Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

சிவகேசாதி பாதாந்த வர்ணனஸ்தோத்ரம் 1 தேயாஸுர்மூர்த்னி ராஜத்ஸரஸஸுரஸரித்பாரபர்யந்த நிர்யத் ப்ராம்சுஸ்தம்பா:பிசங்காஸ்துலிதபரிணதாரக்த சாலீலதா வ: I து

சிவகேசாதி பாதாந்த வர்ணனஸ்தோத்ரம்

1.தேயாஸுர்மூர்த்னி ராஜத்ஸரஸஸுரஸரித்பாரபர்யந்த நிர்யத்

ப்ராம்சுஸ்தம்பா:பிசங்காஸ்துலிதபரிணதாரக்த சாலீலதா வ: I

துர்வாராபத்திகர்த்த ஸ்ரீத நிகலஜனோத்தாரணே ரஜ்ஜுபூதா:

கோராகோர்வீருஹாலீ தஹன சிகிசிகா:சர்ம சார்வா:கபர்தா: II

பரமேச்வரனுடைய ஜடை உங்களுக்கெல்லாம் மங்களம் தந்தருளட்டும், அந்தஜடை, சிவனதுதலையில் விளங்கும் தேவகங்கைக்கரையில் முளைத்து வளர்ந்த நெற்பயிரே போன்று முதிரிந்து மஞ்சள் நிறம் கொண்டவை. தடுக்க முடியாதபடி வந்து சேரும் ஆபத்தாகிய பள்ளத்தினின்று அனைவரையும் மேலே தூக்க உதவும் கயிறு போன்றவை அவை. மேலும் அவை கோரமானபாபமாகிய விஷப்புல்லை சுட்டெரிக்கும் தீயின்ஜ்வாலை போன்றவை.

2.குர்வந்நிர்வாணமார்க ப்ரகமபரிலஸத்ரூப்ய ஸோபானசங்காம்

சக்ராரீணாம் புராணாம் த்ரயவிஜயக்ருதஸ்பஷ்ட ரேகா யமாணம் !

அவ்யாதவ்யாஜ முச்சை ரலிகஹிமதராதித்யகாந் தஸ்த்ரிதோத்யத்

ஜான்ஹவ்யாபம் ம்ருடானீகமிதுருடுப ருக்பாண்டரம்வஸ்த்ரி புண்டராம் II

சந்திரன் போல வெள்ளை வெளேரென்ற, பரமேச்வரனின் நெற்றி முப்பிரிப்பட்டை உங்களை நேர்மையுடன் காக்கட்டும். அது மோக்ஷமார்கத்தில் சுலபமாகச் செல்வதற்கு அமைந்த வெள்ளிப்படியோ என்று சந்தோஷத்தை கிளப்பும் பரமேச்வரனின் திரிபுரம் எரித்ததை காட்டவென்றே தீட்டிய மூன்று கோடுகளாக அமையும். மேலும், அவரது நெற்றியாகிய பனித்தரையில் ஒடும் கங்கையின் மூன்றுகிளைகள் போலவும் விளங்கும்.

3.க்ருத்யத்கௌரீப்ரஸாதா நதிஸமய பதாங்குஷ்டஸங்க்ராந்தலாக்ஷ

பிந்துஸ்பர்த்தி ஸ்மராரே:ஸ்படிகமணித்ருஷன் மக்ன மாணிக்ய சோபம் !

மூர்த்ன்யத்யத்திவ்யஸிந்தோ:பதிதசபரிகாகாரி வோ மாஸ்தகம் ஸ்தாத்

அஸ்கோகாபத்திக்ருத்யை ஹ§தவஹகணிகாமோக்ஷரூக்ஷம் ஸதாக்ஷி II

பரமேஸ்வரனது நெற்றிக்கண் உங்கள் தீராத தீயதுகளைப் பொசுக்கும் தீப்பொறியாக எப்பொழுதும் மிளிரட்டும். அந்த கண், ஏதோகாரணத்தால் கோபித்துக் கொண்ட பார்வதீயை சமாதானமடையச்செய்ய வணங்கும் போது, பார்வதீயின் கால்கட்டை விரலிலிருந்து நெற்றியில் பற்றிய லாக்ஷ£த்துளியோவெனத் தோன்றும். அல்லது ஸ்படிகமணித்தரையில் பதித்த மாணிக்கமோ வென்று நினைக்கத் தோன்றும். அல்லது பரமேசுவரன் தலையில் துலங்கும் கங்கையிலிருந்து துள்ளிக்குதித்த மீனோ என்றும் நினைக்கத் தோன்றும்.

