மாணிக்கங்கட்டி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

குன்றமொன்றெடுத்து

தலைவியிரங்கல்

ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு பாடும் இப்பகுதியில், தென்றல் முதலானவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு நோயை வெளிப்படுத்துகிறார்;இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்து உலகை வாழ்வித்த பெருமான் தமக்குத் துன்பம் தருவதைச் சுட்டிக் காட்டிப் பாடுகிறார்.

கலி விருத்தம்

தென்றல் வந்து b வீசுகின்றதே!

1952. குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை

அன்று காத்தவம் மான்,அ ரக்கரை

வென்ற வில்லியார் வீர மேகொலோ,

தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்! 1

வாடைக் காற்று என்னை வாட்டுகிறதே!

1953. காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,

தாரு மார்வமும் கண்ட தண்டமோ,

சோரு மாமுகில் துளியி னூடுவந்து,

ஈர வாடைதான் ஈரு மென்னையே! 2

நிலவு சீறுகிறதே!என் செய்வேன்?

1954. சங்கு மாமையும் தளரு மேனிமேல்,

திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,

பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,

கொங்க லர்ந்ததார் கூவு மென்னையே! 3

சந்திரன் வெங்கதிர் வீசுகிறதே!ஏன்?

1955. அங்கொ ராய்க்கலத் துள்வ ளர்ந்துசென்று,

அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,

கொங்கை நஞ்சுண்ட கோயின் மைகொலோ,

திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே! 4

கடல் ஒலி என்னை வருத்துகிறதே!

1956. அங்கொ ராளரி யாய்,அ வுணனைப்

பங்க மாவிரு கூறு செய்தவன்,

மங்குல் மாமதி வாங்க வேகொலோ,

பொங்கு மாகடல் புலம்பு கின்றதே! 5

அன்றிலின் குரல் துன்புறுத்துகிறதே!

1957. சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,

வென்ற வில்லியார் வீர மேகொலோ,

முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,

அன்றி லின்குரல் அடரு மென்னையே! 6

மன்மதன் என்மீது அம்பு எய்கின்றானே!

1958. பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,

மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,

iM லைங்கணை வில்லி யம்புகோத்து,

ஆவி யேயிலக் காக எய்வதே! 7

என் உயிரைக் காத்துக்கொள்வது அரிது

1959. மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,

மாலின் அந்துழாய் வெந்தென் னுள்புக,

கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர்

ஆலி வந்ததால் அரிது காவலே! 8

திருத்துழாய் வாசனைதான் என்னைக் காக்கும்

1960. கெண்டை யண்கணும் துயிலும்,என்நிறம்

பண்டு பாண்டுபோ லொக்கும், மிக்கசீர்த்

தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,

வண்டு கொண்டுவந் தூது மாகிலே. 9

இவற்றைப் பாடுவோர்க்குத் துன்பம் இல்லை

1961. அன்று பாரதத் தைவர் தூதனாய்,

சென்ற மாயனைச் செங்கண் மாலினை,

மன்றி லார்புகழ் மங்கை வாள்கலி

கன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே. 10

அடிவரவு:குன்றம் கார் சங்கு அங்கொராய்க்குலத்து அங்கொராளரி சென்று பூவை மாலினம் கெண்டை அன்று - குன்றமெடுத்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is சீதக்கடல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தன்முகத்து
Next