ஆதி முதலின் வரிவடிவம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இது அத்தனைக்கும் சிகரமாக ஒன்று. தாம்தான் எல்லாவற்றுக்கும் மூலம், முதல் என்று தெரிவிக்கும் ரூபமாக ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்த ரூபத்திலேயே எல்லாருடைய முதல் பூஜையையும் பெற வேண்டும் என்று பரமாத்மா நினைத்தார். தம்முடைய ரூபமே அந்த மூலத்தைத் தெரிவிப்பதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். அத்தனை ஸ்ருஷ்டிக்கும் மூலம் என்ன? ‘முதல்’ என்றால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்பதில் வருகிற ஆரம்பம் மட்டுமில்லை. ஆரம்பமும்தான். அதோடுகூட ஒரு தொழில் என்றால் மூலதனமாக, ‘காபிட’லாக இருப்பது என்றும் அர்த்தம். இப்படி மூலமாக, ஆதியாக இரண்டு அர்த்தத்திலும் முதலாக இருப்பது ப்ரணவம்தான். அப்படிப்பட்ட ப்ரணவாகாரமான அமைப்பைக் கொண்டதாக ஸகல ஜீவ வர்க்கத்திலும் இருப்பது வலது பக்கமாகச் சுழித்த தும்பிக்கையுடன் கூடிய யானையின் முகம்தான்! இந்த சிகரமான சிறப்புக்காகவே அவர் கஜானனராக யானைத் தலையுடன் இருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அனைத்து உயிரனங்களும் இணைந்தவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முகமும் வாயும்
Next