4.பூத்யை த்ருக்பூதயோ:ஸ்யாத் யதஹிம ஹிமருக் பிம்பயோ:ஸ்நிக்த வர்ணோ,

தைத்யௌகத்வம்சசம்ஸீ ய்புட இவபரிவேஷா வசேஷோ பிபாதி I

ஸர்கஸ்தித்யந்தவ்ருத்திர்மயி ஸமுபகதேsதீவ நிவ்ர்ருத்தகர்வம்

சர்வாணீபர்துருச்சைர்யுகல மத ததத்விப்ரமம் தத்ப்ருவோர்வ: II

பரமேச்வரனின் கண்களாக அமைந்த சூர்ய சந்திரக்களின் அருகில் தோன்றிய பரிவட்டப்பகுதியோ என நினைக்கத்தோன்றும் புருவங்கள் உங்களைவருக்கும் மங்களமளிப்பதாக ஆகட்டும். அது முன்பே அசுரர்களை அழிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டதுதான். மேலும் அவ்விரு புருவங்களும் நாங்கள் ஒருக்கமான போதுதானே இவர் (பரமேச்வரன்) ஸ்ருஷ்டி, vFF, ப்ரளயம் ஆகியவற்றைத் தொடங்குகிறார் என்று கர்வம் மேலிட்டு அழகாக மிளிர்கின்றனவே!

5.யுக்மே ருக்மாப்ஜபிங்கே க்ரஹ இவ பிஹிதேத்ராக்யயோ:ப்ராக்துஹித்ரா

சைலஸ்ய த்வாந்த நீலாம்பரரசிதப்ருஹத்கஞ்சு கோsபூத் ப்ரபஞ்ச: I

தே த்ரைநேத்ரே பவித்ரே த்ரிதச வரகடாமித்ரஜேத்ரோக்ரசஸ்த்ரே

நேத்ரே நேத்ரே பவேதாம் த்ருதமிஹ பவதா-மிந்த்ரியாச்வான் நியந்தும் II

முன்னோருஸமயம் பார்வதீ, தங்கத் தாமரையத்த க்ரஹங்களேயான எந்த இரண்டு கண்களை திடீரென மூடிய பொழுது, இந்தப்பரபஞ்சம் இருளாகிய நீலத்துணியிலான கஞ்சுகம் தரித்ததாக ஆயிற்றோ, முக்கண்ணரது பரிசுத்தமான அந்த இரண்டு கண்கள் உங்களனைவரது இந்த்ரியங்களாகிய குதிரைகளையடக்கி, கொண்டுசெல்லத் தக்கதாக அமையட்டும். அவை தேவர்கூட்டத்தின் நண்பர்களாகவும் வெற்றிகொள்ளும் சீரிய சஸ்திரமாகவும் இருந்தவையன்றோ!

6.சண்டீவக்த்ரார்ப்பணேச்சோஸ்ததனு பகவத:பாண்டுருக் பாண்டு கண்ட

ப்ரோத்யத் கண்டூம் விநேதும் விதனுத இவ யே ரத்ன கோணைர் விக்ருஷ்டிம்

சணடார்ச்சிர்மண்டலாபே ஸதத நதஜன த்வாந்தகண்டாதிசௌண்டே

சண்டீசே தே ஸ்ரீயே ஸ்தாமதிகமவநதாகண்டலே குண்டலே வ: II

ஒரு சில சமயம் பார்வதீக்கு சும்பனம் கொடுக்க விரும்புவார்பரமேச்வரன். அதுசமயம் மிக வெண்மையான கன்னத்தில் தோன்றிய தினைவப்போக்க எந்த குண்டலங்கள் தனது ரத்னங்களின் முனையால் உராய்வைச் செய்வதுண்டோ அந்த குண்டலங்கள் உங்களுக்கு மிகவும் செல்வமளிப்பவையாக இருக்கட்டும்!அவை, சூர்யமண்டலம் போன்று வணங்கிய பக்தர்களின் அஜ்ஞான இருளைப்போக்க மிகவும் தேற்சிப்பெற்றவை மட்டுமல்ல இந்திரன் முதலியோர் வணக்கத்திற்குரியவையும்கூட.

