Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

II ஸ்ரீ சிவபாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் II 1 கல்யாணம் நோ விதத்தாம் கடகதட லஸத்கல்பவாடீ நிகுந்ஜ க்ரீடாஸம்ஸக்த வித்யாதர நிகர வதூ கீதருத்ராபதான: I

II ஸ்ரீ சிவபாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் II

1.கல்யாணம் நோ விதத்தாம் கடகதட லஸத்கல்பவாடீ நிகுந்ஜ

க்ரீடாஸம்ஸக்த வித்யாதர நிகர வதூ கீதருத்ராபதான: I

தாரைர்ஹைரம்பநாதை ஸ்தரலித நிநதத்தாரகா ராதிகேகீ

கைலாஸ:சர்வநிர்வ்ருத்யபிஜனக பத:ஸர்வதா பர்வதேந்த்ர:

பரமேச்வரணின் சாந்தமான வாஸஸ்தானமான கைலாஸம் என்ற மலை நமக்கெல்லோருக்கும் மங்கலத்தை உண்டாக்கட்டும். அந்த மலைதாழ்வரை பிரதேசத்தில் அமைந்த கல்பகோத்யானத்தில் விளையாடும் வித்யாதரப்பெண்மணிகளால் பாடப்படும் ஸ்ரீருத்ரனின் வீரச்செயல்களையுடையது. ஹேரம்ப விநாயகரின் உரத்த குரலால் நேகிழ்ந்து ஒலி எழுப்பும் முருகப் பெருமானின் மயில்களையுடையது.

2.யஸ்ய ப்ராஹ :ஸ்வரூபம் ஸகல திவிஷதாம் ஸாரஸர்ஸ்வயோகம்

யஸ்யேஷ்:சார்ங்கதன்வா ஸமஜனி ஜகதாம் ரக்ஷணே ஜாகரூக: !

மௌர்வீ தர்வீகராணாமபிச பரிவ்ருட:பூஸ்த்ரயீ ஸாச லக்ஷ்யம்

ஸோsவ்யாதவ்யாஜ மஸ்மான் சிவ பிதநிசம் நாகினாம் ஸ்ரீபிநாக: II

பரமேச்வரனின் பிநாகம் என்ற தனுஸ் தேவர்களுக்கு வரும் கெடுதலைப்போக்குவது, அது நம்மை நேர்மையாக காக்கட்டும். அது தேவர்களின் முழு பலமும் சேர்ந்த ஒரு அமைப்பு. அதன் பாணமாக உலகத்தைக்காக்கும் விஷ்ணுவே ஆனார். நாண்கயிறாக ஸர்பராஜனே ஆனார். முப்புரங்களும் அந்த வில்லின் இலக்கானது.

3.ஆதங்காவேக ஹாரீ ஸகலதிவிஷதா மங்க்ரி பத்மாளுயாணாம்

மாதங்காத்யுக்ரதைத்யப்ரகர தனுகலத் ரக்ததாராக்த தார: !

க்ரூர:ஸ¨ராயுதாணாமபி ச பரிபவம் ஸ்வீயபாஸா வித்ன்வன்

கோராரார:குடா ரோ த்ருடதர துரிதாக்யாடவீம் பாட வேந்ந: !!

கொடிய பயங்கர தோற்றமுடைய பரமேச்வரனின் அந்த மழு, நமது பாபமாகிய காட்டை வெட்டி வீழ்த்தட்டும். அந்த மழு தன்னையண்டிய தேவர்களின் தொல்லையைப் போக்குவது. மாதங்கன் முதலிய கொடிய அரக்கர்களின் உடலில் கசிந்த ரத்ததாரையால் நனைந்த நுணியயுடையது. பத்தாயிரம் சூர்யர்களுக்கும் தனது ஒளியால் அவமானத்தையளிக்கவல்லது.

4.காலாராதே:கராக்ரே க்ருதவஸதி ருர:சரண சாதோ ரிபூணாம்

காலே காலே குலாத்ரிப்ரவரதனயயா கல்பித ஸ்நேஹலேப: I

பாபான்ந:பாவகார்ச்சி:ப்ரஸரஸகமுக:பாபஹந்தா நிதாந்தம்

சூல:ஸ்ரீபாத ஸேவா பஜனரஸஜுஷாம் பாலனைகாந்த சீல : II

காலகாலனான பரமேச்வரனின் அந்தசூலம் நம்மை காக்கட்டும். அந்த சூலம் திருவடிச்சேவை புரிபவர்களையும், பஜனம் செய்வபர்களைக் காப்பதில் ஒரே குறியாக உள்ளது. அவ்வப்போது பார்வதி அன்புடன் தைலலேபம் செய்வாள் அதற்கு, காலனைவதைத்த அந்த பரமேச்வரன் கையில் இருந்துகொண்டு, எதிரிகளின் மார்பாகிய சைனைக்கல்லில் தீட்டப்பட்டும் மிளிர்கிறது.

5.தேவஸ்யாங்காச்ரயாயா:குலகிரிதுஹிதுர் நேத்ர கோணப்ரசார-

ப்ரஸ்தாரா னந்யுதாரான் பிபடிஷ§ரிவ யோ நித்ய மத்யாதரேண I

ஆதத்தே பங்கிதுங்கை ரநிசமயவை ரந்தரங்கம் ஸமோதம்

ஸோமாபீடஸ்ய ஸோயம் ப்ரதிசது குசலம் பாணிரங்க:குரங்க: II

சந்திரசேகரான பரமேச்வரனின் கையில் தவழும் மான் நமக்கு க்ஷேமத்தை கொடுக்கட்டும். அந்த மான் பிரதிதினமும் உவகையோடு ஈசனின் சரீரப்பகுதியில் உறைபவளான பார்வதியின் கடைக்கண் பரவுவதையும் விரிவதையும் கற்க விரும்பியது போல் பலபடியாகத் துவளும் அவயவங்களால் மனதை மகிழ்விப்பதாக இருக்கிறது.

