Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நிர்குண மணஸாபூஜா 1 அகண்டேஸத்-சிதானந்தே நிர்விகல்பைகரூபிணி ஸதிதேsத்விதீய பாவேsபி கதம் பூஜா விதீயதே வேறுபாடு அற்ற ஒரே உருவமான முழு ஸத்-சித்-ஆனந்தம் என்ற நி

நிர்குண மணஸாபூஜா

1.அகண்டேஸத்-சிதானந்தே நிர்விகல்பைகரூபிணி

ஸதிதேsத்விதீய பாவேsபி கதம் பூஜா விதீயதே

வேறுபாடு அற்ற ஒரே உருவமான முழு ஸத்-சித்-ஆனந்தம் என்ற நிலையில் இரண்டாவதொன்றில்லை என்று அத்வைத பாவனையில் எதற்கு பூஜை செய்ய வேண்டும்?

2.பூர்ணஸ்யாவாஹநம் குத்ர ஸர்வாதாரஸ்ய சாஸநம்

ஸ்வச்சஸ்ய பாத்யமர்க்யம் ச சுத்தஸ்யாசமநம்குத:

பூர்ணமாயிருப்பதற்கு எதில் ஆவாஹனம் செய்ய முடியும்?எல்லாவற்றிற்கும் ஆதாரமான ஒன்றிற்கு ஒரிடத்தில் ஆஸனமா?முகத் தூயதான ஒன்றிற்கு பாத்யமமோ அர்க்யமோ, ஆசனமோ வேண்டாமே

3.நிரமலஸ்ய குத:ஸ்நானம் வாஸோ விச்வோதரஸ்யச

அகோத்ரஸ்ய த்வவர்ணஸ்ய குதஸ்தஸ்யோபதகம்

மலமே இல்லாததற்கு ஸ்நானம் வேண்டுமா?உலகையே உதரத்தில் கொண்டுள்ளதால் வஸ்திரம் தேவை இல்லையேகோத்ரம் வர்ணம் இல்லாத ப்ரஹ்மத்திற்கு உபதம்தான் எதற்கு?

4.நிர்லேபஸ்ய குதோகந்த:புஷ்பம் நிர்வாஸனஸ்யச

நிர்விசேஷஸ்ய கா பூஷா கோsலங்காரோ நிராக்ருதே:

பூச்சு ஏதும் (ஒட்டுதல்) இல்லாததற்கு ஏன் சந்தனம்?வாஸனையில்லாததால் புஷ்பமும் தேவையில்லையேசிறப்பு ஏதும் இல்லாத ஒன்றிற்கு பூஷனம் எதற்கு?ஆக்ருதியே இல்லாததால் அலங்காரமும் தேவைப்படாது.

5.நிரஞ்ஜனஸ்ய கிம்தூபை:தீபைர்வா ஸர்வஸாக்ஷீண:

நிஜானந்தைகத்ருப்தஸ்ய நைவேத்யம் கிம்பவேதிஹ

நிரஞ்ஜனம் என்பதால் தூபமும், எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருப்பதால் தீபமும், ஆத்மானந்தம் ஒன்றிலேயே திருப்தி கொண்டுள்ளதால் நைவேத்தியமும் எதற்கு?

6.விச்வாநந்தயிது ஸ்தஸ்ய கிம் தாம்பூலம் ப்ரகல்பதே

ஸ்வயம் ப்ரகாசசித்ரூபோ யோsஸா வர்காதி பாஸக:

உலகையே மகிழ்வில் திளைக்க வைப்பதால் அதற்கு தாம்பூலம் எதுவாகும்?தன்னைத்தானே பிரகாசிக்கச் செய்யும் ஞான ரூபமாகவும், சூர்யன் முதலியோரை கூட விளங்கும்படி செய்யும் அந்த ப்ரம்மம்.

7.கீதயே ச்ருதிபிஸ்தஸ்ய நீராஜன விதி:குத:

ப்ரதக்ஷிண மநந்தஸ்ய ப்ராணாமோணுத்வய வஸ்துந:

வேதங்களால் போற்றப்படுகிறதோ அதற்கு நீராஜனமும் வேண்டுமா?இவ்வளவு - அவ்வளவு என்றில்லாத ஒன்றிற்கு பிரதக்ஷிணம் எப்படியோ?இரண்டாவதே இல்லையென்ற பொழுது நமஸ்காரம் யாருக்கு?