7.கட்வாங்கோதக்ரபாணே:ஸ்புடவிகடபுடோ வக்த்ரரந்தரவேச

ப்ரேப்ஸ¨தஞ்சத்பணோருச்வஸ ததி-தவலாஹீந்த்ரசங்காம் ததாந: I

யுஷ்மாகம் கம்ரவக்த்ராம்பு ருஹபரிலஸத் கர்ணிகாகாரசோப:

சச்வத் த்ராணாய பூயாதலமதிவிமலோத் துங்ககோண: ஸ கோண:

கையில் வாள் ஏந்திய பரமேச்வரனின் மிகவும் தூய்மையான துணிகளையுடைய அந்த மூக்கு உங்களை காக்க சித்தமாயிருக்கட்டும்!அந்த மூக்கு, கீழ்நோக்கி தொங்கிய தாமரை மலரின் கர்ணிகையோ என்று சந்தேஹிக்கும்படி அழகாயிருக்கும். நன்றாக துரித்த பக்கங்களையுடையதாகவும், வாய்க்குள்ளே நுழையப்பார்க்கும் படமெடுத்த வெண்நாகம் போன்றும் அது மிளிரும்.

8.க்ருத்யத்யத்தா யயோ:ஸ்வாம் தனுமதிலஸதோர்பிம்பிதாம் லக்ஷயந்தீ

பர்த்ரேஸ்பர்தாதிநிக்நா முஹ§ரிதரவதூசங்கயா சைலகன்யா I

யுஷ்மாம்ஸ்தௌ சச்வதுச்சை ரபகுலதசமீசர்வரீசாதிசுப்ரௌ

அவ்யாஸ்தாம் திவ்யஸிந்தோ:கமிது ரவநமல் லோகபாலென கபோலௌ: II

மிகவும் பளபளப்பான இருகன்னங்களில் நிழலாடிய தனது வடிவையே கண்டு வேறு பெண்மணியோ என்று சங்கித்து பர்த்தாவை பொறாமையுடன் பார்வதீ வெகுண்டதுண்டே!அந்த இரு கன்னங்களும் உங்களை எப்பொழுதும் காக்கட்டும். கங்கையின் பதியான பரமேச்வரனின் அந்த கன்னங்களை மிகவும் தூயதாயும் அவை மிளிருமே!

9.யோ பாஸா பாத்ஸுபாந்தஸ்தித இவ நிப்ருதம் கௌஸ்துபோ த்ரஷ்டுமிச்சன்

யோத்தஸ்நேஹாந்நிதாந்தம் கலகத கரலம்பத்யுருச்சை:பசூனாம் I

ப்ரோத்யத்ப்ரேம்ணா யமார்த்ரா பிபதி கிரிஸுதா ஸம்பத:ஸாதிரேகா

லோகா:சோணீக்ருதாந்தா:யததரமஹஸா ஸோsதரோ வோ விதத்தாம் II

பரமேச்வரனின் எந்த உதடு கௌஸ்துபமாக ஆக தன்னுடன் தோன்றிய ஆலகாலம், பசுபதியின் கழுத்தில் சிக்கியுள்ளதே என்று மெதுவாக தனது ஒளிமூலம் கண்டறிய விழைகிறதா!எந்த உதட்டைபார்வதீ உவகையுடன் பருக ஆசைப்படுகிறாளோ, எந்த உதட்டின் ஒளியால் உலகம் முழுவதும் சிவப்பாக ஆக்கப்பட்டனவோ, அவ்வுதடு உங்களுக்கு மிகுந்த செல்வத்தை உண்டாகச் செய்யட்டும்.

10.அத்யர்தம் ராஜதே யா வதனசசதராதுத்கலச்சாரு வாணீ

பூயூஷாம்ப:ப்ரவாஹப்ரஸர பரிலஸத்பேன பிந்த்வாவலீவ I

தேயாத்ஸா தந்தபங்க்திஸ்சிரமிஹ தனுதாயாத தௌவாரிகஸ்ய

த்யுத்யா தீப்தேந்து குந்தச்சவிரமலதர ப்ரோந்நதாக்ரா முதம் வ: II

சூர்யனின் பிரகாசத்தால் மலர்ச்சிபெற்ற சந்திரன், குந்த புஷ்பம் ஆகியவைபோல் மிளிர்கின்ற நீண்ட நுணியுடைய பரமேச்வரனின் பற்கள் வரிசை உங்களுக்கு நீண்டகாலம் சநேதோஷத்தையளிக்கட்டும். அந்த தந்தவரிசை, சந்திரனையத்த முகத்தினின்று தோன்றும் அழகிய பேச்சில் அம்ருதப்பெருக்கில் உள்ள நுரைத்துளிகள்போல் வெகுவாக விளங்கிக்கொண்டிருக்குமே!

