வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள் திருபாற்கடல் ப்ரஸன்ன வேங்கடேசர் சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பாதையில் காவேரிப்பாக்கம

வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள்

திருபாற்கடல் ப்ரஸன்ன வேங்கடேசர்

சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பாதையில் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருத்தலமே திருப்பாற்கடல். இது சென்னையிலிருந்து சுமார் 105 A.e தொலைவில் உள்ளது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இவ்வூரில் அரங்கநாதர் கோவிலும், அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரண்டுமே வடகலை ஸம்ரதாயம் கடைப்பிடிக்கும் கோவில்கள். இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் ஆவுடையார் பேரில் எழுந்தருளி இருப்பது தான். புண்டரீக மஹரிஷியின் ப்ரார்த்தனைக் கிணங்கி அவ்வாறு தோன்றியதாகப் புராண வரலாறு கூறுகிறதாக அறிகிறோம். சைவ - வைணவ ஒற்றுமைக்கு இது ஒரு சாண்று.

ஸந்நிதி கருடனை வணங்கி நாம் ப்ரதான ஸந்நிதிக்குச் சென்றால் ஸ்ரீவ்ங்கடேசப் பெருமாள் தனித்து நெடிது உயர்ந்த கோலத்தில் சங்க, சக்கர தாரியாக ஸேவை ஸாதிக்கிறார். எழில் ததும்பும் உற்சவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் திகழ்கிறார். அவர் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். மற்றும் ஸந்நிதியில் உற்சவ பெருமாள் ஸந்நிதியிலேயே உள்ளார்.

நவநீத க்ருஷ்ணர், ருக்மணி, ஸத்தியபாமா சமேதராய் தனி ஸந்நிதி கொண்டுள்ளார். ஆண்டாளுக்கும் தனி ஸந்நிதி உள்ளது. இரண்டு ஆஞ்சனேயர்கள் தனி ஸந்நிதி கொண்டுள்ளார்கள். தேசிகர்களுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் தனி ஸந்நிதிகள் இருப்பது இத்தலத்திற்குத் காஞ்சிபுரத்துடன் தொடர்பு இருந்ததை உணர்த்துகிறது. இக்கோவிலின் தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி என்றும், ஸ்தவ வ்ருக்க்ஷம் மா மரம் என்றும் தெரியவருக்கிறது. இவ்வாறு நின்ற வண்ணரும், கிடந்த வண்ணரும் கோவில் கொண்டுள்ள இந்தத் திருப்பாற்கடலை விட்டு வரவே மனம் வராத நிலையில் அகலக்கில்லன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பனான் ஸ்ரீநிவாசனை எண்ணியவாறே கோவிலை விட்டு வெளியே வருகிறோம்.