Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

விரதங்கள்

விரதங்கள்

அமாவாசை தென்புலத்தாரை வழிபட முக்கியமானது என்பதுபோல்,

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஓர் விரததினமாக அமைந்திருக்கிறது.

சித்திரை மாதம் பௌர்ணமியன்று. சித்ரா பௌர்ணமி என்பார்கள். அன்று விரதம்

இருந்து, உபவாசம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்வார்கள்.

வைகாசி மாதம் பௌர்ணமி அன்று வைகாசி விசாகம் என்பார்கள். அன்று

நீராடி வைசாகதானம் என்று தயிர்சாதம், பானகம், நீர்மோர் முதலானவை. தாமாகக்

கொடுப்பது சிறந்தது.

ஆடிமாதம் பௌர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் என்பார்கள். இது மற்ற

மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல ஆனி மாதம் வளர்பிறையில் கோபத்மவிரதம் என்று

விஷ்ணுவுக்கு ப்ரீதியான விரதம் வருகிறது. இது விசேஷமாக பெண்களால்

செய்யப்படுகிறது. வடநாட்டில்தான் பிரஸித்தம். அதேபோல் ஆடி மாதம்

பௌர்ணமி அன்று கோகிலாவிரதம் என்பதும் வடநாட்டில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆவணி மாதம் பௌர்ணமி அன்று ரட்ஷாபந்தனம். ரிக், யஜுர்

வேதங்களுக்கு உபாகர்ம எனப்படும் ஆவணி அவிட்டம். புரட்டாசி மாதம்

பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மஹாளயபட்சம் -

என்பதாக முன்னோர்களை அவசியம் ஆராதிக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.

அதற்கு மறுநாளிலிருந்து சாரதா நவராத்திரி என அழைப்பார்கள். துர்கா, லஷ்மி,

சரஸ்வதி தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து ஒன்பதாவது

நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி

பெறலாம். பத்தாவதுநாள் விஜயதசமி - விஜய யாத்ரை. மேலும் புரட்டாசி

பௌர்ணமி அன்று உமாமஹேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களை

விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று

சிவரஹஸ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவ

பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள்.

அன்றைக்கே கௌமுதீ ஜாகரணவிரதம் என்று வட நாட்டில் விசேஷமாக

அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றையதினம் இரவில் நிலவில் லட்சுமி பூஜை

செய்வார்கள்.

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசி அன்று நரக சதுர்தசி எனப்படும்

தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று எல்லா வீடுகளிலும்,

சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசை வரிசையாக தீபம்

ஏற்றுவார்கள். கார்த்திகை தீபம் என்றே பெயர். அன்று தீபதானம் செய்வது

புண்ணியத்தைப் பயக்கக்கூடியது.

மகாபலிக்கு விஷ்ணு பகவான் வரமளித்த தினம். அன்றைக்கே பக்தேஸ்வர

விரதம் என்று வடநாட்டில் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று பெண்கள்

பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்வார்கள்.

மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதாக

அதிகாலையிலேயே எல்லாக் கோயில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும்.

கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்த பக்தர்களுக்கு வினியோகம்

செய்வார்கள். பஜனை கோஷ்டிகள் நாமாவளிப் பாடிக்கொண்டு iF வலம்

வருவார்கள்.

மார்கழி மாதம் பௌர்ணமி அன்று திருவாதிரை உத்ஸவம். எல்லா சிவன்

கோயில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமான் iF உலாவரும், சிதம்பரஷேத்ரத்தில்

நடராஜப் பெருமானுக்கு விசேஷமான அபிஷேகமும், புறப்பாடும் கண்கொள்ளாக்

காட்சியாக இருக்கும்.

தைமாதம் பௌர்ணமி அன்று தைப்பூச விழா மத்யார்ஜுனம் என்ற

திருவிடைமருதூரிலும், மற்றும் வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலம் தைப்பூச

உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். மாசிமாதம் சுக்லபஞ்சமி வசந்த பஞ்சமி

எனப்படும். வசந்தருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேச்வரர்களை

வழிபட்டு புறப்பாடு செய்வார்கள்.

மாசி மாதம் பௌர்ணமி அன்று மாசி மகம். அதற்கு பத்துநாட்கள்

முன்னாலேயே உத்ஸவம் ஆரம்பித்து பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில்

iF உலாவருதல் நடைபெறும். பௌர்ணமி அன்று தீர்த்த வாரி. ஆகாமாவை

என்ற நான்கு முக்யமான பௌர்ணமியில் இது ஒன்று. மாசி மாதம் முழுவதுமே

மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி பிராம்மணர்களுக்கு கம்பளி,

சந்தனக்கட்டை, பசு முதலான தானங்கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக்

கருதப்படுகிறது.

இதே மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு

முறை நிகழும் மஹாமஹம் கும்பகோணத்திலும், ப்ரயாகை, ஹரித்வார் முதலான

இடங்களில் கும்பமேளாவும் பிரஸித்தமானது. அன்று ஸ்னானம், தானம்

விசேஷமானது.

பங்குனி மாதம் பௌர்ணமி அன்று ஹோளிகா என்றும் ஹோளிப் பண்டிகை

வடநாட்டில் மிக்க கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.

இவ்விதம் பல விரதங்களும், ஸ்னானம், தானம் இவைகளின்

விதிமுறைகளும், பலன்களும், புராணங்களில் ஆங்காங்கே கூறப்பட்டள்ளன.

அவற்றை விதிப்படி அனுஷ்டிப்பவர்கள் துயரம் நீங்கி, விரும்பியதை அடைந்து

சுகமாக வாழ்நதார்கள் என்ற வரலாற்றைப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

ஆகவே, யாவரும் அந்தந்த விரதங்களையும், ஸ்னானம், தானம், ஈச்வர பூஜை

முதலானவைகளை விதிப்படி சிரத்தையுடன் செய்து வந்தால் இவ்வுலகில்

நல்வாழ்வு வாழ்ந்து மறுமையில் புண்ணிய லோகம் அடைந்து நற்பிறவி

எடுப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is அரசும் துளசியும் ஆண்டவன் வடிவம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஞானதீபம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it