6.கண்டப்ராந்தா வஸஜ்ஜத்கனக மய மஹா கண்டிகா கோரகோஷை:

கண்டாராவை ரகுண்டைரபி பரிதஜகச் சக்ரவாவாந்தரால: !

சண்ட:ப்ரோத்தண்டச்ருங்க:ககுத கவலிதோத்துங்க கைலாஸச்ருங்க:

கண்டேகாலஸ்ய வாஹ:சமயது சமலம் சாச்வத:சரக்வரேந்த்ர: I

காலகண்டனாகிய பரமேச்வரனது நித்ய வாஹனமான நந்திகேச்வரன் நமது பாபத்தை அழிக்கட்டும். அவர் நீண்ட கொம்புகளுடன் பயங்கரமானவர் மட்டுமல்ல. கைலாஸ உச்சியை விட உயரமான தனது திமிலையுடையவர். மேலும் கழுத்துப்பக்கம் தொங்கும் தங்கமயமான மணிகளின் ஒசையாலும், தடையில்லாத தன் கர்ஜனையாலும் உலகம் முழுதும் நிரப்புபவராகவும் இருக்கிறார்.

7.நிர்யத்தானம்புதாரா பரிமல தரலீபூத ரோலம்பபாலீ

ஜங்காரை:சங்கராத்ரே:சிகரசததரீ:பூரயன் பூரிகோஷை: I

சார்வ:ஸெளவர்ண சைலப்பரதிம ப்ருது வபு:ஸர்வ விக்னாபஹர்த்தா

சர்வாண்யா:பூர்வஸுனு:ஸ பவது பவதாம் ஸ்வஸ்திதோ ஹஸ்திவக்த்ர: II

சிவன் பார்வதீயின் மூத்த குமாரனும், தங்கமலை போன்று பருத்த தேஹமுடையவரும், எல்லா விக்னங்களையும் போக்குபவரான அந்த யானை முகத்தவர் உங்களுக்கு நல்லவற்றை போஷிப்பவராய் திகழட்டும். அவர், தனது காதுபக்கம் கசியும் மதஜல வாசனையால் பரபரப்பான தேனீக்களின் ஈங்கார ஒலியாலும், வேறு பல சப்தங்களாலும் கைலாஸ மலையின் உச்சியிலுள்ள பல குகைகளை நிரப்பிக்கொண்டிருப்பார்.

8.ய:புண்யைர் தேவதாநாம் ஸமஜநிசிவயோ:ச்லாக்ய வீர்யை கமத்யாத்

யந்நாம்நிச்ரூயமானே திதிஜபடகடா பீதிபாரம் பஜந்தே I

பூயாத்ஸோsயம் விபூத்யை நிசிதரச சிகா பாடிதக் ரௌஞ்சசைல:

ஸம்ஸாராகாத கூ போதரபதித ஸமுத்தாரகஸ்தாரகாரி: II

சிவன்-பார்வதீ ஆகியோரது போற்றத்தக்க வீர்யச் சேர்க்கையால் தேவர்களின் புன்யத்தால், தோன்றியவர், அவர் பெயரைக் கேட்டாலே அசுரசைன்யமும் பயங்கொள்ளும். அவர் தனது கூரிய வேலாயுதத்தால் க்ரெனஞ்சமலையை உடைத்தெரிந்தார். ஸம்ஸாரமாகிய ஆழமான கிணற்றினடியில் விழுந்தோரை கரையேற்றி வைப்பவர். தாரகாஸுரனை வதைத்தவர். அந்த ஸுப்ரஹ்மண்யர் நமது செய்வச்செழிப்பிற்கு காரணமாகட்டும்.

9.ஆரூட்:ப்ரௌடவேகப்ரவிஜித பவனம் துங்கதுங்கம் துரங்கம்

சேலம் நீலம் வதஸாந:கரதலவிலஸச் காண்ட கோதண்ட தண்ட: I

ராக்த்வேஷாதி நாநாவிதம்ருகபடலீ பீதிக்ருத்பூதப்ர்த்தா

குர்வத் நாகேட லீலாம் பரிலஸது மான:கானனே மாமகீநே II

மிகுந்த வேகத்தால் வாயுதேவனையும் வென்ற உயரமான குதிரையின் மீதேரி, நீல வஸ்திரம் அணிந்து, கையில் கோதண்டம் தாங்கி, ராகம், துவேஷம் முதலிய பற்பல மிருக ஸமுகத்திற்கு பீதியுண்டாக்கும் பூத நாதர் (ஐயப்பர்) எனது மனமாகிய காட்டில் வேட்டையாடும் கேளிக்கையைச் செய்து விளங்கட்டும்.

10.அம்போஜாப்யாம் ச ரம்பாரத சரணலதாத்வந்த்வ கும்பீந்த்ர கும்பை :

பிம்பேநேந் தோஸ்ச கம்போருபரி விலஸதா வித்ருமே ணோத்பலாப்யாம் I

அம்போதேனாபி ஸம்பாவித முபஜனிதாடம்பரம் சம்பராரே:

சம்போ:ஸம்போக யோக்யம் கிமபி தனமிதம் ஸம்பவேத்ஸம்பதே ந: II

பரமேச்வரனின் ஸம்போகத்திற்குறியதான, விசித்திரமான இந்த செல்வம் எங்களது செல்வத்தை விளைவிப்பதாக ஆகட்டும். அந்த செல்வம், மன்மதனின் ஆடம்பரம் கொண்டதாக இருக்கும். இன்னும், இரண்டு தாமரைப்பூக்களோடும், வாழைமரத்தோடும், சக்ரத்தோடும், இரண்டு கொடிகளோடும், யானை மஸ்தகத்தோடும், கழுத்தின்மேல் விளங்கும் சந்திர பிம்பத்தோடும் பவழத்தோடும், நீல ஆம்பல்பூவோடும், மேகத்தோடும் ஒப்பிடும் படியாகவும் இருக்கும்.