11.ந்யக்குர்வந்நுர்வராப்ருந்நிபகனஸமயோத் குஷ்டமேகௌக கோஷம்

ஸ்பூர்ஜத்வார்த்யுத்திதோகுத்வனிதமபி பரப்ரஹ்மபூதோ கபீர: I

ஸுவ்யக்தோவ்யக்தமூர்தே:ப்ரகடிதகரண:ப்ராணநாதஸ்ய ஸத்யா:

ப்ரீத்யாவ:ஸம்விதத்யாத் பலவிகல மலம் ஜன்ம நாத:ஸ நாத: II

ஸதீதேவியின் ப்ராணநாதறான பரமேச்வரனின் தெளிவாகத்தோன்றும் அந்த கண்டநாதம் உங்களுக்கு அன்புடன் பிறவி இல்லாமல் செய்யட்டும். அந்தநாதம், கம்பீரமாயும் பரப்ரஹ்மமாயும் ஆனது மட்டுமல்ல மலைபோன்ற மேகங்களின் மழைக்கால இடி முழக்கத்தையும், பொங்கியெழும் கடலின் சீற்றத்வனியையும் ஒன்றுமில்லையெனச் செய்வதுமாகும்.

12.பாஸா யஸ்யத்ரிலோகீ லஸதி பரிலஸத்பேன பிந்க்வர்ணவாந்த

வ்யாமக்னெவாதிகௌரஸ்துலித ஸுரஸரித் வாரிபூரப்ரஸார: I

பீனாத்மா தந்தபாபிர்ப்ருச மஹஹஹகாராதி பீம்:ஸதேஷ்டாம்

புஷ்டாம் துஷ்டிம் க்ருஷீஷ்டஸ்புட மிஹ பவதா மட்டஹாஸோsஷ்டமூர்த்தே:

அஷ்ட மூர்த்தியான பரமேச்வரனின் அட்டஹாஸம் உங்களுக்கு எப்பொழுதும் விரும்பத்தக்கதான ஸந்தோஷத்தை செய்யட்டும். அந்த அட்டஹாஸம் பற்களின் பிரகாசத்தால் பகுத்தும், அஹஹஹ என்று பயங்கர ஒலியுடன் கூடியதுமாகும். ஆகாசங்களின் பிரவாஹப்பெருக்கை போன்று மிக வெண்மையானது. நுரையுடன் கூடிய சமுத்திரத்தினுள் மூழ்கியது போல் வெண்மையானது. அதன் பிரகாசத்தால்தான் மூவுலகும் விளங்குகிறது.

13.ஸத்யோஜாதாக்ய மாப்யம் யது விமல முதக்வர்ததி யத்வாமதேவம்

நாம்நா ஹேம்னாஸத்ருக்ஷம் ஜலதநிபமகோ ராஹ்வயம் த்க்ஷிணம்யத் I

யத்பாலார்க்கப்ரபம் தத்புருஷநிகதிதம் பூர்வமீசானஸம்ஜ்ஞம்

யத்திவ்யம் தாநி சம்போர்பவதபிலஷிதம் பஞ்ச தத்யுர்முகானி II

தண்ணீர்மயமான ஸத்யோஜாத மென்ற முகம் ஒன்று, தங்கத்தையத்த வாமதேவமுகம் முகம் ஒன்று, தென் பாகத்தில் மேகத்தையத்த அகோரம் என்ற முகம் ஒன்று, இளம் சூர்யனையத்த தத்புருஷமுகம் ஒன்று. கிழக்கு திசையில் திவ்யமான ஈசான முகம் ஒன்று. இப்படியான சிவனின் ஐந்து முகங்கள் உங்கள் விருப்பத்தை கொடுப்பவையாகட்டும்.

14.ஆத்மப்ரோம்னா பவான்யா ஸ்வயமிவ ரசிதா ஸாதரம் ஸாம்வன்னயா

மஷ்யா திஸ்ர:ஸுநீலாஞ்ஜன நிபகரரேகா:ஸமாபாந்தி யஸ்யாம் I

ஆகல்பாநல்ப பாஸா ப்ருசருசிரதரா கம்பு கல்பாsம்பிகாயா:

பத்யு:ஸாத்யந்த மந்தர்விலஸது ஸததம் மந்தரா கந்தரா வ: II

அம்பிகையின் மணாலனான சிவனின் சங்கு போன்ற சற்று மேடுபள்ளமான அந்த அழகிய கழுத்து உங்கள் உள்ளங்களில் எப்பொழுதும் விளங்கட்டும். அந்த கழுத்தில் அம்பிகை தானே மிக ஆதரவுடன் நேர்த்தியான மஷிகொண்டு தனது அன்பின் அடையாளமாக இட்ட மூன்று நீல மையெத்த ஆலகால விஷ ரேகைகள் விளங்குகின்றன.

15.வக்த்ரேந்தோர்தந்த லக்ஷ்ம்யா:சிரமதரமஹாகௌஸ்து பஸ்யாப்யுபாந்தே

ஸோத்தானாம் ப்ரார்த்தயன்ய:ஸ்திதிமசலபுவே வரரயந்த்யை நிவேசம் I

ப்ராயுங்க்தேவாசிஷேய:ப்ரபதமம்ருதத்வே ஸ்தித:காலசத்ரோ

காலம் குர்வன்கலம் வோ ஹ்ருதய மயமலம் க்ஷ£லயேத் காலகூட: II

முகசந்திரனுக்கும், தந்தலஷ்மிக்கும், உதடு ஆகிய கௌஸ்து பத்திற்கும் இப்படி சகோதரர்களுக்கு அருகில் தனக்கு இருக்கையை வேண்டுகிற அந்தகாலகூடம், உள்ளே புகாதிருத்தலை வேண்டிய பார்வதீக்கு ஆசிர்வதித்ததோடு முழுவதும் அம்ருத நிலையிலேயே இருந்து கொண்டு, காலசத்ருவான பரமேச்வரனின் கழுத்தை கருமையாக்கி கொண்டிருக்கிறதாய் உங்கள் ஹ்ருதய கமலத்தை சுத்தம் செய்யட்டும்.

16.ப்ரௌட ப்ரேமாகுலாயா த்ருடதர பரிரம்பேஷ§ பர்வேந்து முக்யா:

பார்வத்யா ஸ்சாகு சாமீகர வலய பதை ரங்கிதம் காந்தி சாலி I

ரங்தந்நாகாங்கதாட்யம் ஸதத மவிஹிதம் கர்ம நிர்மூலயேத்தத்

தோர்மூலம் நிர்மலம் யத்துருதி ஹ்ருதமபாஸ்யாஜிதம் தூர்ஜடேர்வர்: II

பரமேச்வரனின் நிரமமலமான அஃகுள் உங்களுடைய ஹ்ருதயத்தில் தேக்கிய தர்ம சாஸ்திரத்தில் தடைசெய்யப்பட்ட கர்மாவை அறவே ஒழிக்கட்டும். அந்த அஃகுள் தவழும் நாகாங்கதம் கொண்டதாய் மிக அழகானதாகவும், ப்ரேமைததும்பிய பார்வதியை இறுகத்தழுவும்பொழுது அவளது அழகிய தங்க வளைகளின் சுவடு பதிந்தும் காணப்படுமே.

17.கண்டாச்லேஷார்த்த மாப்தா திவ இவ கமிது:ஸ்வர்கஸிந்தோ:பிரவாஹா:

க்ராந்த்யைஸம்ஸாரஸிந்தோ:ஸ்படிகமணிமஹா ஸங்க்ரமாகார தீர்கா: I

திர்யக்விஷ்கம்பபூதா:த்ரிபுவனவஸதேர்பின்னதைத் யேபதேஹா:

பாஹா வஸ்தா ஹரஸ்ய திருத மிஹ நிவஹா நமஹஸாம் ஸம்ஹரந்து

பரமேச்வரனின் அந்தகைகள் சீக்ரமே உங்கள் பாபக்கூட்டத்தை அழிக்கட்டும். அவை கஜாசுரனை அழித்தவை, மூவுலகிலும் வசிக்கிற த்ரிவிக்ரமரின் குறுக்குக்கிடைத்தாழ்ப்பாளோ என்றமைந்தவை. மேலும் தனது மணாளனை இறுக்கத் தழுவ வேண்டி ஆகாயத்திலிருந்து வந்த ஆகாச கங்கையின் பிரவாஹம்தானோ அவை!அல்லது ஸம்ஸாரக்கடலை எட்டிப்பிடிக்க ஸ்படிக மணியினாலான பெருவழிபோன்று நீண்டிருக்கின்றனவோ?

18.வக்ஷே£தக்ஷத்விஷோsலம் ஸ்மரபரவிநமத் தக்ஷஜாக்ஷீணவக்ஷே£

ஜாந்தர்நிக்ஷிப்த சும்பன் மலயஜமிலிதோத்பாஸி பஸ்மோக்ஷிதம்யத்

ஷிப்ரம்தத் ரூக்ஷசக்ஷ§:ஸ்ரீதிகணபண ரத்னௌகபாபீக்ஷ்ணசோபம்

யுஷ்மாகம் சச்வதேன:ஸ்படிக மணிசிலா மண்டலாபம் க்ஷிணேது II

ஸ்படிகமணியினாலான கல்தரை போன்ற பரமேச்வரனின் மார்பு உங்களது பாபத்தை தொலைக்கட்டும். அந்த மார்பு கொடிய நாகங்களின் படத்தில் உள்ள ரத்ன பிரமையால் விளங்குவதும் காதல் வயப்பட்ட தாக்ஷ£யணீயின் மார்பகத்தில் பூசிய சந்தனகலவையாலும், விபூதியாலும் மிளிர்வதுமாகும்.

