணாக விளங்குகிறது. உடம்புக்கு

எப்படி கண் ஒளி தந்து வழிகாட்டுகிறதோ, அதைப்போல வேத விஷயங்களைத்

தெரிந்து கொள்ள ஜோதிஷம் உதவுகிறது? ஆன்மிகம், மேல் உலக விஷயங்கள்

ஆகியவை கண்ணுக்கு தெரியாதவை. வேதங்கள் அவற்றை நமக்குக் காட்ட

ஜோதிஷ சாஸ்திரம் உதவுகிறது.

ஜோதிஷ சாஸ்திரத்தை மூன்று விதமாக நாம் பயன்ப் படுத்திக் கொள்ளலாம்.

முதலாவதாக நாடு முழுவதும் சுபிட்சம் பெறத் தேவையான, வேதங்களில்

கூறப்பட்டுள்ள காரியம், கர்மம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள அது வழி

காட்டியாக இருந்து உதவுகிறது. இரண்டாவதாக, நாட்டுக்கு ஏற்படக் கூடிய

தீங்குகளை, முன்கூட்டியே அறிந்து கொண்டு, தகுந்த பரிகாரங்களைச் செய்து,

மொத்தமாகக் கெடுதல் வராமல் தடுக்க அது உதவுகிறது. மூன்றாவதாக

தனிமனிதனின் வாழ்க்கையில இன்ப, துன்பம், தனிப்பட்ட லாபங்கள், இழப்புகள்

ஆகியவற்றை எடுத்துக் கூறி, ஜாதகனின் பிறப்பு முதல் மரணம் வரை ஓர்

அங்கமாகவே இருந்து உதவ இது தேவைப்படுகிறது?

இவ்விதம் சொல்லப்பட்டு, அன்றுமுதல் இன்று வரையில் அது இந்த

நல்லமுறையில் பயன்பட்டு வருகிறது. இன்று மூன்று விதத்திலும் ஜோதிஷ

சாஸ்தீரத்தை நாம் உபயோகித்துக் கொள்ளலாம். அதற்காக வருங்காலத்தைப்

பற்றித் தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. இவ்விதம் செய்யக்கூடாது

என்ற கட்டளை. ஏதும் இல்லை. இதனால் இரண்டு விதப் பிரயோசனம் உண்ட.

தீமையை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் ஓரளவு தடுத்துக் கொள்ளவும்,

மனப்பக்குவம் பெறவும், அது உதவும். நன்மையை அதைப் போல முன்னால்

உணர்ந்து கொண்டால் அனாவசியப் பெருமையும் செருக்கும் ஏற்படாது.

பொறமையுடனும், பொறுப்புடனும் வாழ்க்கையை நடத்த நம்மைத் தயார் செய்து

கொள்ளலாம். அகங்காரம் இல்லாத வாழ்க்கை அமைதியுடன் அமையும்.

ஒருகாலத்தில் ஜோதிஷத்துக்கு இவ்வகையான உபயோகங்கள் இருந்தன.

இன்றும் அதை அடிப்படையைப் பயன்படுத்துவது சரியானதுதான், கெடுதல் ஏதும்

இல்லை. விதியை மதியால்வெல்லாம் என்று சொல்லுவார்கள். மார்க்கண்டேயன்,

சாவித்ரி, நசிகேதஸ் போன்றவர்களின் கதைகள் இதை நமக்கு எடுத்துச்

சொல்லுகின்றன. எந்தத் தீமையும் கூடப் பரிகாரமாக நாம் செய்யும்போது,

இறையருளை வேண்டும் போதும், அதன் வேகத்தைக் குறைக்கும்.

ஆடம்பரமான கல்யாணங்கள் அவசியமா? ஜானவாசம், வரவேற்பு போன்றவற்றின்

பின்னணி என்ன? நமது விவாகமுறையின் அம்சங்கள் எவை?

