ஹரிமீடே - ஹரிஸ்துதி 1 ஸ்தேஷ்யே பக்த்யா விஷ்ணுமநாதிம் ஜகதாதிம் யஸ்மின் ஏதத்ஸம்ஸ்ம்ருதிசக்ரம் ப்ரமதீத்தம் I யஸ்மின் த்ருஷ்டே நச்யதி ஸம்ருதிசக்ரம் தம்

ஹரிமீடே - ஹரிஸ்துதி

1.ஸ்தேஷ்யே பக்த்யா விஷ்ணுமநாதிம் ஜகதாதிம்

யஸ்மின் ஏதத்ஸம்ஸ்ம்ருதிசக்ரம் ப்ரமதீத்தம் I

யஸ்மின் த்ருஷ்டே நச்யதி ஸம்ருதிசக்ரம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஸம்ஸாரம் ஆகியபேரிருளைக்களைய வல்ல ஹரியை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன். அந்தஹரி விஷ்ணுவே, அவர் தோன்றிய விதம் தெரியவில்லை. ஆனால் உலகம் தோன்றக்காரணமாவர். இவ்வாறு உலகியல் சுழல்வதற்கும், பின் அதுவே அவரால் மறைவதற்கும் காரணம்.

2.யஸ்யைகாம்சாத் இத்தமஷேம் ஜகதேதத்

ப்ராதுர்பூதம் யேந பிநத்தம் புனரித்தம் I

யேநவ்யாப்தம் யேந விபுத்தம் ஸுகது:கை:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

இங்கிவ்வேறு தோற்றமளிக்கும் உலகம் முழுதும் அவரது சிறு துளியால் தோன்றி பின்னும் அவரோடு இணைந்துவிடுவதாகும். அவர் எங்கும் நிறைந்துள்ளார். அவரால்தான் அனைத்தும் உணர்வு பெறுகின்றது. அத்தகைய ஹரியை ஸ்துதிக்கிறேன்.

3.ஸர்வஜ்ஞோ யோ யஸ்ச ஸர்வ:ஸகலோயோ

யஸ்சாநந்தோ ஷினந்த குணோ யோ குணதாமா I

யஸ்சாவ்யக்தோ வ்யஸ்தஸமஸ்த:ஸதஸத்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

அவர் எல்லாம் அறிந்தவர் மட்டுமல்ல. எல்லாமாயும் இருப்பவர். குணங்கள் நிரம்பிய அல்லது குணங்களின் இருப்பிடமான ஆனந்த மாவார். அவர் தெளிவாக்கப்படாதவர். ஏனெனில், அவர் தனித்தும், சேர்ந்தும் உள்ளார். 'ஸத்'ஆயும் 'அஸத்'ஆயும் இருக்கிறார். அத்தகைய ஹரியை ஸ்துதிக்கிறேன்.

4.யஸ்மாத் அன்யத் நாஸ்த்யபி நைவ பரமார்த்த-

த்ருச்யாதன்யோ நிர்விஷய ஞானமயத்வாத் I

ஜ்ஞ்த்ருஜ்ஞானஜ்ஞேய விஹீனோஷிபி ஸதா ஜ்ஞ:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உலக விஷயங்களைச்சாராத தனி ஜ்ஞான மானதால் அவர் பரமார்த்தஜ்யான வடிவமேயானவர். அவரன்னியில் வேறு எதுவுமே இல்லை. அறிய வேண்டியது மில்லை. அறிவு ஒன்றே உண்டு என இருக்கும் அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

5.அதார்யேப்யோ லப்தஸு ஸ¨க்ஷ்மாச்யுத தத்வா:

வைராக்யேணாப்யாஸ பலாச்சைவ த்ரடிம்நா I

பக்த்யைகாக்ர்ய த்யானபரா யம் விதுரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

விஷ்ணுவின் தத்வம் முழுதும் சிறந்த குருநாதனிடமிருந்து அறிந்து கொண்டவர், வைராக்யம், அப்யாசம் இவற்றின் துணையாலும், உறுதியாலும், பக்தியுடனும் ஒரே குறிக்கோளுடனும் தியானம் செய்து அந்த ஹரியை தேரில் கண்டனர். அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.