11.வேணீ ஸெளபாக்ய விஸ்மாபித தபனஸுதா சாருவேணீவிலாஸான்

வாணீ நிர்தூத வாணீகரதல வித்ருதோதார வீணாவிராவான் I

ஏணீநேத்ராந்தபங்கீநிரஸன நிபுணா பாங்க கோணா நுபாஸே

சோணான் ப்ராணானு தூடப்ரதிநவ ஸுஷமாகந்தலா-நிந்து மௌலே: II

சந்திரசேகரரான பரமேச்வரனின் புத்தம் புதிய அழகுக் குவியலையுடைய சிவந்த அந்தப்ராணன்களை வழிபடுகிறேன். அந்த பிராணன் யமுனயின் நீரோட்டப்பாங்கினை விஞ்சிய பின்னலழகையுடையது. அதன் பேச்சழகால் தோற்கடிக்கப்பட்ட ஸரஸ்வதீயின் கையிலுள்ள வீணையின் சீரிய குரலையுடையது. இன்னும், பென்மானின் கடைக்கண்ணழகை துரத்துவதில் தேர்ச்சிபெற்ற கடைக்கண்களையும் உடையதாய் இருக்கும்.

12.ந்ருத்தாரம்பேஷ§ ஹஸ்தாஹத முரஜ திமித்தித்க்ருதை ரத்யுதாரை:

சித்தானந்தம் விதத்தே ஸரஸி பகவத:ஸந்ததம் ய:ஸ நந்தீ I

சண்டீசாத்யா ஸ்ததான்யே சதுர குணகண ப்ரீணிதஸ்வாமி ஸக்தா

ரோத்கர்ஷோத்யத்ப்ரஸாதா:ப்ரதமபரிவ்ருடா:பாந்து ஸந்தோஷிணோ ந: II

பரமேச்வரன் தாண்டவமாடத் தொடங்கும் பொழுது கையால் அடித்த முரசத்தின் 'திமித்தித்'என்ற ஒலியால் பகவத் ஸதஸில் எல்லோர் மனதையும் களிக்கச் செய்யும் நந்திகேச்வரரும், சண்டிகேச்வரர் முதலிய மற்ற கணத்தலைவர்களும், தமது சீர்மை மிக்க குணங்களால் மகிழ்வித்த ஸ்வாமியின் சேவையின் மூலம் பிரஸாதம் பெற்று மகிழ்வித்திருக்கிற கணங்கள் அனைவரும் எங்களைக் காப்பார்களாக!

13.முக்தாமாணிக்ய ஜாலை:பரிகலித மஹா ஸால மாலோக நீயம்

ப்ரத்யுப் தாநர்க்க ரத்னைர்திசி FC பவனை:கல்பிதைர்திக் பதீனாம் I

உத்யானை ரத்ரிகன்யா பரிஜன வனிதா மானினீயை:பரீதம்

ஹ்ருத்யம் ஹ்ருத்யஸ்து நித்யம் மம புவனபதேர்தாம சோமார்தமௌ: ளே:

முத்து, மாணிக்கம் இவற்றால் நிர்மிக்கப்பட்ட அழகிய கோபுரம் ஒரு புறம், நாற்புரத்திலும் வைரம் இழைத்த திக்பாலகர்களின் மாளிகைகள் ஒரு புறம், பார்வதியின் பணிப்பெண்களுக்கென நிறுவப்பட்ட பூங்காக்கள் ஒரு புறம். இப்படி புவனபதியான, பிறைச்சந்திரனைத் தலையில் தரித்த பரமேச்வரனின் அழகிய இருப்பிடம் எப்பொழுதும் எங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும்.

14.ஸ்தம்பார் ஜம்பாரிரத்னப்ரவர விரசிதை:ஸம்ப்ருதோபாந்த பாகம்

சும்பத் ஸோபான மார்கம் சுசிமணி நிசயைர் கும்பிதா நல்பசில்பம் I

கும்பை:ஸம்பூர்ண சோபம் சிரஸி ஸுகடிதை:சாத கும்பை ரபங்கை:

சம்போ:ஸம்பாவநீயம் ஸகல முனிஜனை ஸ்வஸ்திதம் ஸ்யாத் ஸதோ ந: II

இந்திர நீலக்கற்களால் வடிவமைக்கப்பட்ட தூண்கள் சுற்றுப் புறங்களில் தாங்கி நிற்க, பளபளபடிக்கட்டுகளையுடையதும் சுந்தரத்னகற்கள் இழைத்த சிற்ப வேலைகள் நிரம்பிய கலசங்கள் மேற்புறத்தில் அமையப் பெற்றதும், இப்படி முனிவராலும் போற்றிப்புகழப்பட்ட பரமேச்வரனின் ஸபாபவனம் எங்கள் க்ஷேமத்தை வளர்ப்பதாக இருக்கட்டும்.

15.ந்யஸ்தோ மத்யே ஸபாயா:பரிஸர விலஸத்பாதபீடாபிராமோ

ஹ்ருத்யை:பாதை:சதுர்பி:கனகமணிமயை ருச்சகை ருஜ்வலாத்மா I

வாஸோரத்னேன கேநாப்யதிக ம்ருதுதரேணோஸ்த்ருதோ விஸ்தருகஸ்ரீ:

பீட:பீடாபரம ந:மயது சிவயோ:ஸ்வைரஸம்வாஸ யோக்ய: II

சுற்றுப்புறங்களில் பாத பீடங்கள் விளங்க ஸபையின் நடுவில் அழகிய நான்கு தங்கமயமான உயர்ந்த கால்களுடன் விளங்கும் பீடம், மிக மெல்லிய சிறந்தபட்டாடையால் விரிக்கப்பட்டதாய் ஒங்கிநிற்கிறது. அப்பீடம் சிவனும் சிவையும் அமரத்தக்கதாக இருந்து கொண்டு எங்கள் பீடைகளை அகற்றட்டும்.

