Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஜீவன் முக்தாநந்தலஹரீ 1 புரே பௌரான் பச்யந் நரயுவதி நாமாக்ருதிமயான் ஸுவேஷான் ஸ்வர்ணாலங்கரண கலிதான் சித்ரஸத்ரு சான் I ஸ்வயம் ஸாக்ஷ£த்ரஷ்

ஜீவன் முக்தாநந்தலஹரீ

1.புரே பௌரான் பச்யந் நரயுவதி நாமாக்ருதிமயான்

ஸுவேஷான் ஸ்வர்ணாலங்கரண கலிதான் சித்ரஸத்ரு சான் I

ஸ்வயம் ஸாக்ஷ£த்ரஷ்டேத்யபி ச கலயன் தைஸ்ஸஹ ரமன்

முனிர் ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா:மிமி

குருவின் தீ¬க்ஷ பெற்று, அதன்மூலம் தமோகுணமும் நீங்கி முனிவராகத் திகழும் ஒருவர் மனமயக்கம் கொள்வதில்லை. பதிலாக அவர், நகரத்துள்ள மனிதர்கள், பெண்டிர் ஆகியோர் நல்ல காட்சியும் நகைகளும் கொண்டு சித்ரமென விளங்குவது பார்த்து, தாம் பார்ப்பதை உணர்ந்தும் அவர்ளுடன் களித்துக் கொண்டுமிருப்பார்.

2.கதாசித்ப்ராஸாதே க்வசிதபி ச ஸெளதேஷ§ தநிநாம்

கதா காலே சைலே க்வசிதபி ச கூலேஷ§ஸரிதாம் I

குடீரேதாந்தாநாம் முனிஜனவராணாமபிவஸந்

முனிர் ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷபிததமா:மிமி

குருவின் உபதேச மொழிகளால் தீயது நீங்கி முனிவராக ஆன பின், ஒரு சமயம் மாளிகைகளிலும், பணக்காரர் வீடுகளிலும் வேறு சில சமயம் நதியின் கரைகளிலும், மலைகளிலும், அல்லது புலனடக்கமெய்திய முனிவர் குயிசைகளிலும் தங்குபவராய் எவ்வித மனமயக்கமும் கொள்வதில்லை.

3.க்வசித்பாலை: ஸார்தம் கரதலகதாலை: ஸஹஸிதை:

க்வசித்தாருண்யாலங்க்ருதநரவதூபி : ஸஹ ரமன் I

க்வசித்வ்ருத்தை: சிந்தாகுலித ஹ்ருதயை ஸ்சாபி விலபன்

முனிர்ந வாயாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா:மிமி

சிலபோது கைதட்டலும், சிரிப்பும் கோலாகலமுமாக இருக்கும் சிறுவரோடும், மற்றொரு சமயம் இளம் மங்கையரோடும், மற்றுமொரு சமயம் கவலைதோய்ந்த கிழவரோடும் புலம்புபவராய் இருந்தும் குருவின் உபதேசம் கேட்டு கெட்ட எண்ணம் நீங்க விளங்கும் முனிவர் மனமயக்கம் கொள்வதில்லையே.

4.கதாசித் வித்வத்பி : விவதிஷ§பிரத்யந்த நிரதை :

கதாசித் காவ்யாங்க்ருதி ரஸரஸாலை: கவிவரை :

கதாசித்ஸத்தர்கை ரனுமிதிபரை ஸ்தார் கிக வரை:

முனிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா:மிமி

மற்றொரு சமயம், அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேட்கையும் உழைப்புமுள்ள அறிவாளிகளோடும், வேறு சில சமயம் காவ்யாலங்காரச் சுவை ததும்ப வர்ணிக்கும் சிறந்த கவிகளோடும், இன்னுமொரு சமயம் நல்லதர்கங்களுடன் அனுமானம் விசாரிக்கும் தர்க சாஸ்திரிகளோடும் இப்படி பலருடன் கூடி இருப்பினும் முனிவர் குருவின் உபதேசம் உணர்ந்து மருட்கை நீங்கியவராய் பின் மயக்கம் கொள்வதில்லையே!

5.கதா த்யானாப்யாஸை: க்வசிதபிஸபர்யம் விகஸிதை:

ஸுகந்தை: ஸத்புஷ்பை: க்வசிதபி தலைரேவ விமலை:மி

ப்ரகுர்வன்தேவஸ்ய ப்ரமுதிதமனா: ஸந்நத்பரோ

முனிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£ க்ஷததமா:மிமி

வேறொரு சமயம் தியானம் செய்தும், இன்னொரு சமயம் மலர்ந்த மணமிள்ள புஷ்பங்களாலும் அல்லது தூய பில்வ துளஸீ தலங்களாலும் தேவ பூஜை சேய்தும், நமஸ்கரித்தும்-இப்படியாக குரு உபதேசத்தால் அஜ்ஞானம் நீங்கியபின் மயக்கம் கொள்வதில்லை.