6.ப்ராணநாயம்யோமிதி சித்தம் ஹ்ருதி ருத்வா

நான்யத்ஸ்ம்ருத்வா தத்புனரத்ரைவ விலாப்ய I

க்ஷீணே சித்தே பாத்ருசிரஸ்மீதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஒம் என்று சொல்லி பிராணாயாமம் செய்வதன் மூலம் ஸங்கல்பிக்கும் சித்தத்தை ஹ்ருதயத்தில் நிறுத்தி, வேறெதையும் எண்ணாமல், அந்த சித்தத்தை ஒடுக்கியபின், எந்த ஹரியை ஒளிமயமாகவும் ஞான வடிவாயும் காணமுடிகிறதா அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.

7.யம் ப்ரஹ்மாக்யம் தேவமனந்யம் பரிபூர்ணம்

ஹ்ருத்ஸ்தம் பக்தைர்லப்யமஜம் ஸ¨க்ஷ்ம மதர்க்யம் !

த்யாத்வாஷிஷித்மஸ்தம் ப்ரஹ்மவிதோ யம் விதுரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

பக்தர்கள் தங்கள் ஹ்ருதயத்தில் இருக்கும் பரிபூரண பிரம்மத்தை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட சூக்ஷ்மமென்றும், பிறப்பில்லாத ஆனால் அடையக்கூடிய தேவனென்றும் தியானித்து ஈசனாகக் கண்டுகொண்டார்களோ அத்தகைய, ஸம்ஸாரமாகிய இருளை அகற்றும் ஹரியை நான் போற்றிப் பாடுகிறேன்.

8.மாத்ராதீதம் ஸ்வாத்ம விகாஸாத்மவிபோதம்

ஜ்ஞேயாதீதம் ஜ்ஞானமயம் ஹ்ருத்யுபலப்யம் !

பாவக்ராஹ்யானந்தமனன்யம் ச விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

நான் யார் என்று உணர்ந்து தெளிந்த ஞானமாயும், தன்மாத்ரைகளுக்கு அப்பால், தெரிந்து கொள்ள வேண்டியவையான உலகவிஷயங்களுக்கெல்லாம் மேலாக கருத்தளவில் க்ரஹிக்கக்கூடிய ஆனந்தமாயும் எந்த ஹரியை காண்கிறார்களோ, அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

9.யத்யத்வேத்யம் வஸ்துஸதத்வம் விஷயாக்யம்

தத்தத்ப்ரஹ்மைவேதி விதித்லா ததஹம் ச !

த்யாயந்த்யேவம் யம் ஸனகாத்யா முனயோஷிஜம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உலக விஷயங்களாகிய வஸ்து தத்வங்கள் எவை எல்லாம் அறியப்பட வேண்டுமோ அவையே ப்ரஹ்மம் என்றும் அதுவே நான் என்றும் ஸனகர் முதலிய முனிவர்கள் எவரை தியானம் செய்கிறார்களோ, அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

10.யத்யத் வேத்யம் தத்ததஹம் விஹாய

ஸ்வாத்மஜயோதிர் ஜ்யான மயானந்தமவாப்ய !

தஸ்மிந்நஸ் மீத்யாத்ம விதோ யம் விது ரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உலகில் எதெல்லாம் அறியப்பட வேண்டியவையோ, அவையவை நானல்ல என்று ஒதுக்கி, ஆத்மஜ்யோதியாகிய ஞான-ஆனந்தத்தைப் பெற்று, ஆத்ம அனுபூதிமான்கள் எவரிடம் ஆத்மானுபவம் பெற்றார்களோ அத்தகைய ஹரியை நான் போற்றிப் பாடுகிறேன்.

11.ஹித்வா ஹித்வா த்ருச்யமசேஷம் ஸவிகல்பம்

மத்வா சிஷ்டம் பாத்ருசிமாத்ரம் ககனாபம் !

த்யக்த்வா தேஹம் யம் ப்ரவிசந்த்யச்யுத பக்தா:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

மாறுதல்களைக் கொண்ட காட்சியனைத்தையும், விட்டொழித்து, ஆகாசம் போன்ற ஒளி, ஞான வடிவானதை மட்டும் மனதிற்கொண்டு, உடலை விட்டபின் ஹரி பக்தர்கள் எந்த ஹரியை அடைகின்றார்களோ அத்தகைய ஹரியை போற்றிப்பாடுகிறேன்.

12.ஸர்வத்ராஸ்தே ஸர்வசரீரீநச ஸர்வ :

ஸர்வம் வேத்யே வேஹ நயம் வேத்தி சஸர்வ: I

ஸர்வத்ராந்தர்யாமிதயேத்தம் யமயன்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எல்லாமாய் இல்லையாயினும் எல்லாவற்றிலும் ஊடுருவி எங்கும் நிறைந்துள்ளார் ஹரி. அவர் எல்லாவற்றையும் அறிவார். ஆனால் அவரை எல்லோரும் அறிய மாட்டார். இவ்வாறு எல்லாவற்றிலும் அந்தர்யாமியாய் ஆட்டுவித்து கொண்டிருக்கிற, ஸம்ஸார இருளைப் போக்கும் ஹரியை ஸ்துதிக்கிறேன்.

13.ஸர்வம் த்ருஷ்ட்வா ஸ்வாத்மனி யுக்த்யா ஜகதேதத்

த்ருஷ்ட்வாத்மானம் சைவமஜம் ஸர்வஜநேஷ§ !

ஸர்வாத்மைகோஸ்மி - இதி விதுர்யம் ஜனஹ்ருத்ஸ்தம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

முனிவர்கள், உலகமனைத்தையும் யுக்தியாக தன்னிலும், அவ்வாறே மற்றெல்லா ஜனங்களிடத்தும் ஆத்மாவையும் கண்டு, எல்லாவற்றிலும் ஒரே ஆத்மாவாக இருக்கிறேன் என்று அறிகின்றாரோ, எல்லோரிலும் ஊடுருவி நிற்கும் அந்த ஆத்மாவான ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

14.ஸர்வத்ரைக:பச்யதி ஜிக்ரத்யத புங்க்தே

ஸ்ப்ரஷ்டா ச்ரோதா புத்யதிசேத்யாஹ§ரிமம்யம் !

ஸாக்ஷீ சாஸ்தே கர்த்ருஷ§ பச்யந்நிதி சான்ய

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஹரி ஒருவரேதான் எல்லோரிலும் இருந்து பார்ப்பதும் தொடுவதும், கேட்பதும், முகர்வதும், அறிவதுமாகிய செயல்களை ஊக்குவிக்கிறார் என்று ஒரு சிலரும், மற்றொருவசரார் செய்பவர் செயலை பார்த்துக்கொண்டு சாக்ஷியாக மட்டும் ஹரி உள்ளார் என்கின்றனர். அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

15.பச்யன் ச்ருண்வன் அத்ர விஜாநன் ரஸயன்ஸம்-

ஜிக்ரன் பிப்ரத்தேஹமிமம் ஜீவதயேத்தம் !

இத்யாத்மானம் யம் விதுரீசம் விஷயஜ்ஞம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஹரியே, ஜீவாத்மாவாய் இருந்து, பார்த்தும், கேட்டும், அறிந்தும், முகர்ந்தும், உடலைத்தாங்கிக் கொண்டும் உலக விஷயங்களை அறிகின்றார். அவரே ஈசர் என்ற படி இருக்கிற ஹரியை நான் போற்றிப் பாடுகிறேன்.

16.ஜாக்ரத் த்ருஷ்டவா ஸ்தூலபதார்ரத்தான் அதமாயாம்

த்ருஷ்ட்வா ஸ்வப்னேதாபி ஸஷ§ப்தௌ ஸுகநித்ராம்

இத்யாத்மானம் வீக்ஷ்ய முதாஸ்தே ச துரீயே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஒருவர் ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பொழுது உலகிலுள்ள ஸ்தூல வஸ்துக்களையும், ஸ்வப்னக்காலத்தில் பொய்யான நிகழ்ச்சியையும், ஸுஷ§ப்தியில், நன்றாக நான் தூங்கினேன் என்றவாறு தூக்கத்தையும் கண்டு துரீயத்தில் களிக்கிறாரோ அத்தகைய ஆத்மாவாகிய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

17.பச்யன் சுத்தோஷிப்யக்ஷர ஏகோ குணபேதாத்

நாநாகாரான் ஸ்பாடிக வத்பாதி விசித்ர: !

