நாச்சியார் திருமொழித் தனியங்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமநுஜாய நம:

நாச்சியார் திருமொழித் தனியங்கள்

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது

நேரிசை வெண்பா

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின் துனைவி

மல்லிநா டாண்ட மடமயில் -- மெல்லியலாள்,

ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை

வேயர் பயந்த விளக்கு.

கட்டளைக் கலித்துறை

கோலச் சரிசங்கை மாயன்செவ் வாயின் குணம்வினவும் சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் மாலைத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்





 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருப்பாவை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தையரு திங்கள்
Next