8.வேத வாசாமவேத்யஸ்ய கிம்வா ஸ்தோத்ரம் விதீயதே

அந்தர் பஹிஸ் ஸம்ஸ்திதஸ்ய உத்வாஸந விதி:குத:

வேத வாக்யங்களை கொண்டே அறிய முடியாததை எப்படி ஸ்தோத்திரம் செய்வது?உள்ளும், புறமும் எங்கும் உள்ளதை எங்கிருந்து எங்கே உத்வாஸனம் (இடப்பெயர்ச்சி) செய்து ஒதுக்க முடியும்?

9.ஆராதயா மணிஸந்நிப மாத்ம லிங்கம்

மாயாபுரீ ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்

ச்ராத்தாநதீ விமலசித்த ஜலாபிஷேக கை:

நித்யம் ஸமாதிகுஸுமை ரபுனர் பவாய

மணிக்கு (வைரம் முதலிய) ஒப்பான ஆத்மலிங்கத்தை மாயாபுரியில், ஹ்ருதயத் தாமரையில் அமர்த்தி, சிரத்தையாகிய நதியிலிருந்து, மாசில்லாத சித்தமாகிய ஜலத்தைக் கொண்டு அபிஷேகம், ஸமாதியாகிய புஷ்பங்களால் நிதமும் பூஜையும் செய்கிறேன். எதற்கு என்றால் மறுபிறவி இல்லாதிருக்கவே.

10.அயமேகோsவசிஷ்டோ sஸ்மீத்யேவ மாவாஹயேத்சிவம்

ஆஸனம் கல்பயேத்ப ஸ்சாத்ஸ்வ ப்ரதிஷ்டாத்மசிந்தனம்

இதோ ஆத்மா ஒன்றே பாக்கியுள்ளது என்று சிவனை ஆவாஹனம் செய்யலாம். தனக்குத்தானே நிலை நின்றுள்ள ஆத்மாவை சிந்திப்பதே ஆஸனம் செய்வதாக பாவிக்கலாம்.

11.புண்ய பாபராஜ:ஸங்கோ மம நாஸ்தீதிவேதனம்

பாத்யம் ஸமர்பயேத் வித்வான் ஸர்வ கல்மஷநாசனம்

புண்யம், பாபம் இவற்றாலுண்டான ஸங்கம் ஆத்மாவுக்கு இல்லை என்று அறிவதான பாத்யத்தை விவேகியானவன் ஸமர்பிக்கலாம். அது ஸஞ்சிதம் ஆகா பாபங்களை நீக்கும்.

12.அநாதி கல்பவித்ருத மூலாஜ்ஞான ஜலாஞ்ஜலிம்

விஸ்ருஜேத் ஆத்மலிங்கஸ்ய ததேவார்க்ய ஸமர்பணம்

பண்டைய யுகங்களில் தொடர்ந்து வந்துள்ள அஜ்ஞானத்திற்கு ஜலாஞ்ஜலி விட வேண்டும். அதுவே ஆத்மலிங்கத்திற்கு ஸமர்ப்பிக்கும் அர்க்யம் ஆகும்.

13.ப்ரஹ்மானந்தாப்தி கல்லோல கணகோட்யம்ச லேசகம்

பிபந்தீந்த்ராதய இதி த்யான மாசமநம்மதம்

ப்ரம்மானந்தக் கடலின் அலைகளிலுள்ள கோடித் துளிகளில் ஒரு சிறிதளவு துளியே இந்த்ரன் முதலியோர் அனுபவிக்கின்றனர் என்று தியானித்தலே ஆசமநம் ஆகும்.

14.ப்ரஹ்மானந்தஜலேநைவ லோகா:ஸர்வே பரிப்லுதா:

அக்லேத்யோsய தித்யானம் அபிஷேசன மாத்மந:

ப்ரம்மானந்தத் தண்ணீரால் தான் உலகமெல்லாம் நனைந்துள்ளன. ஆனால் இந்த ஆத்மா மட்டும் நனைக்கப் படாதது என்று தியானிப்பதே ஆத்மாவின் அபிஷேகமாகும்.

15.நிராவரண சைதன்ய ப்ரகாசோsஸ்மீதி திந்தனம்

ஆத்மலிங்கஸ்ய ஸத்வஸ்த்ர த்யேவம் சிந்தயேன்முநி:

மறைவுபடாத உள்ளுணர்வின் புற ஒளியாக (ஆத்மா) நான் இருக்கிறேன் என்று நினைப்பதே ஆத்மலிங்கத்திற்கான நல்ல உடுப்பு என முனிவன் எண்ண வேண்டும்.