பின்னஸ் சின்னஸ்சாய மஜ:கர்மபலைர்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

சுத்தமான, நலிவில்லாத, ஒன்றான இந்த ஆத்ம குணங்களின் வேற்றுமையால் அன்றோ பல பலரூபங்களைப் பெற்று ஸ்படிகக்கல் போன்று விசித்திரமாக காண்கிறது. அதுமட்டுமல்ல, பிறப்போ, மூப்போ, இல்லாதிருப்பினும் கர்ம பலன்களால் சிதறுண்டதாகவும் காணப்படுகிறதே, அத்தகைய ஆத்மாவான ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

18.ப்ரஹ்மா விஷ்ணூ ருத்ரஹ§தாசௌ ரவிசந்த்ரௌ

இந்த்ரோ வாயுர்யஜ்ஞ இதீத்தம் பரிகல்ப்ய !

ஏகம் ஸத்தம் யம் பஹ§தாஷிஷிஸுர்மதிபேதாத்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

அறிந்தவர்கூட வெவ்வேறு புத்திகாரணமாக, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், அக்னி, சூர்யன், சந்திரன், இந்திரன், வாயு, யஜ்ஞம் இப்படி பலவாறாக கற்பித்து ஒருவராகவே உள்ள பரமாத்மாவைச் சொல்கிறார்களே. அத்தகைய ஹரியை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன்.

19.ஸத்யம் ஜ்ஞானம் சுத்தமானந்தம் வ்யதிரிக்தம்

சாந்தம் கூடம் நிஷ்கலமானந்த மனன்யம் !

இத்யாஹாதௌ யம் வருணோஷிஸெளப்ருகவேஷிஜம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ப்ரஹ்மம் எது - என்று கேட்ட ப்ருகுவுக்கு வருணன் முதலில் 'அது ஸத்யமானது, ஞானமானது, சுத்தமானது, அளவு கடந்தது, தனித்தது, சாந்தமானது, மறைந்த சுத்த ஆனந்தமானது, வேறெதாயும் சாராதது - இப்படித்தானே கூறினான். அத்தகைய ஹரியா நான் ஸ்துதிக்கிறேன்.

20.கோசாநேதான் பஞ்ச ரஸாதீநதிஹாய

ப்ரஹ்மாஸ்மீதி ஸ்வாத்மனி நிஸ்சித்ய த்ருசிஸ்தம் !

பித்ராதிஷ்டோ வேத ப்ருகுர்யம் யஜுரந்தே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

யஜுர்வேத உபநிஷத்தில் குறிப்பிட்டபடி வருணனின் பிள்ளையான ப்ருகு அன்னாதி பஞ்ச கோசங்களைத்தாண்டி, ஞானத்தில் உறையும் ஆத்யாவே ப்ருஹ்மம் என்று அறிந்தார். அத்தகைய ஆத்மஸ்வரூபியான ஹரிதை ஸ்துதிக்கிறேன்.

21.யோநாவிஷ்டோ யஸ்ய ச சக்த்யா யதநீந:

க்ஷேத்ரஜ்ஞோஷியம் காரயிதா ஜந்துஷ§ கர்து: !

கர்தா போக்தாஷித்மாஷித்ர U யச்சக்த்யதிரூட:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எந்த ஹரியின் சக்தியை முன்னிட்டு ஆத்மா கர்த்தாவும், போக்தாவாகவும் ஆகிறதோ, எந்த ஹரி அந்தர்யாமியாக இருப்பதால், க்ஷேத்ர ஜ்ஞனான இந்த ஆத்மா செய்விப்பதாகவும் ஆகிறதோ அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

22.ஸ்ருஷ்டவா ஸர்வம் ஸ்வாத்மதயைவேத்தம் அதர்க்யம்

வ்யாப்யாதாந்த:க்ருத்ஸ்னமிதம் ஸ்ருஷ்டமசேஷம் !