19.முக்தா முக்தே விசித்ராகுல வலிலஹரீ ஜாலசாலின்யவாஞ்ச

ந்நாப்யாவர்த்தே விலோலத் புஜகவரயுதே காலசத்ரோர்விசாலே I

யுஷ்மச்சித்த த்ரிதாமா ப்ரதி நவருசிரேமந்திரே காந்திலக்ஷ்ம்யா:

சேதாம் சீதாம்சு கௌரே சிரதர முரதக்ஷீரஸிந்தௌ ஸலீலம் II

காலசத்ருவான பரமேச்வரனின் புத்தம் புதிய அழகு லக்ஷ்மியின் ஆலயமாயிருப்பதும், சந்திரன்போன்று வெண்மையானது மான வயிறு என்ற

பாற்கடலில் உங்கள் மனதாகிய விஷ்ணு ஒய்யாரமாக சயனிக்கட்டும். அந்தவயிறு முத்துக்கள் உடையதாயும், விசித்திரமாக கொந்தளிக்கும் த்ரிவலி என்ற அலைகளுடையதாயும், குறுக்கான நாபி என்ற சூழலையுடையதாயும், தவழும்நாகங்களையுடையதாயும் விசாலமானதாயும் இருக்கும்.

20.வையாக்ரீ யத்ரக்ருத்தி:ஸ்புரதி ஹிமகிரோவிஸ்த்ருதோபத்யகாந்த:

ஸாந்த்ராவச்யாய மிச்ரா பரித இவ வ்ருதா நீலஜீமூத் மாலா I

ஆபத்தாஹீந்த்ர காஞ்சீகுணமதிப்ருதுலம் சைலஜாக்ரீடபூமி:

தத்வோநி:ச்ரேயஸே ஸ்யா ஜ்ஜகன மதிகனம் பாலசீதாம்சு மௌலே: II

நாகத்தலைவனாகிய கடிசூத்ரம் கட்டியதும், மிகப் பெரிய பார்வதீயின் விளையாடுமிடமாயுமிருக்கிற சந்திரப்பிரை யணிந்த பரமேச்வரனின் கனமான பிருஷ்ட பாகம் உங்களுக்கு மங்களங்களை பயப்பதாக இருக்கட்டும். அந்த பிருஷ்டபாகம், ஹிமயமலையின் விசாலமான தாழ்வரையில் பனி மண்டிய மேகக் கூட்டம் சூழ்ந்திருப்பது போல் புலித்தோல் சூழ்ந்ததாக உள்ளது.

21.புஷ்டாவஷ்டம்பபூதௌ ப்ருதுதர ஜகநஸ்யாபிநித்யம்த்ரிலேக்யா :

ஸம்யக்வ்ருத்தௌ ஸுரந்த்ரத்விரத வரகரோ தாரகாந்திம் ததானௌ I

ஸாராவூரூ புராரே:ப்ரஸப மரிகடா கஸ்மரௌ பஸ்மசுப்ரௌ

பக்தை ரத்யார்த்ரசித்தை ரதிகமவநதௌ வாஞ்சிம்வோ விதத்தாம் II

புராரியானபரமச்வரனின் ஸாரமான அந்த தொடைகள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அந்த தொடைகள் இளகிய மனதுடைய பக்தர்களால் வணங்கப்பட்டும், விபூதியினால் வெண்நிறமுடயதாயும், சத்ருக்களின் கூட்டத்தை விழுங்குபவையாகவும், நன்கு அமைந்தவையாயும், ஜராவதயானயின் துதிக்கையத்தவையாயும், பெரியப்ருஷ்டாபாகத்திற்கும் மூவுலகுக்குமே திரண்ட தூண்போன்று அமைந்தவையாயும் இருக்கும்.

22.ஆனந்தாயேந்துகாந்தோபல ரசிதஸ முக்தாயிதே யே முனீனாம்

சித்தாதர்சம் நிதாதும் விதததி சரணே தாண்டவாகுஞ்சநாதி I

காஞ்சிபோகீந்த்ரமூர்த்நாம் ப்ரதிமுஹ§ருபதாநாயமானே க்ஷணம் தே

காந்தே ஸ்தாம்ந்தகாரேர்த்யுதிவிஜிதஸுதா பாநுநீ ஜானுநீ வ: II

அந்திகாரியான பரமேச்வரனின் ஒளியால் சந்திரனையும் விஞ்சிய முழம்கால்கள் உங்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பதாக ஆகட்டும். அவை, சந்திரகாந்தக் கல்லால் சமைத்த குடலை போன்று இருக்கும். முனிவர்களின் மனதிற்கேற்ப தாண்டவத்தை கால்கள் அபிநயிக்கும்போது, கடிசூத்ரமாக அமைந்த நாகங்கள் தலைக்கும் ஒருகணம் தலையைணையாகவும் இருக்கும்.