16.ஆஸீநஸ்யாதிபீடம் த்ரிஜகததிபதே ரங்க்ரி பீடானுஷக்தௌ

பாதோஜாபோக பாஜௌ பரிம்ருதுல தலோல்லாஸிபத்மாதி ரேகௌ I

பாதாம் பாதாவுபௌ தௌ நமதமர கிரீடொல்லஸத்தாரு ஹீர-

ஸ்ரேணீ சோணாயமாநோந்நத நக தசகோத்பாலமானௌ ஸமானௌ II

பீடத்தில் அமர்ந்திருக்கும் மூவுலகுக்கும் ஈசனான பரமேச்வரனது மிதியடியில் பதித்த தாமரை மலரையத்த இரண்டு கால்கள் எங்களை காக்கட்டும். மழமழப்பான அக்கால்களில் பத்மம் சங்கம் என்ற கோடுகள் பதிந்துள்ளன. காலடியில் வணங்கும் தேவரின் தலைக்கிரீடத்தில் பதித்த வைரங்கள் வரிசையால் சிவப்பேரிய உயர்ந்த பத்து நகங்கள் ஒன்று போல விளங்குகின்றன.

17.யந்நாதோவேதவாசாம் நிகததி நிகிலம் லக்ஷணம் பக்ஷிகது: (தோ:)

லக்ஷ்மீஸம்போக ஸெளக்யம் விரசயதி யயோஸ்சாபரே ரூபபேதே !

சம்போ:ஸம்பாவநீயே பதகமல ஸமா ஸங்கதஸ்துங்கசோபே

மாங்கல்யம் ந:ஸமக்ரம் ஸகல ஸுகரே நூபுரே பூரயேதாம் I

எந்த இரு நூபுரங்களின் ஒலி வேதங்களின் இலக்கணம் முழுவதையும் எடுத்துரைக்கிறதோ, எந்த நூபுரங்களின் மற்றொரு அமைப்பில் (உருவத்தில்) விஷ்ணுவுக்கு லக்ஷ்மீ தேவியின் சேர்க்கை சுகத்தை நல்குகின்றனவோ அந்த நூபுரங்கள் தற்போது சிவனின். திருவடித்தாமரைகளையண்டியுள்ளதால் மதிப்புடன் இருப்பதோடு மிக்க அழகோடும் மிளிர்கின்றன. அவை எமக்கு அனைத்து மங்களங்களையும் நிறைவேற்ற வேண்டுமே!

18.அங்கே ச்ருங்காரயோநே:ஸபதி சலபதாம் நேத்ர வஹ்னௌப்ரயாதே

சத்ரோருத்ருத்ய தஸ்மாதிஷீதியுக மதோ ந்யஸ்த மக்ரே கிமேதத் I

சங்காமித்தம் நதாநாமமர பரிஷதா மந்தரங்கூரயத்தத்

ஸங்காதம் சாரு ஜங்காயுகமகில பதே ரம்ஹஸாம் ஸம்ஹரேந்ந: II

மன்மதன் உடல் பரமனின் மூன்றாவது கண்ணில் ஈசலாகியபின் அவனது இரு அம்பராத்தூணிகள் தானேமுன் வைக்கப்பட்டுள்ளன?எனதேவர்கள் மனதிற்சந்தேஹிக்குமாறு அமைந்த சர்வேசனின் முழங்கால்கள் எங்கள் பாபத்திறனை அழிக்கப்பட்டும்.

19.ஜானுத்வந்த்வேந மீனத்வஜந்ருவர ஸமுத் கோபமானேந ஸாகம்

ராஜந்தௌ ராஜரம்பா கரிகர கனகஸ்தம்ப ஸ்ம்பாவனீயௌ I

ஊரு கௌரீகராம் போருஹஸரஸ ஸமாமர்தனானந்த பாஜௌ

சாரூ தூரீக்ரியாஸ் தாம் துரிதமுபசிதம் ஜன்மஜன்மாந்தரே ந: II

மீனத்வஜவரசன் அம் பராத்தூணி யோத்த முழங்கால்களுடன் விளங்கும் ராஜவாழை, யானைத்துதிக்கை, தங்கத்தூண் போன்ற பரமனின் தொடைகள் கௌரீ திருக்கரங்கள் வருட சுகம் துய்க்குபவை எமது பல நூறுப் பிறவிகளில் சேர்ந்துள்ள பாவங்களைப் போக்கட்டுமே!

20.ஆமுக்தாநர்க்க ரத்னப்ரகர பரிஷ்வக்த கல்யாண காஞ்சீ-

தாம்னா பத்தேன துக்தத்யுதிநிசய முஷா சீன பட்டாம்பரேண I

ஸம்வீதே சைலகன்யாஸுசரித பரிபாகாயமானே நிதம்பே

நித்யம் நர்நர்து சித்தம் மம நிகில ஜகத்ஸ்வாமின:ஸோம மௌலே: II

விலையுயர்ந்த ரத்னங்கள் பதித்து மின்னுகின்ற கடி சூத்திரம் தரித்துள்ளதும்,

வெள்ளை வெளேர் என்ற சீனப் பட்டாடை தரித்துள்ளதும், பார்வதியின் புண்யம் பலித்தாற்போன்று விளங்குவதுமான உலக மனைத்தும் காக்கும் ஸ்ரீசந்த்ர சேகரரது கடிபாகத்தில் என் மனம் களிக்கட்டுமே!