ஸச்ச த்யச்சாபூத்பரமாத்மா ஸ ய ஏக:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஆராய்ந்து அறியவொண்ணாதபடி தன் ஆத்ம நிலையிலேயே உலகனைத்தும் படைத்து, படைத்தவற்றில் முழுதுமாக ஆந்தர்யாமியாகவும் இருந்து, ஸத்தாயும், தத்பதவாச்யம் ஆகிய விளங்கும் ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

23.வேதாந்தைஸ் சாத்யாத்மிக சாஸ்த்ரைஸ்ச புராணை:

சாஸ்த்ரைஸ் சான்யை:ஸாத்வததந்த்ரைஸ்ச யமீசம் !

த்ருஷ்ட்வாதாந்தஸ்சேதஸி புத்வா விவிசுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

வேதாந்தம், ஆஸ்திகதர்சனங்கள், மற்றும் புராணங்கள், இன்னும் ஸாத்வத தந்த்ரம் ஆகியவற்றால் எந்த ஒரு பரம் பொருளைக் கண்டு, மனதிலும் நன்கு உணர்ந்தனரோ அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.

24.ச்ரத்தாபக்தித்யான சமாத்யைர்யதமானை :

ஜ்ஞாதும் சக்யோ தேவ இஹைவாசு ய ஈச: !

துர்விஜ்ஞேயோ ஜன்மசதைஸ்சாபி விநா தை:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எந்த கடவுள் இங்கேயே சிரத்தை, பக்தி, த்யானம், சமம் முதலியவற்றால் காணவிழைகின்றவர் காணமுடியாதவராய் இருக்கின்றாரோ, அதே அவர் மேற்கூரிய உபாயங்களின்றி பலபிறவியெடுத்தும் காணமுடியாதவரோ அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

25.யஸ்யதர்க்யம் ஸ்வாத்மவிபூதே:பரமார்த்தம்

ஸர்வம் கல்வித்யத்ர நிருக்தம் ச்ருதிவித்பி: !

தஜ்ஜாதித்வாத் அப்திதரங்காப மபிந்நம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே !!

எவருடைய தனது போரான்மை பற்றிய உட்கருத்து விவரித்துக் கூறிமுடியாதோ, ஆனால் வேதமறிந்தவர் ஸர்வம் கல்விதம் என்ற விடத்தில் கோடிட்டு காட்டியுள்ளனரோ, கடலும், கடல் அலையும் போல் அதுவும் அதனில் தோற்றமும் வேறானதல்ல. அவ்வாறு விளங்கும் ஹரியை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன்.

26.த்ருஷ்ட்வா கீதா ஸ்வக்ஷரதத்வம் விதிநாஜம்

பக்த்யா குர்வ்யா லப்ய ஹ்ருதிஸ்தம் த்ருசிமாத்ரம் !

த்யாத்வா தஸ்மின் அஸ்ம்யஹமித்ய த்ரவிதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

பகவத் கீதையில் கூறப்பட்ட அக்ஷரதத்வத்தை முறைப்படி அறிந்துகொண்டு சீரிய பக்தியுடன் ஹ்ருதயத்திலுரையும் ஞான வடிவாக அந்த அக்ஷரத்தை தியானித்து, அதில் ஆத்மா இருப்பதை பெரியோர்கள் அறிவார்களே அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

27.க்ஷேத்ரஜ்ஞத்வம் ப்ராப்ய விபு:பஞ்ச முகைர்யோ

புங்க்தேஷிஜஸ்ரம் போக்யபதார்த்தான் ப்ரக்ருதிஸ்த: !

க்ஷேத்ரேக்ஷேத்ரேஷிப்ஸ்விந்துவதேகோ பகுதாஷிஷிஸ்தே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ப்ருகிதியிலேயே இருந்தவராய் எம்பெருமான் க்ஷேத்ரஜ் ஞனாகி ஐந்து முகங்களால் அனுபவப்பொருட்களை அணுபவித்த வண்ணமிருக்கிறார். அவர், ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் இருந்துகொண்டு, தண்ணீரில் சந்திரன் போல் பலவாறாக காட்சியளிக்கிறார். அத்தகைய ஹரியை நான் துதிக்கிறேன்.

