வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள் சேலம் சின்ன திருப்பதி வேங்கடாசலபதி சேலத்தில் உள்ள ஹஸ்தம்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வ

வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள்

சேலம் சின்ன திருப்பதி வேங்கடாசலபதி

சேலத்தில் உள்ள ஹஸ்தம்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாஜலபதி கோயில் சின்னத் திருப்பதி என்றே அழைக்கப்படுகிறது. சிறிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள வடகலைக் கோயில் இது. நுழைவாயிலில் வேணுகோபாலனாம் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் நான்கு மூர்த்திகள் ஒரு சன்னிதியில்

வைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். ஸம்ப்ரோக்ஷணம் 22.7.2002 அன்று நிகழ்ந்திருப்பதால் கோயில் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கிறது. இங்கு சேட்லூர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே பட்டாச்சாரியாராகப் பணி புரிந்து வருகிறார்கள்,

நுழைவாயிலை அடுத்த மண்டபத்தில் திருவரங்கம் அரங்கநாதர், கண்ணனின் குருக்ஷேத்திரப் போர் விஷ்வரூபம் ஆகிய சித்திரங்கள் கண்களில் படிகின்றன. ஸ்ரீருக்மணி ஸமேத பாண்டுரங்கனும் சித்திர ரூபத்தில் உள்ளார். ஸந்நிதி கருடனை வணங்கி, த்வஜஸ்தம்பத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரைத் தொழுது, அங்கேயே உள்ள பால ஆஞ்சநேயரைத் தொழுது, அங்கேயே உள்ள பால ஆஞ்சநேயரையும் பணிந்து தும்பிக்கை ஆழிவார் ஸந்நிதிக்கு வருகிறோம். பரமபதவாசல் தனியாக அமைந்துள்ளது.

ப்ரகாரச் சுற்றில் சித்திர ரூபத்தில் ஸ்ரீ உப்பிலியப்பன், லக்ஷ்மி ஹயக்ரீவர், குருவாயூரப்பன், க்ஷீராப்திநாதன், லக்ஷ்மி நரசிம்மர், பக்த ஆஞ்சநேயர், மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாசர், பத்மாவதித்தாயார், எழுந்தருளியிருக்கின்றனர். இவரே ஆதிசேஷ அவதாரமாகத் தோன்றியவர் என்று உருதிப்படுத்தும் வகையில் ராமானுஜரின் சித்திரம் அழகாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம்விட நம் சிந்தையே அள்ளுவது திருப்பாவைச் சித்திரங்களே. பாசுரங்களைச் சித்திரம் மூலம் விளக்கி, ஒவ்வோரு பாசுரத்தின் தலைப்பிலும் அதன் உட்பொருளை எழுதி வைத்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் காணமுடியாத விஷயமாகும். உதாரணமாக மார்கழித்திங்கள் என்ற முதல் பாசுரத்திற்கு உட்பொருளாக சாலச் சிறந்த பக்திச் செல்வம் என்றும் வையத்து வாழ்வீர்கள் பாசுரத்திற்கு உகந்து பேசத் தகுந்த பக்தி சரித்ர பாராயணம் என்றும், குத்துவிளக்கெரிய பாசுரத்திற்கு பிராட்டியின் சம்பந்தத்தை முன்னிட்டே பகவான் என்றும் எழுதப்பட்டு உள்ளது நம் அகத்தில் நன்கு பதிகிறது.

இக்கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ப்ரகாரத்தில் தன் ஸந்நிதியில் அரங்கநாதர், ப்ரும்மா, ஸ்ரீதேவி, பூதேவி, ஸமேதராகச் சிறிய பால சயனராகக் காட்சி அளிப்பது மிகவும் அழகாக உள்ளது. இதே போன்ற அரங்கனை நாம் சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர், ஸீதை, லக்ஷ்மணர், பக்த ஆஞ்சநேயர் மூலவராக, உற்சவராகக் காட்சியளிக்கிறார். உற்சவமூர்த்தியில் பரதரும், சத்ருக்கனும் உடன் உள்ளனர். ஆண்டாள், ராமானுஜர், நிகமாந்த மஹாதேசிகர், மணவாள மாமுனிவர்கள் ஆகியோருக்குத் தனி ஸந்நிதிகள் உள்ளன. கிராமத்துத் தேவதை என்ற தனிமகத்துவத்தோடு ஸ்ரீ விஷ்ணு

துர்கையும் இக்கோயிலில் எழுந்தருளியிருப்பது விசேஷம்.

இந்து அரநிலைய வழிபாட்டுத் துறையினரால் பராமரிக்கப்படும் கோயில்

இது. மற்றைய ஸந்நிதிகளில் நர்த்தணக் கண்ணன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், அவரோடு பின்னிப் பிணைந்த நரசிம்மர், ப்ரதான விஷ்வக்சேனர் உள்ளனர். ஆதிமூலமூர்த்தியாக க்ருஷ்ணர் (400 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்) தனி ஸந்நிதியிலுள்ளார். சித்திர ரூபத்தில் ராமர் பட்டாபிஷேகம், தன்வந்தரி, நவநீத க்ருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். ப்ரதான ஸந்நிதியில் நின்ற கோலத்தில் மூலவராக ஸ்ரீவேங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை ஸாதிக்கிறார். அவ்வண்ணமே உற்சவரும் திகழ்கிறார். உற்சவரின் பாதங்களில் கொலுசு மிக

அழகாக உள்ளது. தனிக் கோயில் நாச்சியாராகத் தாயார் பத்மாவதி எழுந்தருளியுள்ளார். இக்கோயில் ஒரு கட்டுமலை போன்ற ஒரு அமைப்பின் மேல் அமைந்துள்ளதால் திருமலையை நினைவுக்கு கொண்டு வருகிறது. இக்கோயிலிருந்து பார்த்தால் அருகிலுள்ள குமரகிரி முருகன் ஆலயம் தெரிகிறது. சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் அவகான, அற்புதமான ஆலயம் சின்னத் திருப்பதி வேங்கடாஜலபதிக் கோயில்.

விநாவேங்கடேசம் நநாதோ நநாத

ஸதாவேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி.