Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தசச்லோகீஸ்துதி : 1 ஸாம்போந:குலதைவதம் பசுபதே ஸாம்ப த்வதீயாவயம் ஸாம்பம் ஸ்தௌமி, ஸுராஸுரோரககணோ:ஸாம்பேந ஸந்தாரிதா: ! ஸாம்பாயாஸ்து நமோ மயா விரசி

தசச்லோகீஸ்துதி :

1.ஸாம்போந:குலதைவதம் பசுபதே ஸாம்ப த்வதீயாவயம்

ஸாம்பம் ஸ்தௌமி, ஸுராஸுரோரககணோ:ஸாம்பேந ஸந்தாரிதா: !

ஸாம்பாயாஸ்து நமோ மயா விரசிதம் ஸாம்பாத்பரம் நோ பஜே

ஸாம்பஸ்யாநு சரோsஸ்ம்யஹம் மம ரதி:ஸாம்பே பரப்ரஹ்மணி !!

எங்கள் குலதைவம் உமையுடன் கூடிய பரமேச்வரனே!ஹேபசுபதே!ஸாம்ப! நாங்கள் உம்மைச் சேர்ந்தவர். பக்தர்கள். ஸாம்பனை நான் வண்குகிறேன். அம்பாளுடன் உறையும் பரமேச்வரனால் தேவர்கள், அஸுரர்கள், நாகர்கள் ஆகியோர் முன்னேற்றம் அடைவிக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஸாம்பருக்கு நான் செய்யும் நமஸ்காரம். ஸாம்பரை விட, வேறு தைவத்தை நான் ஸேவிக்கவில்லை. உமையுடன் கூடிய பரமேச்வரனின் பக்தன் நான். எனக்கு பரம்பொருளான ஸாம்பரிடத்தில் மிகுந்த பக்தி, ஈடுபாடு உண்டு.

2.விஷ்ணு-ஆத்யாஸ்ச புரத்ரயம் ஸுரகணா ஜேதும் ந சக்தா:ஸ்வயம்

யம் சம்பும் பகவான் வயம் து பசவோsஸ்மாகம் த்வமேவேச்வர: !

ஸ்வஸ்வஸ்தான நியோஜிதா:ஸுமனஸ:ஸ்வஸ்தா பபூவுஸ்தத:

தஸ்மின்மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்மணி !!

எந்த பரமேச்வரனில்லாமல் மற்ற விஷ்ணு முதலிய தேவகணங்கள் திரிபுரங்களை ஜயிக்க முடியவில்லையோ ஆனால் எந்த பரமேச்வரனால் அவரவரிடத்தில் அமர்த்தப்பட்டு, பிறகு தேவர்கள் தன்நிலையும் அமைதியும் கொண்டனரோ அந்த பரம்பொருளான பரமேச்வரனிடத்தில் என் மனம் களிக்கட்டும்.

3.க்ஷே£ணீ யஸ்யரதோ ரதாங்கயுகலம் சந்த்ரார்கபிம்பத்வயம்

கோதண்ட:கனகாசலோ ஹரிபூத் பாணோ விதி:ஸாரதி: !

தூணீரோ ஜலதி:ஹயா:ச்ருதிசயோ மௌர்வீ புஜங்காதிப:

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்மணி: !!

எவருடைய தேராக பூமி ஆயிற்றோ;சந்திரனும் சூர்யனும் தேர்ச்சக்கரங்களாயினரோ, மஹாமேரு வில்லாகவும், விஷ்ணு பாணமாகவும், பிரம்ம தேவன் தேரோட்டியாகவும், சமுத்ரம் அம்பராதூணியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், ஆதிசேஷன் ஞாணாகவும் ஆயினரோ அந்த பரப்ரஹ்மஸ்வரூபியான பரமேச்வரனிடத்தில் என் மனம் களிப்படையட்டும்.

4.கோவிந்தாத் அதிகம் ந தைவதமிதி ப்ரோச்சார்ய ஹஸ்தாவுபௌ

உத்ருத்யாத சிவஸ்ய ஸந்நிகதோ வ்யாஸோ முனீநாம் வர: !

யஸ்ய ஸ்தம்பிதபாணி ராநதிக்ருதா நந்தீச்வரேணாபவத்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்ணி !!

கோவிந்தனுக்கு மேல் தெய்வம் கிடையாது என்று கையை தூக்கியபடி கூறி சிவஸ்ந்நிதிக்கு வந்த வ்யாஸருடைய கையை, எந்த பரமேச்வரனின் பணிவிடையில் ஈடுபட்டிருந்த நந்திகேச்வரர் ஸ்தம்பிக்கச்செய்தாரோ அந்த பரம்பொருளான பரமேச்வரனிடம் என் மனம் களிப்படையட்டும்.

5.யேநாபாதித மங்கஜாங்க பஸிதம் திவ்யாங்கராகை:ஸமம்

யேந ஸ்வீக்ருத மப்ஜஸம்பவசிர:ஸெளவர்ண பாத்ரை:ஸமம்

யேநாங்கீக்ருத மச்யுதஸ்ய நயனம் பூஜாரவிந்தை:ஸமம்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்ணி !!

மன்மதனின் சரீரச் சாம்பலை திவ்யமான உடற்பூச்சுடன் எவர் ஆக்கிக் கொண்டாரோ, தங்கப்பாத்திரங்களுடன் இணையும்பட ப்ரஹ்ம தேவனின் தலையையும் எவர் செய்தாரோ, பூஜைக்குறிய தாமரைப் புஷ்பங்களுடன் மஹாவிஷ்ணுவின் கண்ணையும் எவர் ஏற்றுக் கொண்டாரோ அப்படிப்பட்ட பரமேச்வரனிடம் என் மனம் சுகமாக களிக்கட்டும்.