விவாகம் என்று சமஸ்கிரதச் சொல்லுக்கு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில்

பதிந்து அந்த இடத்தைச் செழிக்கச் செய்வது என்று பொருள். பெண் பிறந்த

இடத்தை விட்டுப் புகுந்த இடத்தில் குடியேறி, அந்தக் குடும்பத்தைத் தழைக்கச்

செய்கிறாள். இதனால் விவாகம் ஒரு பெண்ணின் சிறப்பை உயர்த்தவே

பயன்படவேண்டும். இந்த முறையில் பூர்வ ஜன்மத் தொடர்பை ஒட்டி, நன்மை

பெற ஆணும் பெண்ணும் ஒன்ற சேருகிறார்கள். சுதந்திரமாக இருந்து நிலையை

விட்டுப் புதிய பொறுப்பைச் சேர்ந்து ஏற்க இருவரும் இணைகிறார்கள்.

ஒருபாரத்தைப் பொறுமையுடன் இணைந்து இழுத்துச் செல்ல இரண்டு மாடுகள்

நுகத்தடியில் பூட்டப்பட்டு செலுத்தப்படுவதைப் போல, குடும்பம் என்ற பொறுப்பு

மிகுந்த பாரவண்டியைக் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இல்லற தர்மம்

வழுவாமல் கொண்டு செல்ல தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இதை

உணர்ந்தும் விதமாக மணமகனின் தலையில் நுகத்தடியை வைத்து மந்திரங்களைச்

சொல்லும் சடங்கும் செய்யப்படுகிறது.

இதில் அக்னிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். அக்னி சாட்சியாக கணவன்

மனைவியைக் கைப்பிடிக்கிறான். அவர்களுடைய வாழ்வில் ஏற்படக் கூடிய

திருஷ்டி தோஷங்கள் இந்த அக்னியில் அழிந்து போகின்றன. ஒன்பதுவித

சமித்துக்களை நெருப்பில் இட்டு, நெய்வார்த்து ஹோமம் செய்யும்போது எழும்

புகை மருத்துவத்தன்மை உடையதாகிறது. இது மணமக்களுக்கு உடல் பலத்தையும்

அளிக்கிறது. எல்லாத் தீமைகளையும் அழிக்கும் அக்னி, திருமணத்துக்குச்

சாட்சியாக நின்று, தூய்மையான தாம்பத்திய உறவுக்குப் புனிதமான ஆரம்பத்தை

அருளுகிறது?

ஜானவாசம், வரவேற்பு போன்றவை, சமுக அடிப்படையில் தமது உறவினர்,

நண்பர், எதிர்வீட்டார் ஆகியவர்களிடம் அந்தஸ்தைக் காட்டவும் விரைந்து

படைக்கவும் இன்று பயன்படுகிறது? ஜானவாசத்தின் முக்கியமான அம்சம், விவாக

உறவை அமைதியாக இறைவன் சன்னதியில் பேசி உறதிப்படுத்திக் கொள்வதுதான்.

மணமகனை அதை ஒட்டி ஊரறிய அறிமுகம் செய்யும்போது, அவனுடைய

தகுதியை ஊரார் அனைவரும் ஒப்புக்ககொள்கிறார்கள் என்பதை இந்தச் சடங்கு

உறுதிப்படுத்தும். இதை ஊர்வலம், வாணவேடிக்கை, வாகன சவாரி ஆகிய

ஆடம்பரங்கள் இன்றியே செய்யலாம்.

திருமணத்தின மிக முக்கியமான சடங்காகத் தாலி கட்டுவது கருதப்படுகிறது.

தாலி அணிவிப்பது என்பது கணவன் தனது மனைவிக்குத் தரும் உரிமையை

அடையாளம் காட்டுவதே ஆகும். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. முக்கியமான

திருமணச்சடங்கு என்று பார்க்கும் போது, சப்தபதியும், பொரி இடுவதும்

இதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே சொல்லவேண்டும். சப்தபதி

முடிந்தால்தான் திருமணம் முடிந்ததாக வடநாட்டில் குறிப்பிடுவார்கள். ஹிந்து

சட்டங்கள் கூட இதற்கு முக்கியத்துவம் தருகின்றன. மணமகளின் கட்டைவிரலைப்

பற்றி மணமகன் தனது கைக்கட்டை விரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள்

எடுதது வைக்கச் சொல்கிறான். இந்த ஏழுஅடிகளையும் யோக பூமியாக வைத்து,

அவற்றின் மூலம் அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்ந்து இணைத்துக்

கொள்கிறான். கணவனும் மனைவியுமாக ஆகிவிட்டவர்கள். நட்புறவுடன் இன்ப

துன்பங்களை ஏற்க முற்படுவதை இதைக் கொண்டு உறுதி செய்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான சடங்கு பொரி இடுதல், (லாஜஹோமம்)

மணப்பெண்ணின் சகோதரன் பொரியைச் சகோதரியிடம் கொடுக்க, அவள்

அக்னியில் இடச் செய்கிறார். கணவனின் நீண்ட அயுளுக்காகவும்,

ஆரோக்கியமான புத்திசாலிகளான குழந்தைகளைப் பெறவம், ஒளிமயமான

சூர்யதேவனுக்கு இதில் பிரார்த்தனை செய்யப்படுகிறது?