21.ஸந்த்யாகாலானு ரஜ்யத்தினகரஸ ருசா காலதௌந காடம்

வ்யானத்த:ஸ்னிக்தமுக்த:ஸரஸ முதரபந்தேன வீதோபமேந !

உத்தீப்தைர:ஸ்வப்ரகாசைருபசித மஹிமா மன்மதாரேருதாரோ

மத்யோ மித்யார்த்தஸத்ர்யங்மம திசது ஸதாஸங்கதிம் மங்களானாம் !!

மன்மதனின் எதிரியான மகேசன் வயிற்றுப் பாகத்தில் இறுகக்கட்டிய பட்டைக்கட்டு மிக மழமழப்பாகவும் அருமையாகவும் உள்ளது. அது மாலை வேளைச் சூர்யன் போல் சிவப்பானது;வேறு இணையற்றது. 'இல்லை'யெனமிளிரும் அவரது இடைப்பாகம் எனக்கு மங்களங்களைக் கூட்டுவிக்கட்டுமே!

22.நாபீசக்ராலவாலாந்நவ நவஸுஷமா தோஹ தஸ்ரீபரீதாத்

உத்கச்சந்தீ புரஸ்தாத் உதரபத மதிக்ரம்ய வக்ஷ:ப்ரயாந்தீ I

ச்யாமா காமாகமார்த்த ப்ரகதனலிபிவத் பாஸதே யா நிகாமம்

ஸா மா ஸோமார்த்த மௌலே:ஸுகயது ஸததம் ரோம வல்லீமதல்லீ II

தலையில் பிறைச்சந்திரனை யணிந்த பரமேச்வரனின் நாபீ மண்டலப்பாத்தியில் கிளம்பி, புதுப்பொலிவுடன் முன்னே சென்று வயிற்றையும் தாண்டி மார்பையடையும் கருமையான உரோமக்கொடி, காமசாஸ்த்ரப் பொருளை உணர்த்தும் எழுத்து வரிகள் போல் விளங்குகிறது. அது எம்மை சுகமடையச் செய்யட்டுமே!

23.ஆச்லேஷேஷ்வத்ரிஜாயா:கடின குசதடீ லிப்தகாச்மீர பங்க

வ்யாஸங்காதுத்யதர்க த்யுதிபி ருபசித ஸ்பர்த்த முத்தாமஹ்ருத்யம் I

தக்ஷ£ராதேருதூட ப்ரதி நவமணி மாலாவலீ பாஸமானம்

வக்ஷே£ விக்ஷே£ பிதாகம் ஸததநதிஜுஷாம் ரக்ஷதாதக்ஷதம் ந: II

தக்ஷனின் எதிரியான பரமேச்வரனின் மார்பு எங்கள் பாபத்தைப் போக்கி காக்க வேண்டுமே!அந்த மார்பு புத்தம் புதிய மணிமாலைகளால் மிக அழகாக உள்ளது. மேலும் பார்வதியை தழுவி அணியும் பொழுது விம்மிய அவள் ஸ்தனங்களில் பூசிய அகில் சந்தனசேர்க்கையால் சிவப்பேறி மிக அழகியதாய் மிளிரும்.

24.வாமாங்கே விஸ்புரந்த்யா: கரதல விலஸச் சாருரக்தோத்பலாயா:

காந்தாயா வாமவக்ஷே£ருஹ பர சிகரோன் மர்தனவ்யக்ரமேகம் I

அன்யான் த்ரீநப்யுதாரான் வரபசு ம்ருகாலங்க்ருதானிந்து மொலே:

பாஹ¨நாபத்தஹேமாங்கத மணிகடகா நந்த ராலோகயாம: II

தன் இடதுபுறம் உடனிருக்கும் பார்வதீயின் இடது ஸ்தனத்தை வருடும் ஒருகை, மற்ற மூன்று கைகளும் வரமருளவும், மழு, மான் தாங்கவும் பாங்காய், தங்கத்தோள்வாளை, வைரவளை துலங்க எங்கள் மனக்கண்களில் பளிச்சென தெரிகின்றனவே!

25.ஸம்ப்ராந்தாயா:சிவாயா:பதிவிலயபியா ஸர்வலோ கோபதாபாத்

ஸம்விக்னஸ்யாபி விஷ்ணு:ஸரபஸ முபயோ:வாரணப்ரோணாப்யாம்!

மத்யே த்ரைசங்கவீயா மனுபவதி தசாம் யத்ர ஹாலாஹலோஷ்மா

ஸோsயம் ஸர்வாபதாம் ந:சமயது நிசயம் நீலகண்டஸ்ய கண்ட: !!

ஸ்ரீநீலகண்டரின் கண்டம் எங்கள் ஆபத்துக்களையெல்லாம் போக்கட்டும். பர்த்தாவுக்கு ஆபத்தே என்று பதறிய பார்வதீ வேண்டாம் என்றும், உலகமனைத்தும் அழியுமே என்று மனமுடைந்து விஷ்ணு மற்றொருபுறம் சீக்ரங் விழுங்குங்கள் என்றும் வேண்டி நிற்க, ஆலகால விஷம் எந்த கண்டத்தின் நடுவே த்ரிசங்கு நிலையில் நின்றதோ அந்த கண்டம் அல்லவா அது!

26.ஹ்ருத்யை ரத்ரீந்த்ர கன்யாம்ருது தசனபதைர் முத்ரிதோ வித்ருமஸ்ரீ:

உத்யோதந்த்யா நிதாந்தம் தளவதவளயா மிச்ரிதோ தந்த-காந்த்யா!