28.யுக்த்யாஷிஷிலோட்ய வ்யாஸ வசாம்ஸி அத்ரஸி லப்ய:

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ்ந்தரவித்பி:புருஷாக்ய: !

யோஷிஹம் ஸோஷிஸோள, ஸோஷிஸ்ம்யஹமேவதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

க்ஷேத்ரம், க்ஷேத்ரமறிந்தவர் இவரிடைய உள்ள வித்யாஸத்தை அறிந்தவர்கள், வியாஸரின் வார்த்தைகளை யுக்தியுடன் ஆராய்ந்து 'புருஷன்'என்பவரை அறிகின்றனர். 'நானே அவர்''நான் அவராகவே உள்ளேன்'என்று அவரை தெரிந்து தெளிகின்றாரோ அந்த ஹரியை நான் துதிக்கிறேன்.

29.ஏகீக்ருத்யாநேக சரீரஸ்த மிமம் ஜ்ஞம்

யம் விஜ்ஞாயேஹேவ ஸ ஏவாசு பவந்தி !

யஸ்மின்லீநா நேஹ புனர்ஜன்ம லபந்தே

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

பற்பல சரீரங்களில் ஊடுருவி நிற்கும் அந்த ஸர்வஜ்ஞரை ஒருவரே என அறிந்து கொண்டவர், அவராகவே ஆய்விடுகிறார்கள். அப்படி ஆகிய பின் இங்கு பின்பும் பிறவி எடுப்பதில்லை. அத்தகைய ஹரியை நான் போற்றிப்பாடுகிறேன்.

30.த்வந்த்வைகத்வம் யச்ச மதுப்ராஹ்ணவாக்யை:

க்ருத்வா சக்ரோபாஸனமாஸாத்ய விபூத்யா !

யோஷிஸெள ஸோஷிஹம் ஸோsஸ்ம்யஹமே வேதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஒன்றும் ஒன்றும் - ஒன்றுதான் என்பதை மது ப்ராஹ்மணவாக்யங்களால் தெரிந்து தெளிந்து உபாஸனை செய்து, அவரே தான் நான், நானே அவர், என்று எவரை அறிகின்றார்களோ ஆன்றோர் அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

31.யோஷியம் தேஹே சேஷ்டயிதா ஷிந்த:கரணஸ்த:

சூர்யே சாஸெள தாப்யிதா ஸோஷிஸ்மய ஹமேவ !

இத்யாத்மைக்யோபாஸநயா யம் விதுரீசம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

சரீரத்தில் அந்த:கரணத்திலிருந்து கொண்டு செயல்படுத்துபவரும், சூர்யனில் சூட்டை ஏற்படுத்துபவரும் எவரோ அவரே நான் தான் - என்று ஆத்மா ஒன்றே என்ற நிலையில் உபாஸித்து எவரைக்காண்கிறார்களோ அத்தகைய ஹரியை நான் துதிக்கிறேன்.

32.விஜ்ஞானாம்சோ யஸ்ய ஸத:சக்த்யதிரூடோ

புத்திர் புத்யத்யத்ர பஹிர்போத்யபதார்த்தான்

நைவாந்த்:ஸ்தம் புத்யதி யம் போதயிதாரம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

உண்மையில் உள்ளவரான அவரை அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளுதல் அவரவர் சக்திக்குட்டபட்டது. புத்தி என்பது வெளியே உள்ள பதார்த்தங்களை தான் அறிகிறது. உள்ளே இருந்து அறியச்செய்யும் ஒருவரை அறிய அந்த புத்தி இணங்குவதில்லை. என்ன வித்தை?ஸம்ஸார இருளைப்போக்கும் அந்த ஹரியை நான் ஸ்திக்கிறேன்.

33.கோஷியம் தேஹோ தேவ இதீத்தம் ஸுவிசார்ய

ஜ்ஞாதா ச்ரோதா மந்த்ரயிதா சேஷ ஹிதவ: !

