சித்திர ஆதிசங்கரர் பரமன் மகிழ்ந்து "ஆஹா!சோதனையில் வென்று விட்டீர்கள் உலகம் முழுவதற்கும் நன்மை செய்வதற்காக

சித்திர ஆதிசங்கரர்

பரமன் மகிழ்ந்து "ஆஹா!சோதனையில் வென்று விட்டீர்கள். உலகம் முழுவதற்கும் நன்மை செய்வதற்காக நானே உங்களக்கு மகா புத்திமானாக ஒரு புத்திரனாகப் பிறப்பேன்"என்று கூறி மறைந்தார்.
தம்பதியினர் ஆனந்தக்கடலில் ஆழ்ந்தனர் .
வட விருட்சம் எனப்படும் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி,வடக்குநாதனாக ஆகி,ஆர்யாம்பாளின் வயிற்றுக்குள் ஜோதி வடிவில் புகுந்தார். உடனே சிவகுரு தம்பதியினர் காலடிக்குத் திரும்பினர்.

சரியாகப் பத்து மாதங்கள் சென்றன. வைகாசி மாதம்,வளர்பிறை ஜந்தாம் நாளன்று,சிவ பெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தச் சிவபெருமானே ஆர்யாம்பாளுக்கு அருமைப் பிள்ளையாக அவதாரம் செய்தார். "உலகுக்கெல்லாம் நன்மை செய்வதற்காகவே அவதரிப்பேன்'என்று பெருமான் கூறியிருந்ததால் சங்கரன் என்று பெயரிட்டனர். வட மொழியில் 'சம்'என்றால் 'சுகம்','கரோதி'என்றால் 'கொடுப்பவன்''சங்கரன்'என்றால் சுகத்தையும்,ஆனந்தத்தையும் அளிக்கக் கூடியவன் என்று பொருள்.

சங்கரக் குழந்தையின் அழகு தெய்வீக ஒளியுடன் விளங்கியது. அக்குழந்தையைக் கண்ட அனைவரும் "இது சாதாரன மனிதக் குழந்தை அல்ல"என்று பாராட்டிப் பணிந்தனர். சிவ பெருமானிடம் காணப்படும் மான்,பரசு,சூலம்,கபாலம் முதலியன குழந்தையின் கை,கால்களில் ரேகைகளாக இருப்பது கண்டு அனைவரும் வியந்தனர்.

இக் குழந்தை பிறந்தவுடனேயே யாகம் நடந்து கொண்டிருந்த ஒரு சில அபூர்வமான இடங்களில் வேள்வித் b வலப்புறமாக சுழித்துக் கொண்டு ஓங்கி வளர்ந்தது. பிற மதஸ்கர்களும்,கடவுள் இல்லை எனக் கூறும் நாஸ்திகர்களும் தங்கள் கொள்கைக்கு ஆதாரமாகக் கையில் வைத்திருந்த சுவடிகள் தாமாகவே நழுவி விழுந்தன. இந்த அறிகுறிகளை கண்டு 'எங்கோ ஒரு மகான் அவதரித்திருக்கிறார்'என்று பெரியவர்கள் புரிந்துகொண்டார்கள்.
குழந்தை சங்கரன் அறிவிலும் குணத்திலும் மிக உயர்தவனாக விளங்கினான்:அன்பால் அனைவரைம் கவர்ந்தான்.

All the Gods and Devtas visit Lord Shiva

<< Prev. page * Next page >>