6.சிவாயா: சம்போர் வா க்வசிதபி ச விஷ்ணோரபிகதா

கணாத்யக்ஷஸ்யாபி ப்ரகடிதவரஸ்யாபி ச கதா I

படன்வை நாமாளிம் நயன ரசிதானந்தஸலிலோ

முனிர்ந வ்யாமோஹம்பஜதி குருதீக்ஷ£க்ஷததமா :II

சில சமயம் சிவனுடையவோ, விஷ்ணுவினுடையவோ அல்லது அம்பிகையினுடையவோ, வரமருளும் விநாயகருடையவோ நாமாவளியை பாராயணம் செய்து, ஆனந்தக் கண்ணீர் மல்கி நிற்கும் துறவி மனமயக்கம் அடைவதில்லையே !

7.கதா கங்காம்போபி:க்வசிதபிச கூபோத்தஸலிலை:

க்வசித்காஸாரோத்தை: க்வசிதபி ஸதுஷ்ணைஸ்சசிரை:மி

பஜன்ஸ்நானம் பூத்யா க்வசிதபிச கர்பூரநிபயா

முநிர்ந வ்யாமோஹம் பஜகு குருதீக்ஷ£ க்ஷததமா:மிமி

சிலசமயம் கங்கை ஜலத்தினாலும், வேறொரு சமயம் கிணற்று நீராலும், மற்றுமொரு மறை குளங்குட்டைத் தண்ணீராலும், ஸ்நானம் செய்து கொண்டு கற்பூர வெள்ளையான விபூதியினாலும் ஸ்நானம் செய்து கொண்டு துறவி மயக்கம் அடைவதில்லையே.

8.கதாசித்ஜாகர்த்யாம் விஷயகரணை: ஸம்வ்யவஹரன்

கதாசித்ஸ்வப்நஸ்தாநபிச விஷயாநேவ ச பஜந் I

கதாசித்ஸெளஷ§ப்தம் ஸுகமநுபவந்நேவஸததம்

முதிர்நவ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£ க்ஷததமா:மிமி

ஒரு சில சமயம் விஷயேந்திரியங்கள் மூலம் ஜாக்ரத் அவஸ்தையல் உலகவிஷயங்களில் ஈடுபட்டும், வேறு சில சமயம் ஸ்வப்நாவஸ்தையில் உள்ள விஷயங்களை சேவித்தும் மற்றும் சில சமயம் ஸுஷ§ப்திநிலையில் உள்ள சுகத்தை அனுபவித்தும் இருக்கிற துறவி குருவின் உபதேசத்தால் அஜ்ஞானம் தெளிந்து பின் மனமயக்கத்தைக் கொள்வதில்லை.

9.கதாப்யாச்வாஸா: க்வசிதிபி ச திவ்யாம்பரதர :

க்விசித்பஞ்சாஸ்யோத்தாம் த்வசமபி ததாந: கடிதடே I

மநஸ்வீ நிஸ்ஸங்க: ஸுஜனஹ்ருத்யானந்த ஜனகோ

முநிந்த வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா:மிமி

சில சமயம் ஆடையில்லாமலும், சில சமயம் திவ்யமான உடைதரித்தும், சில சமயம் சிங்கத்தோலை இடுப்பில் அணிந்தும், தைர்யத்துடனும், பிறர் யணுகாமலும், நல்லோர் மணம் மகிழத்தக்க இருந்தும் துறவியானவர் குருதீ¬க்ஷபெற்று தெளிந்த பின் மயக்கம் கொள்வதில்லையே.

10.கதாசித்ஸத்வஸ்த:க்வசிதப் ரஜோவ்ருத்திஸுகத:

தமோவ்ருத்தி: க்வாபி த்ரியதயரஹித: க்வாபி ச புந:மி

கதாசித்ஸம்ஸாரீ ச்ருதிபதவிஹாரீ க்வசித் அஹோ

முநிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா :II

ஒரு சமயம் ஸத்வகுணம் மேலிட்டும், மற்றொரு சமயம் ரஜோ குணம் தழுவியும், இன்னுமொரு சமயம் தமோ குணம் கொண்டும், சில சமயம் முக்குணமும் இல்லாமலும், சிலசமயம் முக்குணம் நிரம்பியும், ஒரு சில சமயம் ஸம்ஸாரியும், சில சமயம் வேத நெறியில் பற்று கொண்டும் இருக்கிற துறவி குருதீ¬க்ஷயால் அஞ்ஞானம் நீங்கி பின் மனமயக்கம் கொள்வதில்லையே.

11.கதாசித்மௌநஸ்த:க்வசிதபிச வாக்வாதநிரத:

கதாசித்ஸானந்தம் ஹஸிதரபஸ: த்யக்தவசன :I

கதாசித்லோகாநாம் வ்யவஹ்ருதிஸமாலோகநபர:

முனிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா:மிமி

ஒரு சமயம் மௌனமாயும், ஒருசமயம் வாய்ச்சண்டை புரிந்து கொண்டும், ஒரு சமயம் மகிழ்ச்சியுடன் சிரிப்பும் எக்காளமும் கொண்டு பேசாமலும், ஒரு சமயம் உவகத்தோரின் நடையுடைபாவனைகளை கவனித்துக் கொண்டும் இருக்கிற துறவி குரு உபதேசத்தின்படி அஞ்ஞானம் நீங்கப் பெற்றபின் மனமயக்கம் கொள்வதில்லை.