16.த்ரிகுணாத்மாசேஷ லோகமாலிகாஸ¨த்ர மஸ்ம்யஹம்

இதி நிஸ்சய ஏவாத்ர ஹ்யுபத் பரம்மதம்

முக்குணத் தன்மையுள்ள அனைத்துலகமாகிய மாலையினூடே செல்லும் நூலாக ஆத்மா உள்ளது என்று நிச்சயித் தால்தான் சிறந்த உபதம் எனக் கருதலாம்.

17.அநேக வாஸநாச்ர ப்ரபஞ்சோsயம்த்ருதோமயா

நான்யேந-இத்யனுஸந்தானம் ஆத்மநஸ் சந்தனம் பவேத்

பல வாஸனைகளுடன் பிசிரிக் கலந்துள்ள இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவது ஆத்மாதான் என்றும் வேறு எவரும் இல்லை என்றும் தொடர்ந்து எண்ணுதல் ஆத்மாவுக்கு சந்தனமாகும்.

18.ரஜஸ்ஸத்வதமோ வ்ருத்தித்யாக ரூபை:திலாக்ஷதை:

ஆத்மலிங்கம் யஜேந்நித்யம் ஜீவன் முக்தி ப்ரஸித்தயே

ரஜஸ்-ஸத்வம்-தமோகுணங்களின் செயல்பாடுகளை விட்டொழித்தலான திலம் அக்ஷதை இவற்றால் தினந்தோறும் ஆத்மலிங்கத்தை வழிபட வேண்டும். அது ஜீவன் முக்தி கிடைப்பதற்கு ஹேதுவாகும்.

19.ஈச்வரோ குரு ராத்மேதி பேதத்ர விவர்ஜிதை:

பில்வ பத்ரைரத்விதீயை ராத்மலிங்கம்யஜேத் சிவம்

ஈச்வரன், குரு, ஆத்மா என்ற மூன்று வேறுபாடில்லாத ஒவ்வொரு பில்வ பத்ரங்களால் ஆத்மலிங்கமாகிய சிவனை அர்சிக்க வேண்டும்.

20.ஸமஸ்த வாஸநாத்யாகம் தூபம் தஸ்ய விசிந்தயேத்

ஜ்யோதிர்மயாத்ம விஜ்ஞானம் தீபம் ஸந்தர்சயேத் புத:

எல்லாவித வாஸனைகளையும் விட்டொழித்தலே ஆத்மாவுக்கு தூபம் காட்டுதல் என எண்ண வேண்டும். ஒளி மயமான ஆத்மாவை நன்கறிதல் தீபம் காட்டுவது என்றும் எண்ண வேண்டும்.

21.நைவேத்ய மாத்மலிங்கஸ்ய பிரஹ்மாண்டாக்யம் மஹெளதனம்

பிபானந்த ரஸம் ஸ்வாது ம்ருத்யுரஸ் யோபஸேசனம்

ஆத்மலிங்கத்திற்கு ப்ரஹ்மான்டமே மஹா நைவேத்திய மாகிறது. ஆனந்தமே ரசமாகவும், ம்ருத்யுவே ஊறுகாயாகவும் ஆகிறது.

22.அஜ்ஞாநோச்சிஷ்ட கரஸ்ய க்ஷ£லனம் ஜ்ஞானவாரிணா

விசுத்தஸ்யாத்ம லிங்கஸ்ய ஹஸ்தப்ரக்ஷ£ல நம்ஸ்மரேத்

அஜ்ஞானத்தால் உச்சிஷ்டாசுசியை ஜ்ஞானமென்ற தண்ணீரால் அலம்புவது சுத்தமான ஆத்ம லிங்கத்திற்கு செய்யும் ஹஸ்த பிரக்ஷலனமாகும்.

23.ராகாதி குணசூன்யஸ்ய சிவஸ்ய பரமாத்மந:

ஸராக விஷயாப்யாஸ த்யாக:தாம்பூல சர்வணம்

ராகம் முதலிய குணங்களற்ற, மங்களகரமான பரமாத்மாவுக்கு ராகங்களோடு கூடிய உலக விஷயங்களை புழங்குவதை தியாகம் செய்வதே தாம்பூல சர்வணமாகும்.

24.அஜ்ஞானத்வாந்த வித்வம்ஸப்ரசண்ட மதிபாஸ்வரம்

ஆத்மநோ ப்ரஹ்மதாஜ்ஞானம் நீராஜனஹாத்மந:

அஜ்ஞான இருளைப் போக்குவதில் தீவிரமான, சூர்யனையும் விஞ்சிய ஆத்மாவுக்கு ப்ரஹ்மத் தன்மை உறுதியாக நம்புதல்தான் ஆத்மாவுக்கு நீராஜனம் காட்டுவதாகும்.

