வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள் சாத்தூர் வேங்கடாஜலபதி விருதுநகரிலிருந்து சுமார் 25 A e தொலைவில் உள்ள தலமே சாத்தூர் பேருந்து நிலைய

வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள்

சாத்தூர் வேங்கடாஜலபதி

விருதுநகரிலிருந்து சுமார் 25 A.e தொலைவில் உள்ள தலமே சாத்தூர். பேருந்து நிலையத்திலிருந்து 1A.e தூரத்தில் ஆலயம் உள்ளது. கோவிலில் ஸந்நிதி முன்னர் விஸ்தாரமான மண்டபம் இருக்கின்றது. சிறிய கோயிலாகக் காணப்பட்டாலும் நாயக்கர் பரம்பரையினால் மிகவும் போற்றப்பட்டு வரும் ஆலயம் இது. வைப்பாறு எனும் சிறு நதிக்கரையின் இவ்வாலயம் அமைந்துள்ளது. இந்தத் திருவேங்கடவன் அருளால் அரசர் ஒருவர் இழந்த கண் பார்வையைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

ஸந்நிதிக்குத் செல்லக் காத்திருக்கும் மண்டபத்தில் ஆஞ்சநேயர், கருடாழ்வார், மஹாலக்ஷ்மி, ஆண்டாள், பட்டாபிராமர், கீதோபதேசம், வேணுகோபாலன், ஸ்ரீநிவாசன், கஜேந்திர மோக்ஷம், அரங்கநாதர் ஆகிய வண்ணச் சித்திரங்கள் நம் கண்ணைக் கவரும்படி தீட்டப்பட்டிருக்கின்றன. கோயில் ப்ரகாரத்தில் ஸ்தல வ்ருக்ஷமாக அரசமரம் உள்ள்து. அதனடியில் நாகர், ஆஞ்சநேயர் உள்ளனர், ஸந்நிதிக் கருடனை வணங்கிச் சென்றால் மூலவராக ஸ்ரீவேங்கடாஜலபதி நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராகக் காட்சி அளிக்கிறார். இவர் உறுவத்தை குணசீலத்தில் உறையும் வேங்கடவனை ஒத்திருக்கிறார். ஆனால் குணசீலத்தில் ஸ்ரீதேவியும், பூதேவியும் இல்லை, உற்சவர் மிகச் சிறியவராக செல்லமாகக் கட்டப்பன் அல்லது சாத்தூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவரும் ஸ்ரீதேவி, பூதேவி ஸஹிதம் ஸேவை ஸாதிக்கிறார். ப்ரகாரத்தில் பெருமாளுக்கு வலப்புறம் தாயார் அவர்மேல் மங்கையும், இடப்புறம்

ஆண்டாள் நாச்சியாரும் உள்ளனர். அலர்மேல் மங்கைத் தாயார் வீற்றிருந்த கோலத்திலும், கோதைப் பிராட்டியார் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்கிறார். இவர்களும் ஸ்ரீநிவாசர் போலவே கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளனர். தசாவதார ஒவியங்கள் பெருமாள் ஸந்நிதியில் உள்ளன. அழற்றுள் வராகபிரானும், லக்ஷ்மி

நரசிம்மரும், த்ரிவிக்ரமாவதாரமும் நம்மைப் பரவசப் படுத்துகின்றன. ஸந்நிதி விமானத்தின் மேலும் தசாவதார சிற்பங்கள் காணப்படிகின்றன. ப்ரகாரத்தில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், சேனை முதலியார், மணவாள மாமூனிவர்கள் உள்ளனர். தனி ஸந்நிதியில் க்ருஷ்ண பகவானும் ஸேவை ஸாதிக்கிறார். உற்சவரான சக்கரத்தாழ்வார் பெருமாள் ஸந்நிதியிலேயே இருக்கிறார்.

தென்கலை ஸம்ப்ரதாயத்தைக் கடைபிடிக்கும் கோயில். வழிபாடுகள் வைகானஸ ஆகமப்படி நடைபெருகின்றன. 1990ம் ஆண்டு ஸம்ப்ரோக்ஷணம் நடை பெற்றிருக்கின்றது. இக்கோயிலுக்கும், எதிரில் உள்ள சிவாலயத்திற்கும் பொதுவாக ஒரு திருக்குளம் உள்ளது. சாத்தூர் கொல்லப்பட்டி, எட்டையபுர ஜமீன்தார்கள் பரம்பரையினர் பல திருப்பணிகள் புருந்துள்ளனர். ஆனி மாத ப்ரம்மோத்சவமும், புரட்டாசி கருடசேவையும் விசேஷம். கோயில் காலை 6.30 மணி முதல் 11,30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும்

திறந்து வைக்கப்படுகிறது.

திருபணாழ்வார் அனுபவித்த விமலன் விண்ணவர்க்கோன் விரையார் பொழில் வேங்கடவனாக இச்சாத்தூரப்பனை அனுபவிப்போம்.