முக்தா மாணிக்ய ஜால வ்யதிகர ஸத்ருசா தேஜஸாபாஸமான:

ஸத்யோஜாதஸ்ய தத்யாததரமணி ரஸெள ஸம்பதாம் ஸஞ்சயம் ந: !!

மலையரசன் மகளின் மெதுவான பல் முத்திரை பதிந்ததும், வெள்ளை வெளேரென பளிச்சிடும் தனது பற்காந்தியுடன் சேர்ந்து விளங்குவதுமான ஸ்தயோஜாதனனின் கீழ் உதட்டுதடம் எங்களுக்கு செல்வச் செழிப்பை உண்டாக்க வேணுமே. அன்த உதடு காண்போருக்கு முத்தும் பவழமும் ஒன்று கலந்தாற்போல் தோன்றுமே!

27.கர்ணாலங்கார நாநாமணி நிகரருசாம் ஸஞ்சயை ரஞ்சிதாயாம்

வர்ண்யாயாம் ஸ்வர்ணபத் மோதர பரிவிலஸத் கர்ணிகா ஸந்நிபாயாம்!

பத்தத்யாம் ப்ராணவாயோ:ப்ரணதஜன ஹ்ருதம் போஜ வாஸஸ்ய சம்போ:

நித்யம்:சித்தமேதத் விரசயது ஸுகேஸிகாம் நாஸிகாயாம்!!

பக்த ஜனங்களின் ஹ்ருதய கமலத்தில் வசிக்கும் பரமேச்வரனின் ப்ராண வாயு ஸஞ்சரிக்கும் வழியான நாஸிகையில் எங்கள் மனம் லயிக்கட்டுமே!அந்த நாஸிகை, அவரது காதணிகளான பல இரத்தின மணிகளின் ஒளி படர்ந்தும், தங்கத்தாமரையினுள் விளங்கும் கர்ணிகைதானோ என்ற படியும் இருக்கும்.

28.அத்யந்தம் பாஸமானே ருசிரதரருசாம் ஸங்கமாத் ஸன்மணீநாம்

உத்யச்சண்டாம்சுதாமப்ரஸர நிரஸன ஸ்பஷ்ட த்ருஷ்டாபதானே I

பூயாஸ்தாம் பூதயே ந:கரிவரஜயின: கர்ணபாசாவலம்பே

பக்தாலீபால ஸஜ்ஜத் ஜனிமரணலிபே:குண்டலே குண்டலே தே II

கஜாஸுரனை வதைத்த மகேசனது காதுகளை அவலம்பமாகக் கொண்டு, பக்தர்களின் நெற்றியில் பதிந்த ஜனனமரண எழுத்துக்களை இல்லை யெனமாய்க்கும் அந்த குண்டலங்கள் எங்களுக்கு ஐச்வர்யம் உண்டாக்க வேண்டுமே. ஒளி மிக்கதாயும் ஒளிவீசும் பல வைரமணிகள் அமைந்ததால் உதயகாவ சூர்யனின் ஒளியையும் விஞ்சுவதாகவும் அக்குண்டலங்கள் விளங்குகின்றனவே!

29.யாப்யாம் கால வ்யவஸ்தா பவதி தனுமதாம்யோ முகம் தேவதாநாம்

யேஷாமாஹ§:ஸ்வரூபம் ஜகதி முனிவரா தேவதாநாம் த்ரயீம் தாம் I

ருத்ராணீவக்த்ரபங்கேருஹ ஸதத விஹாரோத்ஸுகேந்திந்திரேப்ய:

தேப்ய ஸ்த்ரிப்ய:ப்ரணாமாஞ்ஜலி மு பரசயே த்ரீக்ஷணஸ் யேக்ஷணேப்ய: II

முக்கண்ணரின் அந்த மூன்று கண்கள் பார்வதியின் முககமலத்தை மொய்க்கும் பெரும் கருநீல வண்டுகள்;அவை சூர்ய, சந்திர, அக்னி ஸ்வரூபமானவை எனவும் முனிவர் கூறுவர். சூர்ய-சந்திரர்களால் தானே பகல் - இரவு நிலை நாட்டப்படுகிறது. அக்னி தேவன் தானே தேவரின் முகமெனப் போற்றப்படுகிறார். அப்படியான மூன்று கண்களுக்கு நான் பணிவான வந்தனம் செலுத்துகிறேன்.

30.வாமம் வாமாங்ககாயா வதனஸரஸிஜே வ்யாவலத்வல்லபாயா

வ்யாநம்ரேஷ்வன்யத் அன்யத்புனரலிகபவம் வீத நிச்சேஷ-ரௌக்ஷ்யம் I

பூயோபூயோsபி மோதாத் நிபதததி தயா சீதலம் சூத பாணே

தக்ஷ£ரேரீணாணாம் த்ரயம் அபஹரதா தாசு தாபத்ரயம் ந: II

தக்ஷணின் எதிரியான பரமேச்வரனின் மூன்று கண்களில் ஒன்று - இடது - இடது பக்கம் இருக்கும் பார்வதியின் முக கமலத்தில் பதிகிறது. தக்ஷிணமான இன்னொன்று பக்தர்களிடம் பதிகின்றது. மற்றது நெற்றியிலுள்ளது. கொடுரத்தன்மையை முற்றிலும் விட்டது. மிக்க மகிழ்ச்சியுடன் மன்மதன் மேல் இரக்கமாகப் பதிகிறது. இப்படியான அவரது மூன்று கண்களும் எங்கள் மூன்று தாபங்களையும் போக்கட்டுமே!