இத்யாலோச்ய ஜ்ஞாம்ச இஹாஸ்மீதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

யார் இந்த தேவர் நம் உடலில் இருப்பவர்- என்று நன்கு ஆராய்தல் கேட்பவரும், எண்ணச்செய்பவரும், அறிய வரும் அவர் தானேயல்லவா - என்று தெளிந்து அந்த அறிவும் அம்சம்தான் நான் ஆத்மா என எவரை தெரிந்து கொள்ளலாமோ அந்த ஹரியை நான் ஸ்திக்கிறேன்.

34.கோ ஹ்யேவாந்யாதாத்மனி நஸ்யாதயமேஷ

ஹ்யேவானந்த:ப்ராணிதி சாபாநிதி சேதி!

இத்யஸ்தித்வம் வக்த்யுபபத்யா ச்ருதிரேஷா

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

இவரின்றி நம்மில் வேறு யார் உயிர்ப்பது?இவர்தானே ஆனந்தமயமாக கீழும் மேலும் உயிராக இருக்கிறார் - என்று ஆராய்ந்து யஜுர்வேதம் கூறுகிறது. அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

35.ப்ராணோ வாஹம் வாக்ச்ரவணாதீநி மநோவா

புத்திர்வாஹம் வ்யஸ்த உதாஹோஷிபி ஸமஸ்த: !

இத்யாலோச்ய ஜ்ஞப்திரிஹாஸ்மீதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

அவர் பிராணனா, சொல்லா, காதா, மனமா அல்லது புத்திதானா?அவர் பகுதியா அல்ல முழுமையானவரா?என்றெல்லாம் ஆராய்ந்து, எவரை அறியும் சக்தி என்று தெரிந்து கொண்டனரோசான்றோர் அத்தகைய ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

36.நாஹம் ப்ராணோ நைவசரீரம் நமனோஷிஹம்

நாஹம் புத்திர்நாஹமஹங்காரதியௌச !

யோஷித்ர ஜ்ஞாம்ச:ஸோஷிஸ்ம்யஹமேவேதி விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஆத்மா ப்ராணனில்லை, சரீரமில்லை, மனமும் இல்லை. புத்தியுமில்லை. அஹங்காரம் சித்தம் இவையுமில்லை. பின், இங்கு அறியும் சக்தியே ஆத்மா, அதுவே.... என யாரை கண்டுகொண்டனரோ அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

37.ஸத்தாமாத்ரம் கேவல விஜ்ஞானமஜம் ஸத்

ஸுக்ஷ்மம் நித்யம் தத்வமஸீத்யாத்மஸுதாய !

ஸாம்நாமந்தே ப்ராஹ பிதா யம் விபுமாத்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஸாம வேதத்தின் முடிவில் பிதா தனது மகனுக்கு தத்வமஸி என்று சொல்லி, அவர் முழு முதல்வர், எங்குமுள்ளவர், பிறப்பில்லாதவர், நித்யமானவர், எப்பொழுதுமிருப்பவர், ஸ்வானுபவமானவர் என்று எவரை அசையாளப் படுத்தினாரோ அந்த ஹரியை நான் ஸ்துதிக்கிறேன்.

38.மூர்தாமூர்தே பூர்வமபோஹ்யாத ஸ்மாதௌ

த்ருச்யம் ஸர்வம்நேதி ச நேதீதி விஹாய !

சைதன்யாம்சே ஸ்வாத்மநி ஸந்தம் ச விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

தியான நிலையில் ஆழ்ந்து உலகத்திய ரூபாரூப பொருட்களை முதலில் நீக்கி, கண்காணும் பொருட்களையும் இல்லை, இல்லை - என்றே ஒதுக்கி தன்னில் ஞான வடிவில் உள்ளவரான எவரை கண்டனரோ அவரை அந்த ஹரியை ஸ்துதிக்கிறேன்.

39.ஒதம் பாரோதம் யத்ர ச ஸர்வம் ககநாந்தம்

யோஷிஸ்தூலா நண்வாதிஷ§ஸித்தோஷிக்ஷரஸம்ஞ: !