23.மஞ்ஜீரீபூதபோகிப்ரவரக பணா மண்டலாந்தர்நிதாந்த-

வ்யாதீர்கானர்க்க ரத்னத்யுதி கிஸலயிதே ஸ்தூயமானே த்யுஸத்பி: I

பிப்ரத்யௌ விப்ரமம் வ:ஸ்படிக மணிப்ருஹத் தண்டவத்பாஸிதேயே

ஜங்கே சங்கேந்து சுப்ரே ப்ருசமிஹபவதாம்மாகஸே சூலபாணே: II

சூலபாணியான பரமேச்வரனின் கணுக்கால்கள் உங்கள் மனதில் விளங்கட்டும். அவை சங்கு, சந்திரன் ஆகியோரைப்போல் வெண்மையாயும், ஸ்படிகமணியால் ஆனபெரும் தண்டலம் போல் விளங்குபவையாயும் இருக்கும். மேலும், காற்சதங்கையாய் அமைந்த நாகங்களின் படவளையத்தினுள் விலையுயர்ந்த ரத்னங்களின் காந்தித்துளியாய் தேவலோகத்தவரால் போற்றிப் பேசப்படுபவையாயும் இருக்கும்.

24.அஸ்தோகஸ்தோமசஸ்த்ரை ரபசிதிமமாலாம் பூரிபாவோபஹாரை:

குர்வத்பி:ஸர்வதோச்சை:ஸததமபிவ்ருதௌப்ரஹ்மவித் தேவலாத்யை: I

ஸம்யக்ஸம்பூஜ்யமானாவிஹ ஹ்ருதி ஸரஸீவாநிசம் யுஷ்யதீயே

சர்வஸ்ய க்ரீடதாம் தௌ ப்ரபத வரப்ருஹத் கச்சபாவச்ச பாஸள II

நன்கு போற்றிப் பூஜிக்கப்படுகின்ற தூய காந்தி படைத்த சிவனின் புறங்கால்களாகிய பெரும் ஆமைகள் உங்கள் மனதில் தடாகத்தால் போல் கேளிக்கை செய்யட்டும். அவை ஸ்தோம சாஸ்திரங்களாலும், பலவித உபஹாரங்களாலும் வெகுவாக பூஜிக்கின்றப்ரஹ்மவித்தான தேவர் முதலிய முனிவர்களால் சூழப்பட்டிருப்பவை.

25.யா:ஸ்வஸ்யைகாம்சபாதாததிபஹல கலத்ரக்த வக்தரம் ப்ரணுன

ப்ராணம் ப்ராக்ரோசயன் ப்ராங் நிஜ மசலவரம் சாலயந்தம் தசாஸயம் I

பாதாங்குல்யோ திசந்து த்ருதமயுகத்ருச:கல்மஷப்லோஷகல்யா:

கல்யாணம் புல்லமால்யப்ரகர விலஸிதா:வ:ப்ரணத்தாஹி வல்ய: II

முக்கண்ணனான பரமேச்வரனின் கால்விரல்கள் உங்களுக்கு மங்களத்தை உண்டாக்கட்டும். அவை பாபத்தைப் போக்குவதில் திறன்படைத்தவை, மவர்ந்த புஷ்பங்கள் தூவப்படவை. சர்பங்கள் சுற்றப்பட்டவையும்கூட. அவை, முன்னொரு சமயம் கைலாசமலையை தூக்கிய ராவணனை ஒரு பகுதியே அழுந்த படிந்ததால் (விரல்கள்) வெகுவாக ரத்தம் கசிந்த முகத்தையுடையவனாகவும், உயிர்போக்கும் தருவாயில் நின்றவனாயும் இருந்த அவனை கதறவைத்தனவே!

26.ப்ரஹ்வப்ராசீனபர்ஹி:ப்ரமுகஸுரவரப் பரஸ்புரன் மௌலிஸக்த

ஜ்யாயோ ரத்னோத்கரோஸ்ரை ரவிரத மமலா பூரிநீராஜீதா யா I

ப்ரோதக்ராக்ரா ப்ரதேயாத் ததிரிவ ருசிரா தாரகாணாம் நிதாந்தம்

நீலக்ரீவஸ்ய பாதாம்புருஹவிலஸிதா ஸா நகாலீஸுகம்வ: II

நீலகண்டனான சிவபெருமானுடைய திருவடித் தாமரையில் விளங்கும் அந்த நகக்கூட்டம் உங்களுக்கு சுத்தத்தைக் கொடுக்கட்டும். அது நேர்சீரான நுணியையுடையது. நக்ஷத்திரக்கூட்டம் போல் மிகவும் அழகானது. இந்திரன் முதலிய தேவர்கள் வணங்கும்பொழுது அவரது கிரீடத்திலுள்ள மாணிக்கங்களின் காந்தி கரைசல்களால் ஆரதி செய்யப்பட்டதுமாகும்.