31.யஸ்மின் அர்த்தேந்து முக்த த்யுதிநிசய திரஸ்கார நிஸ்தந்த்ரகாந்தௌ

காச்மீரக்ஷே£தஸங்கல்பிதமிவ ருசிரம் சித்ரகம் பாதிநேத்ரம் I

தஸ்மின் உல்லோல சில்லீ நடவர தருணீ லாஸ்யரங்காய மாணே

காலாரே:பாலதேசே விஹரது ஹ்ருதயம் வீதசிந்தாந்தரம் ந: II

காலனைக் கொன்று களைத்த பரமனது அரைசந்திர வடிவமான நெற்றியில், காச்மீர சந்தனக்குழம்பால் தீட்டப்பட்டதுபோல் விளங்குகிறது ஒரு கண். துள்ளிக்குதித்து நடனமாடும் ஜில்லிகையின் நடனரங்கமாகவும் அந்த நெற்றி காட்சியளிக்கிறது. எங்கள் ஹ்ருதயம் வேறெதையும் நாடாமல் அந்த நெற்றியில் களிக்கட்டுமே !

32.ஸ்வாமின் கங்காமிவாங் கீகுரு தவ சிரஸா மாம பீத்யர்த்தயந்தீம்

தன்யாம் கன்யாம் கராம்சோ:சிரஸி வஹதி கிம் ந்வேஷ காருண்யசாலீ!

இத்தம் சங்காம் ஜநாநாம் ஜனயதி கனம் கைசிகம் காலமேக-

ச்சாயம் பூயாதுதாரம் த்ரிபுர விஜயின:ச்ரேயஸே பூயஸேந :

ஸ்வாமியே!என்னையும் தலையில் ஏற்று தாங்கிக் கொள்ளலாமே என்று வேண்டும் யமுனையையும் கங்கையைப் போல் தாங்குகிறாரோ என

எண்ணத்தோன்றும்படி மிக அடர்த்தியான கருங்கூந்தல் கற்றை எங்களுக்கு வெகுவாக நன்மை பயக்கட்டுமே!

33.ச்ருங்காராகல்ப யோக்யை:சிகரிவரஸுதா ஸத்ஸகீஹஸ்தலூனை:

ஸுனை:ஆபத்தமாலா வலி பரிவிலஸத் ஸெளரபாக்ருஷ்ட - ப்ருங்கம் I

துங்கம் மாணிக்ய காந்த்யா பரிஹஸித ஸுராவாஸ சைலே ந்த்ரச்ருங்கம்

ஸங்கம் ந:ஸங்கடானாம் விகடயது ஸதா காங்கடீகம் கிரீடம் II

பரமேச்வரன் தலையில் அணிந்ததும், மாணிக்ககற்கள் பதித்ததும், மிக உயரமானதுமான யுத்தகால கிரீடம் எங்கள் ஸங்கடங்களை நீக்கட்டுமே!அந்த கிரீடம் சிருங்கார ஒப்பனைக்குத் தக்கதான புஷ்ப மாலைகளால் சுற்றப்பட்டும் வாசனை மிக்கதாயுமுள்ளது.

34.வக்ராகார:கலங்கீ ஜடதனு ரஹ மப்யங்க்ரிஸேவானு பாவாத்

உத்தம்ஸத்வம் ப்ரயாத:ஸுலபதர க்ருணாஸ்யந்திந:சந்த்ர மௌலே: !

தத்ஸேவந்தாம் ஜனௌகா:சிவமிதி நிஜயாவஸ்தயைவ ப்ருவாணம்

வந்தே தேவஸ்ய சம்போ:முகுட ஸுகடிதம் முக்த - பீயூஷபானும் !!

நானோ வக்ரன், கலங்கமுள்ளவன், ஜடசரீரம் படைத்தவன், எனினும், மிக எளிதில் எனநெகிழ்ச்சி கொள்ளும் சந்த்ரசேகரனின் சேவையின் காரணமாக சிகையலங்காரமாக சிறப்பை பெற்றேன் எனது தனது நிலமையைச்சுட்டிக்காட்டி நீங்களும் சிவனை சேவியுங்களேன் என்று கூறுவார் போல் இருக்கும் சம்புவின் மகுட பூஷணரான சந்திரனை வணங்குகிறேன்.

35.காந்த்யா ஸம்புல்ல மல்லீகுஸும தவலயா வ்யாப்ய விச்வம் விராஜன்

வ்ருத்தாகாரோ விதன்வன் முஹ§ ரபிச பராம் நிர்வ்ருதிம் பாதபாஜாம் !

ஸாநந்தம் நந்திதோஷ்ணா மணிகடகவதா வாஹ்மான:புராரே:

ச்வேதச்சத்ராக்ய சீதத்யுதி ரபஹரதாதா பதஸ்தாபதா ந: !!

மலர்ந்த மல்லிகையென வெள்ளை வெளேரென காந்தியுடன் உலகனைத்தையும் வியாபித்து, காலடி சேர்ந்தவர்க்கு மகிழ்ச்சி தரும் அந்த வெண்பட்டுக் குடையென்ற சந்த்ரன் எங்கள்தீய ஆபத்துக்களைப் போக்கட்டுமே. அந்த குடை, நந்திகேசரின் வளைதரித்த கையாலே சுமந்து செல்லப்படுவதும் விசேஷமாகும்.

36.திவ்யாகல்போஜ்வலாநாம் சிவகிரிஸுதயோ:பார்ச்வயோ:ஆச்ரிதாநாம்

ருத்ராணீஸத்ஸகீ நாம் மததரல கடாக்ஷ£ஞ்சலை ரஞ்சிதாநாம் !

உத்வேல்லத்பாஹ§ வல்லீ விலஸநஸமயே சாமராந்தோலநீநாம்

உத்பூத:கங்கணாலீ வலயகலகலோ வாரயே தாபதோ ந: !!

