விளாங்குடி வேங்கடரமணர்
கும்பகோணத்திலிருந்து அம்மன் குடிவழியாக விளாங்குடிக்குச் செல்ல வேண்டும். இவ்வூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரம். திருவிசை நல்லூர் ஆகிய
ஊர்கள் பஜனோத்ஸவத்திற்குப் பெயர் போனவை, விளாங்குடியிவும் அதே ஸம்ப்ரதாயம் கடைபிடிக்கப்பட்டு, மார்கழி/தை மாதத்தில் இங்குறையும் வேங்கடரமண ஸ்வாமி ஸந்நிதியில் மூன்று நாட்கள் மிகுந்த சிரத்தையுடன் ராதா கல்யாண உத்ஸவத்தை நடத்தி வருகின்றனர். இங்குள்ள பெரிமாள் கோவிலில் எழுந்து அருளும் ஸ்ரீ வேங்கடரமண ஸ்வாமியை ஏழுமலை வாசனாகவே மக்கள் கருதுகின்றனர்.
சில ஆண்டுகள் முன்பு இவ்வாலய வழிபாட்டின் நித்ய பூஜைக்கு கூட சோதனை ஏற்பட்டபோது, வேங்கடரமணர் இந்த ஊரைச் சேர்ந்த அனைவர் மனதிலும் புகுந்து, நிறைய காணிக்கையை வழங்க வைத்து, இன்று கண்கொள்ளாக் கட்சியாக கல்யாண மஹோத்ஸவம் நடத்துமளவிற்குக் கோவிலை உயர்த்தி உள்ளார். காஞ்சி காமகோடி பரமாச்சாரிய ஸ்வாமிகளும் இக்கோயிலுக்கு 1943ம் ஆண்டு வருகை கோவில் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
ப்ரதான ஸந்நிதியில் ஸ்ரீ வேங்கடரமணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராகக் காட்சி அளிக்கிறார். உற்சவராக ஸ்ரீநிவாசர், பத்மாவதி என்கிற அலர்மேல் மங்கைத் தாயாரோடு ஸேவை ஸாதிக்கிறார். இங்கு நவநீத க்ருஷ்ணனும் கோவில் கொண்டுள்ளார். அவருக்காகவே ராதா கல்யாணம் சிற்ப்பாகக் கொண்டாடப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் விளங்கவனம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்குள்ள சிவாலயமும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. பெருமாளும், ஈசுவரனும் இந்திரனுக்கு ப்ரத்யக்ஷ தெய்வங்களாகத் தோன்றியதாகப் புராண வரலாறு கூறுகிறது. இது ப்ரார்த்தனை ஸ்தலமாகக் கருதப்பட்டு விவாஹம் ஆகாத பெண்கள் பணியாரம், பருப்புத் தேங்காய் வைத்து வழிபட்டு வெகு விரைவில் தங்கள் மனோரதம் ஈடேறப் பெறுகின்றனர்.