இப்படி உணர்ச்சிபூர்வமான, தம்பதியராக நன்மை தருவதான முக்கியமான

சடங்குகளைச் சிரத்தையுடன் செய்து- திருமணத்தை முடிப்பதுதான் நல்லது.

ஆடம்பரம் தேவை இல்லை.

பேய், பிசாசு, பில்லி - சூனியம் போன்றவை உண்மைதானா? அதனால் வரும்

பாதிப்புகளை மந்திர பூர்வமாக நீக்க முடியும் என்பது சரிதானா?

நிறைவேறாத ஆசைகளுடன் அகால மரணத்தை அடைந்தவர்கள் இந்த

உருவில் இருப்பதையும், பிறமக்களின் வாழ்வைப் பாதிப்பதையும், நிகழ்ச்சிகளின்

மூலமாக நாம் அறிகிறோம். குறிப்பாகக் கிராமப்பகுதிகளில் இந்த வகையான

பாதிப்புகள் அதிகமாகக் காணப்படும். மனிதனுடைய மனோதுர்ப்பலமே இந்தப்

பாதிப்பை ஏற்படச் செய்கிறது. உறதியான தெய்வ நம்பிக்கையும் அதை ஒட்டிய

மனோதிடம் உள்ளவர்களையும் இது பாதிப்பதில்லை. தெய்வசக்தியை நம்பி, நற்

பண்புகளுடன் வாழ்பவர்களை இது பாதிப்பதில்லை.

கிராமங்களில் இதைக் காற்று சேஷ்டை என்று கூறுவார்கள். சிறு

தேவதைகளின் உதவியுடன் இந்தப் பாதிப்பை விரட்ட முற்படுவார்கள். இதற்காக

மந்திரப் பிரயோகம் செய்வதும் உண்டு. நம்பிக்கையுடன் செய்தால் இந்த

மந்திரங்கள் மனோபலத்தை அளிக்கும். தீயசக்திகளை விரட்டும். பொதுவாகக்

கிராமப் பகுதிகளில் அதிகமாகப் பரவி இருந்த இந்தப் பாதிப்பு, இன்று அத்தகைய

மக்களும் அவர்களுடைய நடைமுறையும், நகரப் பகுதியையும் பெரும் அளவில்

அடைந்து விட்டதால் இன்று நகரங்களிலும் காணப்படுகிறது.

தூய்மையான வாழ்க்கையும், நற்பண்புகளும், தெய்வ பக்தியுமே இதற்குரிய

மாற்றாகும்.

இறைவழிபாட்டுடன் சமுதாயப் பணியை இணைத்துக் கொள்வது எப்படி? சமதயாப்

பணியில் மட்டும் ஈடுபடும் ஒருவனுக்குப் பக்திமானுக்குக் கிடைக்கும் நற்பலன்கள்

கிடைக்குமா?

இந்துமதத்தில் இறைவழிபாடு என்பது மக்களுடைய சேவையையும்

ஒட்டித்தான் அமைந்திருக்கிறது. அடியவர்கள் பலரும் தமது பக்திப் பணியின்

மூலம். சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறார்கள். ஆனால்

இறைபணி இல்லாமல் சமூகப்பணி மட்டும் இயங்குவது பொருத்தமாக இராது.

பக்தியில் ஈடுபடுபவர்கள் அதன் பலன்களைச் சமுதாயத்தை ஒட்டியே பகிர்ந்து

கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக ஆலயங்களில் அபிஷேகம், நைவேத்தியம்

ஆகியவற்றுக்குப் பயன்படும் பொருட்கள் மக்களுக்குப் பிரசாதமாகவும்

கிடைக்கிறது. ஆலயத்தில் பயன்படும் புனிதப் பொருட்க்ள் பலவும் மக்கள் தமது

வாழ்வில் பயன்படுத்துபவைதாம். அதனால் குடும்பத்தினரும், வணிகர்களும்,

கலைஞர்களும் பங்குகொள்ள முடிகிறது.