பார்வதீ, ஷண்முகர் இவர்களையடுத்து இருபுறமும் நின்று திவ்ய அலங்காரம் பூண்ட பார்வதியின் தோழிகள் சாமரம் வீசுகின்றனர். அவர் கண்கள் மதத்தால் சுழலுகின்றன. அவர்கள் கையசையும் போது கங்கணம், வளை ஆகியவற்றின் கலகல சப்தம் ஆபத்துக்களை நீக்கட்டுமே!

37. ஸ்வர்கௌக: ஸுந்தரீணாம் ஸுலலிதவபுஷாம் ஸ்வாமிஸேவா பராணாம்

வல்கத்பூஷாணி வக்த்ராம்புஜபரி விகலன் முக்தகீதாம்ருதாநி I

நித்யம் ந்ருத்தான்யுபாஸே புஜவிதுதி பதன்யாஸ பாவாவலோக-

ப்ரத்யுத்யத்ப்ரீதி மாத்யத் ப்ரதம நட நடீதத்தஸம்பாவநாநி !!

அடுத்து, ஸேவைக்காக அங்கு வந்து, தங்கள் அழகிய மேனியில் அசைந்தாடும் ஆபரணங்களோடும், முக கமலத்திலிருந்து குழைந்து ஒழுகும் இசையோடும், அவர்களின் கைநிலை, கால்வைப்பு, பாவம் இவற்றைப் பார்த்து மகிழும் பிரதம கணங்களின் பாராட்டுக்குரலோடும் நடைபெறும் தேவமங்கையர் நடனத்தை நித்யம் உபாஸிக்கிறேன்.

38.ஸ்தானப்ராப்த்யா ஸ்வராணாம் கிமபி விசததாம் வயஞ்ஜயன் மஞ்ஜுவீணா-

ல்வானாவச்சின்ன தாலக்ரமமம்ருத மிவா ஸ்வாத்யமானம் சிவாப்யாம் I

நாநா ராகாதிஹ்ருத்யம் நவரஸ மதுர ஸ்தோத்ரஜாதானுவித்தம்

கானம் வீணாமஹர்ஷே:கல மதிலலிதம் கர்ண பூராயதாம் ந: II

அங்கு வந்த நாரத மஹர்ஷியின் பல ராகங்களில் அமைந்த நவரஸம் ததும்பிய கானம் எங்கள் காதுகளுக்கு அருமையான அணிகலன்களாகட்டும். அந்த கானத்தில் வீணையின் ஒலியுடன் தாளக்ரமம் இசைந்து வருவதை சிவனும் பார்வதியும் ரஸிப்பார்கள். ஸ்வரங்கள், நிஷாதம் முதலிய இடங்களுக்கேற்ப தனித்தனியே கண்டு கொள்ள முடிந்ததாயிருக்கும்.

39.சேதோ ஜாதப்ரமோதம் ஸபதி விதததீ ப்ராணிநாம் வாணிநீநாம்

பாணித்வந்த்வாக்ர ஜாக்கத்ஸுலலித ரணித ஸ்வர்ணதாலானுகூலா I

ஸ்வீயாராவேண பாதோதர ரவபடுனா நாதயந்தீ மயூரீம்

மாயூரீ மந்தபாவம் மணிமுரஜபவா மார்ஜநா மார்ஜயேந்ந: II

கேட்டவுடன் ப்ராணிகளுக்கும், நர்த்தனம் செய்யும் மகளிர்க்கும் மனமகிழ்ச்சியை உண்டாக்கி, கை நுனியில் தோன்றிய தெளிவான தாளக்கட்டுடன், மேகத்தின் இடி முழக்கமோவென நினைக்கும் மயில் கூட்டத்தை கிரங்க வைத்த மத்தளத்தின் மார்ஜனை எங்களது மந்த பாவத்தை அறவே துடைக்கட்டும்.

40.தேவேப்யோ தானவேப்ய:பித்ருமுனி பரிஷத் ஸித்த வித்யாதரேப்ய:

ஸாத்யேப்யஸ்சாரணேப்ய:மனுஜ பசுபதத் ஜாதி கீடாதிகேப்ய: I

ஸ்ரீகைலாஸப்ரரூடாஸ்சாபி யேஸந்தி தேப்ய:

ஸர்வேப்யோ நிர்விசாரம் நதி முபரசயே சர்வபாதாச்ர யேப்ய: II

ஸ்ரீகைலாஸத்தில் பரமேச்வரனையண்டி வாழ்கின்ற தேவர், தானவர், ஸித்தர், வித்யாதரர், சாரணர், பித்ருக்கள், முனிவர் மற்றும் மனிதர், பசு, பக்ஷி, கீடங்கள் ஆகிய அனைவருக்கும் ஏன் மரங்கள், புல் பூண்டு வகைக்கும் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

41.த்யாயந்நித்தம் ப்ரபாதே ப்ரதிதிவஸமிதம் ஸ்தோத்ரரத்னம் படேத்ய:

கிம் வா ப்ரூமஸ்ததீயம் ஸுசரித மதவா கீர்த்தயாம:ஸமாஸாத் I

ஸம்பதிஜாதம் ஸமக்ரம் ஸதஸி பஹ§மதிம் ஸர்வலோகப்ரியத்வம்

ஸம்ப்ராப்யாயு:சதாந்தே பதமயதி பரப்ரஹ்மணோ மன்மதாரே: II

தினந்தோறும் காலையில் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பவரின் புண்யத்தைச் சுருக்கமாகக் கூட சொல்லி முடியாது. எல்லா ஸம்பத்துக்களையும், ஸதஸில் வெகுமதியும், பலரது நட்பையும், சதாயுஸையும் பெற்று கடைசியில் பரம்பொருளான பரமேச்வரனின் பாதத்தையும் அடைவாரே அவர்.

ஸ்ரீ சிவபாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் முற்றிற்று.


htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it