குணசீலம் ப்ரஸன்ன வேங்கடேசர்
திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 22 A.e தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் குணசீலம் என்கிற குணசேகரம். 3 நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. நாமக்கல். சேலம் செல்லும் பிரதம சாலைக்கு வெரு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் என்கின்ற வளைவும் இருக்கின்றது. புராண வரலாற்றுப்படி ஸ்ரீதால்பியர் என்ற முனிவர் பத்ரிகாச்ரமம் செல்லும்போது அவருடைய சீடரான குணசீலர் அங்கு செல்லாமலே வேங்கடேசனை ஆராதிக்கத் தங்கிவிட்ட இடமே குணசீலம் எனப் பெயர் பெற்றது. குணசீலர் பத்ரிகாச்ரமம் சென்ற பின்னர், அவரது சீடர் காலத்தில் பெருமாள் புற்று போன்ற அமைப்பில் எழுந்தருளி இருந்தார். உறையுர் அரசனான ஞானவர்மா என்பவன் பெருமாளை அங்கு கண்டு அவருக்கு ஆலயத்தை எழுப்பினான் என்கிறது புராணம். இங்ஙனம் ஸ்வயம்பு மூர்த்தியாகத் தோன்றியவாரே குணசீலம் வேங்கடவர்.
ப்ரதான ஸந்நிதியில் மூலவர் ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் தனியாகக் காட்சி அளிக்கின்றார். மஹாலக்ஷ்மியை தன் மார்பில் தரித்துள்ளார். சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் அவர். திருமலை போலவே இங்கும் தாயாருக்குத் தனி சந்நிதியில்லை. அழகாக சாளக்கராம மாலை அணிந்து மூலவர் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியிருக்கிறார். தீர்த்தம் பாபவினாச தீர்த்தம் என வழங்கப்படுகிறது. அகண்ட காவிரித் தீரத்தில்
இக்கோயில் அமைந்துள்ளது. வைகாநஸ ஆகமப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. புகழ் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக வேங்கடவன் அருள் பெற்று குணமடைகிறான். புரட்டாசி மாதத்தில் ப்ருஹ்மோத்ஸவம் நிகழ்பெறுகிறது. பரம்பரை அறங்காவலர் திரு பிச்சுமணி ஐய்யங்கார் இந்தப் பெருமாள் பேரில் பாடல்கள் பாடியுள்ளனர். திருப்பதிக்கு நேர்ந்து கொண்டவர்களும் இங்கு ப்ரார்த்தனை செலுத்தலாம்.
வைகுந்தநாதன் வாழி வடமலைப் பெருமாள் வாழி
கைவந்த குணசீலப்பேர் காவிரி நதியும் வாழி
செய்ய வேங்கடவன் வாழி, ஸ்ரீதேவி வாழி வாழி