25.விவத ப்ரஹ்மஸம்த்ருஷ்டி மாலிகாபிரலங்க்ருதம்

பூர்ணானந்தாத்மாத்த்ருஷ்டிம் புஷ்பாஞ்ஜலிமனு ஸ்மரேத்

பலவித ப்ரஹ்மங்களைக் காணுவதாகிக மாலைகள் அணிந்தாலும் பூர்ணானந்த ஆத்மாவின் தர்சனமே புஷ்பாஞ்ஜலியாக கொள்ள வேண்டும்.

26.பரிப்ரமந்தி ப்ரஹ்மாண்ட ஸஹஸ்ராணி மயீச்வரே

கூடஸ்தாசல ரூபோsஹம் இதி த்யானம் ப்ரதக்ஷிணம்

எல்லாம்வல்ல ஆத்மாவில் ஆயிரமாயிரம் ப்ரஹ்மாண்டங்கள் சுழலுகின்றன. அவற்றின் நடுவே மலையத்தது ஆத்மா என்று தியானிப்பதே பிரதக்ஷிணமாகும்.

27.வித்வ வந்த்யோsஹமேவாஸ் நாஸ்தி வந்த்யோ மதன்யக:

இத்யாலோசனமே வாத்ர ஸ்வாத்ம லிங்கஸ்ய வந்தனம்

ஆத்மாதான் உலகத்தார் வந்தனம் செய்யத் தக்கது. ஆத்மாவைத் தவிர வேறு எவரும் வணக்கத்திற்குறியவரில்லை என்று நினைப்பதே ஆத்ம லிங்கத்திற்கு வந்தனமாகும்.

28.ஆத்மந:ஸத்கிரியா ப்ரோக்தா கர்தவ்யாபாவ பாவநா

நாமரூப வ்யதீதாத்ம சிந்தனம் நாமகீர்தநம்

வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று பாவிப்பதே ஆத்மாவுக்கு செய்யும் ஸத்காரம். நாமம், ரூபம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆத்மாவை சிந்திப்பதே நாம கீர்த்தனமாகும்.

29.ச்ரவணம் தஸ்ய தேவஸ்ய ச்ரோதவ்யா பாவசிந்தனம்

மநநம் த்வாத்மலிங்கஸ்ய மந்தவ்யாபாவ சிந்தனம்

வேறு காதால் சிரவணம் செய்யத் தக்கதில்லை என்று எண்ணுவதே அந்த கடவுளுக்கு ஏற்ற சிரவணமாகும். ஆத்ம லிங்கத்தை மனனம் என்றதாகும்.

30.த்யாதவ்யாபாவ விஜ்ஞாநம் நிதித்யாஸனமாத்ந:

ஸமஸ்த ப்ராந்திவிக்ஷேப ராஹித்யேநாத்ம நிஷ்டதா

வேறு தியானம் இல்லை என்று உறுதியாக அறிவதே நிதித்யாஸனமாகும். எல்லாவித மயக்கம், இன்னல்கள் இல்லாதிருத்தலே ஆத்மாவில் நிலைத்திருத்தலாகும்.

31.ஸமாதிராத்மநோ நாம நான்யத் சித்தஸ்ய விப்ரம:

த த்ரைவ ப்ரஹ்மணி ஸதாசித்த விச்ராந்திரிஷ்யதே

ஆத்மாவை தவிர வேறு விப்ரமம் இல்லாதிருத்தலே ஆத்ம ஸமாதியாகும். இவ்வாறு ப்ரஹ்மத்தில் சித்தலயம் வேண்டும்.

32.ஏவம் வேதாந்த கல்போக்த ஸ்வாத் மலிங்கப்ரபூஜநம்

குர்வன் ஆமரணம் வாபி க்ஷணம்வாஸுஸமாஹித:

இவ்வாறு வேதாந்த கல்பசூத்ரத்தில் கூறியபடி ஆத்மலிங்க பூஜையை மரண காலம் வரை அல்லது ஒரு சில நிஷங்களாவது அடக்கமுடையவனாகி செய்து வருபவன்.

33.ஸர்வ துர்வாஸனாஜாலம் பதபாம்ஸுவ த்யஜேத்

விதூயாஜ்ஞானது:கொளகம் ப்ரஹ்மானந்தம் ஸமச்னுதே:

எல்லாகெட்ட வாசனைகளையும் கால்தூசு போல விட்டொழித்து அஜ்ஞானத்தில் உண்டான துன்பங்களனைத்தையும் உதறிக் களைத்தபின் மோக்ஷ£னந்தத்தை அனுபவிப்பான்.

நிர்குண மானஸபூஜா முற்றிற்று.


htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it