12.கதாசித் சக்தீநாம் விகசமுக பத்மேஷ§ கமலம்

க்ஷிபன் தாஸாம் க்வாபி ஸ்வயமபி ச க்ருஹ்ணந்ஸ்வமுகத: I

ததத்வைதம் ரூபம் நிஜபரவிஹீநம்ப்ரகடயந்

முநிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£ க்ஷததமா :II

ஒரு சில சமயம் சக்திகளின் முகத்தில் தாமரையைப் போட்டுக் கொண்டும், இன்னும் சில சமயம் அந்த சக்திகளின் முகத்திலிருந்து கமலங்களை தானும் பெற்று இப்படியாக, பிறர்தான் என்ற வேற்றுமை தோன்றாத அந்த அத்வதை நிலையை தெளிவாக்கிக் கொண்டிருக்கிற துறவி, குருதீ¬க்ஷ பெற்று அஞ்ஞானம் நீங்கி பின்னேயும் மயக்கத்தை கொள்வதில்லையே!

13.க்வசித் சைவை: ஸார்தம் க்வசிதபி ச சாக்தை: ஸஹவஸந்

கதாவிஷ்ணோர்பக்தை:க்வசித் அபிசச் ஸெளரை: ஸஹவஸந் I

கதாகாணாத்ய¬க்ஷ: கதஸகல பேதோsத்வதயா

முனிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா :II

சில போழ்து சைவர்களோடும், சில போழ்து சாக்தர்களோடும், பிறிதொரு போழ்து வைணவர்களோடும், மற்றொரு போழ்து சூர்ய வழிபாடு உடையவரோடும், சில சமயம் கமபதி உபாஸகரோடும் இப்படி பல துறையாரோடும் பழகுவதால் வேற்றுமை நீங்கி ஒன்றே என்ற நிலை பெற்ற துறவி குருதீக்ஷபெற்ற பின் மனமயக்கம் கொள்வதில்லை.

14.நிராகாரம் க்வாப் க்வசித் அபிச ஸாகாரமமலம்

நிஜம் சைவம் ரூபம் விவித குனைபேதேந பஹ§தா I

கதாssஸ்சர்யம் பச்யன் கிமிதமிதிஹ்ருஷ்யன் அபிகதா

முநிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா:மிமி

சிலசமயம் உருவமுள்ளதாயும், சில சமயம் உருவமில்லாத தாயும், உண்மையான தனது சிவமயமான உருவத்தை பல குணங்கள் வாயிலாகப் பலவாறாக இருக்கும் விந்தையை எண்ணியும், வேறு ஒரு சமயம் இதெப்படி என்று மனதிற்குள் தாமே மகிழ்ந்தும் துறவியானவர் குருவின் உபதேசம் பெற்று தெளிந்த பின் மயக்கம் கொள்வதில்லையே !

15.கதாsத்வைதம் பச்யந் அகிலமபிஸதாயம் சிவமயம்

மஹாவாக்யார்த்தாந்மவகதி ஸமப்யாஸவசத:மி

கதத்வைதாபாஸ: சிவ சிவசிவேத்யேவ விலபன்

முநிர்ந வ்யாமோஹம் பஜதி குருதீக்ஷ£க்ஷததமா :II

மற்றொரு சமயம் எல்லாவற்றையும் சிவமயமாயும் ஸத்யமாயும் இருக்கும் அத்வைத - வேற்றுமையற்ற நிலையைக் கண்டு கொண்டும் த்வதத்தன்மையகன்ற போது சிவ சிவ சிவ என்று மட்டுமே சொல்லிக் கொண்டும் இருக்கிற முனிவர் குருவின் தீ¬க்ஷ பெற்று அஞ்ஞானம் நீங்கிய பின் மயக்கம் கொள்வதுமில்லையே!

16.இமாம் முக்தாவஸ்தாம் பரமசிவஸம்ஸ்தாம் குரு க்ருபா

ஸுதாபாங்க வ்யாப்யாம் ஸஹஜசுகவா ப்யாமனுதினம் I

முஹ§ர்மஜ்ஜந் மஜ்ஜந் பஜதி ஸுக்ருதை ஸ்சேத் நரவர :

ஸதா த்யாகீயோகீ கவரிதிவதந்தீஹ கவய:மிமி

குருவின் கருணாகடாக்ஷமாகிய அமிர்தம் ததும்பும் இயற்கையானந்தப்புனலில் அதாவது பரமசிவமாகி நிற்கும் முக்தி நிலையில் தினமும் திளைத்து திளைத்து விளங்கும் ஒரு ஜீவன் முக்தரை பெரியோர்கள் த்யாகி என்றும், யோகீ என்றும் கவி என்றும் புகழ்வார்கள்

ஜீவன் முக்தானந்தலஹரீ முற்றிற்று. htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it