6.ஆகாச:சிகுராயதே தசதிசாபோகோ துகூலாயதே

சீதாம்சு:ப்ரஸவாயதே ஸ்திரதரா னந்த:ஸ்வரூபாயதே !

வேதாந்தோ நிலயாயதே ஸுவிநயோ யஸ்ய ஸ்வரூபாயதே

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரம்ரஹ்மணி !!

எவருக்கு ஆகாயம் கேசங்களாக உள்ளனவோ, பத்து திசைகளின் உட்புறம் எவருக்கு சந்திரன்தான் புஷ்பமாகிறதா, நித்யானந்தம் எவருக்கு வடிவமாகிறதோ, வேதாந்தம் இருப்பிடமாகிறதோ, எவருக்கு விநயம்தான் ஸ்வபாவமோ அந்த பரம்பொருளான ஸாம்ப சிவனிடம் என் மனம் களிப்படையட்டும்.

7.விஷ்ணுர்யஸ்ய ஸஹஸ்ரநாம நியமாத் அம்போருஹாண் யர்சயன்

ஏகோநோப சிதேஷ§ நேத்ரகமலம் நைஜம் பதாப்ஜத்வயே !

ஸம்பூஜ்யாஸுரஸம்ஹதிம் விதலயன் த்ரைலோக்ய பாலோsபவத்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்ணி !!

'ஸஹஸ்ரநாம பூஜை'என்ற நியமம் மேற்கொண்டு, விஷ்ணு தாமரைப் புஷ்பங்களால் சிவனின் திருவடிகளைப் பூஜித்தார். அப்பொழுது ஒன்று குறைந்தபொழுது தனது தாமரையத்த கண்ணையே எடுத்து பூஜித்தார். அஸுரர்களையும் அழித்து, மூவுலகத் தலைமையையும் ஏற்றார். அப்படிப்பட்ட ஸாம்ப பரமேச்வரரிடம் என் மனம் சுகமாக களிக்கட்டும்.

8.சௌரிம் ஸத்யகிரம் வராஹவபுஷம் பாதாம் புஜாதர்சனே

சக்ரே யோ தயயா ஸமஸ்தஜகதாம் நாதம் சிரோதர்சனே !

மித்யா வாச மபூஜ்யமேவ ஸததம் ஹம்ஸஸ்வரூபம் விதிம்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்ணி !!

ஜ்யோதிப்பிழம்பாய் நின்ற பரமேச்வரனின் திருவடிகளைக் கண்டு பிடிக்க பன்றியுருவம் தாங்கி முயன்றும் கண்டுபிடிக்க முடியாததை ஒப்புக்கொண்டு உண்மை பேசிய விஷ்ணுவை தயவுடன் உலகமனைத்திற்கும் தலைவராக்கினார் பரமன். ஆனால் அன்னப் பறவையாகி முடி காண்பேன் என்று கூறி பொய்யாகக் கண்டு விட்டதாகக் கூறிய பிரம்மனை ஒரு போதும் பூஜிக்கத்தக்கவரில்லை என்று முடிவு செய்த அந்த பரமேச்வரன் பால் என் மனம் களிக்கட்டும்.

9.யஸாயாஸன் தரணீ ஜலாக்னிபவந வ்யோமார்கசந்த்ராதயோ

விக்யாதாஸ்தனவோsஷ்டதா பரிணதா நான்யத்ததோ வர்த்ததே !

ஒங்கா ரார்த்தவிவேசனீ ச்ருதிரியம் சாசஷ்ட துர்யம் சிவம்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்ணி !!

எந்த பரமனுடைய சரீரம், ப்ருதிவி, அப், தேஜஸ், வாயு, ஆகாசம், சூர்யன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டுவிதமான பரிணமித்ததைத்தவிர வேறு ஒன்றுமில்லையோ, ஒங்காரப் பொருளை ஆராய்ந்த வேதமும் சிவனை துரீயமாக வர்ணித்ததோ அந்த ஸாம்பபரப்ரஹ்மத்தில் என் மனம் ஆனந்த களிப்பு எய்தட்டும்.

10.விஷ்ணுப்ரஹ்மஸுராதிப ப்ரப்ருதய:ஸர்வேsபிதேவா யதா

ஸம்பூதாத்ஜலதேர்விஷாத்பரிபவம் ப்ராப்தாஸ்ததா ஸத்வரம் !

தாநார்தான் சரணாகதாநிதிஸுரான் யோsரக்ஷ தர்தக்ஷணாத்

தஸ்மின் மே ஹ்ருதயம் ஸுகேந ரமதாம் ஸாம்பே பரப்ரஹ்ணி !!

விஷ்ணு, பிரம்மா, மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் பாற்கடலில் தோன்றிய விஷத்தினால் தொல்லையடைந்த பொழுது, 'என்னையே சரணம்!என்று நம்பியிருக்கிறார்கள் இவர்கள்'- என்று எண்ணி எந்த பரமன் ஒரு அரைநெடியில் அனைவரையும் பாதுகாத்தாரோ அந்த ஸாம்பசிவனிடத்தில் எனது மனம் அமைதியுடன் களிப்பு அடையட்டும்.

தசச்லோகீஸ்துதி முற்றிற்று .

htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it