இந்து மதம் எல்லா உயிர்களிடத்தும், எல்லா இடங்களிலும் இறைவன்

இருப்பதை உணர்த்துவது, அதனால் பிரபஞ்சம் விரவிய உயிர்களுக்குச் செய்யும்

சேவை அனைத்தும் மகேசன் சேவையே என்று அது கூறுகிறது. ஆகையால்

சமுதாயப் பணியும் இறைபணியும் ஒன்றுபட்டு விளங்கலாம். ஆனால் சமுதயாப்

பணியாக மட்டும் செய்து முக்தி அடைந்ததாக வரலாறு இல்லை.

தனிப்பட்ட முறையில் பக்திபூண்டு ஆன்மிகப் பணி புரிபவர்கள் ஆதனால்

ஞானத்தை அடைவார்கள். அதனால் உள்ளம் தூய்மை அடைந்து, இறைவனை

உணரும் பேற்றைப் பெறுவார்கள். இவ்வாறு தனிப்பட்ட முறையில் ஆன்மிகப்

பணியும் பொதுவாக ஆலய வழிபாட்டில் இறைபணியையும் செய்யலாம்.

ஆலயத்தை ஒட்டிய திருவிழாக்கள் ஊர்வலம், தேர்த் திருவிழா போன்றவை

பலதரப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகளை அளித்து உதவுகின்றன. மக்களின்

ஒருமைப்பாட்டிற்கும் உதவுகின்றன.

கோ பூஜையின் சிறப்பு என்ன? பூஜைக்குரிய பசுவைத் தெருக்களில் ஒட்டி

விடுவதும் கொன்று உண்பதும் இன்று சகஜமாகிவிட்டது. இந்துக் குடும்பங்கள்

இத்தகைய பசுக்களைப் பராமரிக்க என்ன முயற்சி செய்யலாம்?

மனித உயிர்கள் ஒவ்வொன்றும் தமக்கு நான்கு மாதாக்கள் இருப்பதை உணர

வேண்டும். முதலாவது பெற்றெடுத்த மாதா. இரண்டவாது புனிதம் அருளப்

பாலைப் பொழிந்து வளர்க்கும் கோமாதா. மூன்றாவது உண்ண உணவு தந்து

தாங்கிக் காக்கும் பூமாதா. நாலாவது அகில உலகையும் காக்கும் சக்தி வடிவமான

ஜகன்மாதா. பல உயிரினங்கள் நமக்கு உயிர் வாழத் துனைபுரிகின்றன. ஆனால்

அவற்றையெல்லாம் நாம் மாதாவாகக் கருதி மதித்துவிட முடியாத. பசுவை மட்டும்

அப்படி கருதுவதற்குக் காரணம், அதன் உடலில் தேவர்கள் இருப்பதாகச்

சொல்லப்படுவதுதான். மனித உடலில் கூடத் தோஷம் இருக்கிறது. ஆனால்

தோஷமே இல்லாத புனித உயிர் பசு. பார்வைக்கு மிருக உடலாக இருந்தாலும் தன்

உள்ளே தேவதைகள் வாசம் செய்கின்றன.

பசுவின் பின்புறம் மகாலட்சுமி வாசம் செய்வதாகக் கூறுவார்கள். அதைத்

தொட்டு வணங்கிப் பூஜிப்பவர்கள் எல்லாச் செல்வங்களையும் பெறுவார்கள்.

இவ்விதம் பசுவை வணங்கிப் பராமரிக்கும் நாடு எல்லாச் செல்வங்களையும்

பெற்றுப் பொருளாதார நிலையில் உயர்வு பெறும், பசுவைப் போற்றுவது வீட்டுக்கு

மட்டும் இல்லை, நாட்டுக்கும் நல்லது. அத்தகைய பசுவை வயதான பின்

பராமரிக்காமல் விட்டுவிடவே கூடாது. வயதான பிறகு தாயை வைத்துப்

போற்றுவது புண்ணியம். அதைப்போல நூறு மடங்கு ஆயிரம் மடங்கு பசுவைப்

போற்றுவதால் கிடைக்கும்.