ஜ்ஞாதாஷிதோஷின்யோ நேத்யுபலப்யோ ந ச வேத்ய:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

எவரிடத்தில் உலகம் முழுதும் ஆகாயம் உட்பட ஊடை பாவை போன்று இணைக்கப்பட்டுள்ளதோ, அவர், பெரிதும் இல்லை-சிறிதும் இல்லை என்றபடி அக்ஷரமாகவே முடிவாக்கப்பட்டுள்ளாரோ, அவரின்றி அறியத்தக்கவரும், அறிபவரும் வேறில்லை - என்று முடிவானதோ அத்தகைய ஹரியை துதிக்கிறேன்.

40.தாவத்ஸர்வம் ஸத்யமிவாபாதி யதேதத்

யாவத் ஸோஷிஸ்மீத்யாத்மநி யோ ஜ்ஞோ ந U த்ருஷ்ட: !

த்ருஷ்டே யஸ்மின் ஸர்வமஸத்யம் பவதீதம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

ஸர்வஜ்ஞனை ஈச்வரனை ஆத்மாவில் காணாதவரைதான் இந்த பிரபஞ்சம் உண்மைபோலத் தெரியும். அவரை அப்படி கண்டு விட்டாலோ இந்த பிரபஞ்சம் பொய்யே என்ற உறுதிவரும். அந்த ஸர்வேச்வரனான ஹரியை நான் துதிக்கிறேன்.

41.ராகான்முக்தம் லோஹயுதம் ஹேமயதாக்னௌ

யோகாஷ்டாங்கைருஜ்வலிதஜ்ஞான மயாக்னௌ !

தக்த்வாத்மானம் ஜ்ஞம் பரிசிஷ்டம் ச விதுர்யம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

மற்ற உலோகக் கலப்புள்ள தங்கம் தீயில் இடப்பட்டு உருகி, தூயதாவது போல், ஆபாசங்கள் நீங்கி, அஷ்டாங்கயோகத்தின் மூலம் ஜ்வலிக்கும் ஞானமாகிய அகினியில் ஜீவாத்மா பொசுங்கியபின் எஞ்சிய ஞானப் பேரொளியாக எவரை அறிந்தார்களோ அத்தகைய ஹரியை நான் துதிக்கிறேன்.

42.யம் விஜ்ஞான ஜ்யோதிஷமாத்யம் ஸுவிபாந்தம்

ஹ்ருத்யர்கேந்த்வக்ன்யோகஸமீட்யம் தடிதாபம் !

பக்த்யாராத்ய-இஹைவ விசந்த்யாத்மனி ஸந்தம்

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆக்மானுபவப் போரொளியாய், ஹ்ருதயத்தில் சூர்ய-சந்திர அக்னிகளுக்கு இருப்பிடமாய் போற்றுதலுக்குறியதாய், ன்னல் போன்றுள்ளதாய் இருக்கும் அந்த பரமாத்மாவை இப்பிறவிலேயே கண்டு பக்தியுடன் ஆராதித்து, அதனுட் சேர்கின்றனரே, அந்த ஸம்ஸார இருளைப் போக்கும் ஹரியை ஸ்துதிக்கிறேன்.

43. பாயாத் பக்தம் ஸ்வாத்மனி ஸந்தம் புருஷம் யோ

பக்த்யா ஸ்தௌதீத்யாங்கிரஸம் விஷ்ணுரிமம்மாம் !

இத்யாத்மானம் ஸ்வாத்மனி ஸம்ஹ்ருத்ய ஸதைக:

தம் ஸம்ஸாரத்வாந்த விநாசம் ஹரிமீடே II

தனது ஆத்மாவிலேயே நிலைத்துள்ள பரமபுருஷனை பக்தியுடன் இவ்வாறு ஸ்தோத்திரம் செய்யும் பக்த்தனை - இந்த ஆங்கிரஸனான என்னை - விஷ்ணு காக்க வேண்டுமென ப்ரார்த்திக்கும் ஆத்மாவை தனதாத்மாவோடு இணைந்து எப்பொழுதும் ஒருவராகவே இருக்கிற ஸம்ஸார இருளைக் களைந்து விளங்கும் அந்த ஹரியை ஸ்துதிக்கிறேன்.

ஹரிஸ்துதி முற்றிற்று.