27.ஸத்யா:ஸத்யா நநேந்தா வபி ஸவிதகதே யே விகாஸம் ததாதே

ஸ்வாந்தே ஸ்வாம் தே லபந்தே ஸ்ரீ யமிஹ ஸரஸீவாமரா யே ததாநா: I

லோலம் லோலம்பகானாம் குலமிவஸுதியாம்ஸேவதே யே ஸதா ஸ்தாம்

பூத்யை பூத்யைண பாணோர்விமலதரருசஸ்தே பதாம் போருஹேவ: II

கையில் மான் ஏந்தியவரும், விபூதியால் வெண்நிறமானவருமான பரமேச்வரனின் அந்த திருவடித்தாமரைகள் உங்களது ஐச்வர்யத்தை பயப்பனவாக ஆகட்டும். அவை ஸதீதேவியின் உண்மையான முகச்சந்திரன் அருகில் இருந்தும் கூட மலர்ச்சியடைகின்றன. அந்த திருவடித்தாமரைகளை குளத்தில் உள்ளதுபோல் மனதிற்கொள்வதால் தேவர்கள் தங்களது நிகர அழகைப் பெறுகின்றனர். தேன் வண்டுகளின் கூட்டம் போல நல்லோர் கூட்டமும் எப்பொழுதும் அவற்றை சேவிக்கின்றனரோ!

28.யேஷாம் ராகாதிதோஷா க்ஷதமபி யதயோ யாந்நிமுக்திம் ப்ரஸாதாத்

யேவாநம்ராத்மமூர்த்தி த்யுஸத்ருஷி பரிஷன் மூர்த்னி சேஷாயமாணா: I

ஸ்ரீகண்டஸ்யாருணோத்யச்சரண ஸரஸிஜப்ரோத்திதாஸ்தேபவாக்யாத்

பாராவாராச்சிரம் வோ துரிதஹதி க்ருதஸ்தாரயேயு:பராகா: II

ஸ்ரீகண்ட பரமேச்வரனின் சிவந்த, மலர்ந்த திருவடித்தாமரையியிருந்து கிளம்பிய பொடிகள் உங்களது பாபங்களையழித்து ஸம்ஸாரக்கடலிலிருந்து கடத்தேற வைக்க வேண்டும், அந்த பொடிகளின் அருளாள் சன்யாசிகள் ராகம் முதலிய குற்றம் நீங்கிய அறிவையுடயதாயிருக்கும்படி மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மேலும் அந்த பொடிகள், வணங்கிய தேவர்கள், ரிஷிகள் ஆகியோரது தலையில் ப்ரஸாத்மாகக் கருதப்பட்டன.

29.பூம்னா யஸ்யாஸ்தஸீம்னா புவன மனுஸ்ருதம் பத்பரம் தாம தாம்னாம்

ஸாம்னாமாம்னாய தத்வம் யதபி ச பரமம் யத்குணாதீதமாத்யம் I

யச்சாம்ஹோஹந்நிரீஹம் கஹனமிதி முஹ§:ப்ராஹ§ ருச்சைர்மஹாந்த:

மாஹேசம் தன்மஹோ மே மஹித மஹரஹர்மோஹ ரோஹம் நிஹந்து II

மகேசனின் பெருமைக்குறிய அந்த ஒளி எனது அன்றாட மயக்க வளர்ச்சியை குலைக்கட்டும். அந்த ஒளியின் அளவுகடந்த பெருமையினால் புவனம் முழுவதும் தாங்கப்பட்டது. அதுவே பெரும் பதவிக்கெல்லாம் பெரும் பதவி. ஸாமங்களின் வேதத்துவமும் அதுவே. முடிவானதும் குணம் நீங்கிய முதலும் அதுவே. அது பாபத்தைப்போக்குவது மட்டுமல்ல. ஆழ்ந்த வைராக்கியமும் ஆகும் என்று பெரியோர்கள் கூறுவர்.

சிவனின் கேசம் முதல் பாதம்வரை வர்ணிக்கும் ஸ்தோத்திரம் முடிவுபெறுகிறது.


htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it