Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அம்பரமும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

அம்பரமும்

திருநறையூர்-3

திருநறையூர் சேர்ந்து திருமாலின் திருவருளைப் பெறுமாறு ஆழ்வார் ஈண்டு எல்லோரையும் வேண்டுகிறார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கக்தர்களே!திருநறையூர் சேருங்கள்

1498. அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்

அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,

கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி

கூடினான் திருவடியே கூடுகிற்பீர்,

வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு

மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,

செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 1

ஊழி முதல்வன் உறைவிடம் நறையூர்

1499. கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம்,

குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,

எழுந்தினிது விளையாடு மீச னெந்தை

இணையடிக்கீ ழினிதிருப்பீர்!இனவண்டாலும்,

உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி

உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,

செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த

டரிலுநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 2

திருவிக்கிரமன் திருநறையூரில் உள்ளான்

1500. பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப்

பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா,

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்

திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்,

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்ற

கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற,

தெய்வவாள் வல்ங்கொண்ட சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 3

நரகிங்கனது நறையூரை நண்ணுங்கள்

1501. பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்

பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி,

அங்கைவா ளுகிர்நுதியா லவன தாகம்

அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்,

வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற

விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த,

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்

திருநையூர் மணிமாடம் சேர்மின்களே. 4

சோழன் பூசித்த நறையூர் சேருங்கள்

1502. அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர்

அரியுருவா யிரணியன தாகங்கீண்டு,

வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு

விருந்தாவீர்!மேலெழுந்து விலங்கல் பாய்ந்து,

பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்

புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்,

தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 5

பக்தர்களே!உடனே திருநறையூர் சேருங்கள்

1503. தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்

தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,

தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த்

தானாய னாயினான் சரணென்றுய்வீர்,

மின்னாடு வேலேந்து விளைந்த வேளை

விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட,

தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6

நறையூரில் கண்ணன் கழலிணை சேரலாம்

1504. முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி

முதுதுவரைக் குலபதியாகக் காலிப்பின்னே,

இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்

இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்,

மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய

வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்,

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர் மின்களே. 7

பக்தர்கட்கு ஏற்ற இடம் திருநறையூர்தான்

1505. முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி

முதுதுவரைக் குலபதியாகக் காலிப்பின்னே,

இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்

இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்,

மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய

வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்,

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 7

பக்தர்கட்கு ஏற்ற இடம் திருநறையூர்தான்

1505. முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்

மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்

சிரந்துணித்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்,

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ வீசற்கு

எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட,

திருக்குலத்து வளச்சோழன் சேதர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 8

திருநறையூரில் திருமால் அருள் கிடைக்கும்

1506. தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்

தனியாளன் முனியாள ரேத்தநின்ற

பேராளன், ஆயிரம்பே ருடைய வாளன்

பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,

பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற

படை மன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த,

தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 9

விண்ணோர்க்கு விருந்தாவர்

1507. செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்

திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை,

பொய்ம் மொழியன் றில்லாத மெய்ம்மை யாளன்

புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த,

அம்மொழிவாய்க் கலிகன் P யின்பப் பாடல்

பாடுவார் வியனுலகில் நமனார்பாடி,

வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில்

விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே. 10

அடிவரவு:அம்பரமும் கொழு பவ்வம் பைங்கண் அன்று தன்னாலே முலை முருக்கு தாராளன் செம்மொழி - ஆளும்.

 

 


  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கலங்க
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஆளும் பணியும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it