சமீபகாலமாக நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் வளர்ந்திருப்பதற்குக்

கூடக் காரணம் கோசம்ரட்சணையை நாம் சரிவரச் செயற்படுத்தாததுதான்.

பசுக்களை வயதானபிறகு தெருவில் ஓட்டி விடுவதும், அடிமாடுகளாகக் கொடுத்து

மாமிசத்தையும் தோலையும் எடுத்துப் பயன்படுத்துவதும் பாவம் மிகுந்த

செயலாகும். இதற்குக் காந்திஜீ, வினோபா போன்ற தலைவர்கள் கூட எதிர்ப்புத்

தெரிவித்திருக்கிறார்கள். நாடு முழுவதும் இந்தப் பெரியோர்களின் கருத்தக்கு

மதிப்புக் கொடுத்துப் பசுவை போற்றும் பணிவிரதமாக மேற்கொள்ளப்பட

வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

பசுக்களைக் காக்க இந்த ஸ்ரீகாஞ்சி மடமும், இதைப் போன்ற பல்வேறு

ஆசிரமங்களும் கோசாலையை வைத்துப் பராமரிக்கின்றன. பொதுமக்களும்

இதைப் போலப் பசுக்களை வயதான பிறகும் வைத்துப் பராமரிக்க அமைப்புகளை

ஏற்படுத்தலாம். இந்துக்கள் மட்டுமின்றி எல்லோருமே இந்த அன்புப் பணியில்

ஈடுபட வேண்டும். பசுக்களுக்கு செய்யும் தொண்டு வீண் போகாது. பல மடங்காக

அது நன்மைகளை வீட்டுக்கும் நாட்டுக்கும் கொடுக்கும், பொருளாதார நிலை

உயரும், வீட்டில் லட்சுமிகரம் பெருகும்.

இன்றைய இளைஞர்களிடம் புத்திசாலித் தனமும், உழைக்கும் உற்சாகமும்

நிறையவே இருக்கின்றன. இந்துமதத்தின் பெருமையை உயர்த்த இவர்களுடைய

பணிகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?

இன்யை இளைஞர்களிடம் புத்திசாலித்தனமும் உழைக்கும் திறமையும்

நிறைய இருக்கின்றன. ஆனால் அதை அவர்கள் முழுமையாக நல்ல விதத்தில்

பயன்படுத்த முடிவதில்லை. ஏதேதோ பொழுது போக்குகளில் ஈடுபடுகிறார்கள..

சமுதாயப்பணி, மருத்துவப் பணி, கிராம மறுமலர்ச்சிப் பணி இப்படி நிறையச்

செய்ய வேண்டியது இருக்கிறது. இதில் அவர்கள் இன்று முழுவேகத்தில்

ஈடுபடலாம். கிராமங்கள், நகரங்கள் ,குடி இருப்புகள் இப்படிப்பல்வேறு நிலைகளில்

அங்கங்கே சேவைக்குப் பொது அமைப்பை உருவாக்கிக் கொண்டு பணிபுரியலாம்.

வாழ்க்கையில் வளர்ச்சி பெற்று, வசதிகள் கிடைத்த பிறகு ரோட்டரி கிளப்,

லயன்ஸ் கிளம்ப போன்ற அமைப்புகளின் மூலம் இதில் ஈடுபடுகிறார்கள். இதையே

இளம் வயதில், எளிமையான முறையில் செய்து காட்டலாம். இந்து சமய மன்றம்

ஜனகல்யாணம் போன்ற அமைப்புகள் இந்த விதத்தில் மக்களுக்கு நிறைய

தொண்டு செய்கின்றன. இவற்றிலும் இளைய தலை முறையினர் சேர்ந்து

ஈடபடலாம். நாடு, வாழ்க்கை, சமூகம் என்று தொடங்கினால் மனம் புண்படும்,

நறபண்புகள் அமையும், உயிர்களிடத்தில் அன்பு உண்டாகும். அதுவே பக்தி

நிறைந்த இறைபணியில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். சக்தி பெருகும்.

வாழ்க்கை சீர்ப்படும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is நமது செயல்களை இறைவனுக்கே அர்ப்பணி   விட்டால் உடம்பும் உள்ளமும் தூய்மை அடையும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  நம்புங்கள் நல்லவை நடக்கும்
Next