Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நர்மதாஷ்டகம் 1 ஸபிந்து ஸிந்து ஸுஸ்கலத் தரங்கபங்க ரஞ்ஜிதம் த்விஷத்ஸு பாப ஜாத ஜாதகாரிவாரிஸம்யுதம் I க்ருதீயபாத பங்கஜம் நமாமிதேவி நர்மதே II தண்ணீர் துளிகளு

நர்மதாஷ்டகம்

1.ஸபிந்து ஸிந்து ஸுஸ்கலத் தரங்கபங்க ரஞ்ஜிதம்

த்விஷத்ஸு பாப ஜாத ஜாதகாரிவாரிஸம்யுதம் I

க்ருதீயபாத பங்கஜம் நமாமிதேவி நர்மதே II

தண்ணீர் துளிகளுடன் கூடிய பிரவாஹத்தில் மோதும் அலைகளால் அழகியதும், பாபமூட்டைகள் பகைவரிடம் போய்ச்சேருமாறு செய்யும் தண்ணீரையுடையதுமான உனது திருவடியை, ஹே நர்மதே!நான் வணங்குகிறேன். நீயமதூதர்கள், காலபூதங்கள் ஆகியவற்றின் பீதியைப் போக்கும் கவசமெனத்திகழ்கிறாயே!

2.மஹாகபீர நீரபூர பாததூத பூதலம்

நமத்ஸமஸ்தபாத காரி தாரிதாபதாசலம் I

ஜகல்லயே மஹாபயே ம்ருகண்டுஸ¨னு ஹர்ம்யதே

த்வதீய பாத பங்கஜம் நமாமி நர்மதே II

மிகவும் ஆழமான இடத்தில் பிரவாஹம் விழுவதால் சிதறுண்டு போகிறது பூமி, வணங்கியவரின் பாபங்களையகற்றுவதும், ஆபத்துக்களாகிய மலையைப் பிளப்பதுமாய் விளங்குகிற உனது திருவடியை வணங்குகிறேன். ஹேநர்மதே, மிகவும் பயங்கரமான பிரலயத்தில் ம்ருகண்டு முனிவரின் குமாரருக்கு நல்ல இருப்பிடம் அளித்தாயன்றோ c!

3.கதம் ததைவ மே பயம் த்வதம் புவீக்ஷிதம் யதா

ம்ருகண்டுஸ¨னு சௌனகாஸுராரிஸேவிதம் ஸதா I

புனர்பவாப்தி ஜன்மஸம்பவாப்திது:கவர்மதே

த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II

ஹே நர்மதா தேவி!நீ மறுபிறப்பு முதலிய துன்பங்களுக்கு விலக்காக கவசம் அளிப்பவள். உனது திருவடித்தாமரை ம்ருகண்டு முனிவரின் குமாரன், சௌனகர், தேவர்கள் ஆகியோரால் தினமும் போற்றப்பட்டது. அதை நான் வணங்குகிறேன். உனது தண்ணீரைப் பார்த்தவுடனேயே எனக்கிருந்த பயம் நீங்கிவிட்டது.

4.அலக்ஷ்யலக்ஷ கின்னராமராஸுராதி பூஜிதம்

ஸுலக்ஷ நீரதீர தீரபக்ஷி லக்ஷ கூஜிதம் I

வஸிஷ்ட சிஷ்ட பிப்பலாதி கர்தமாதிசர்மதே

த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II

கண்ணுக்குத் தெரியாதலக்ஷேபலக்ஷம் கின்னரர்கள், தேவர்கள், அஸுரர்கள் போற்றுவதும், தெளிந்து தெரியும் உனது நீரின் கரைக்கு வந்து தங்கும் பல பறவைகள் கூச்சல் கொண்டதுமான உனது திருவடிகளை வணங்குகிறேன். ஹே நர்மதாதேவி!நீ வசிஷ்டர், சிஷ்டரான பிப்பலர், கர்தமர் முதலியவர்களுக்கு க்ஷேமம் செய்தவள் அன்றோ!

5.ஸந்த்குமார நாசிகேத கச்யபாத்ரிஷட்பதை:

த்ருதம் ஸ்வகீயமானஸேஷ§ நாரதாதிஷட்பதை:மி

நவீந்து ரந்திதேவ தேவராஜ கர்ம சர்மதே

த்வதீயபாதபங்கஜம் நமாமி தேவிநர்மதோ.

ஸநத்குமாரர் நாசிகேதர், கச்யபர், நாரதர் முதலியோரால் மனதிற் கொள்ளப்பட்ட உனது திருவடித்தாமரையை, ஹே நர்மதாதேவி!வணங்குகிறேன். சூர்யன், சந்திரன், நந்திதேவன், இந்திரன் முதலியவருக்கு க்ஷேமம் தந்தவளன்றோ c!

6.அலக்ஷலக்ஷ லக்ஷ பாபலக்ஷ ஸாரஸா யுதம்

ததஸ்து ஜீவ ஜந்து தந்து புக்திமுக்திதாயகம் I

விரிஞ்சி விஷ்ணு சங்கரஸ்வகீயதாம் வர்மதே

த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II

கண்களுக்குப் புலப்படாத லக்ஷே£ப லக்ஷம் பாபங்களுக்கு நெகிழ்ச்சியுள்ள ஆயுதமானதும், பின், ஜீவஜந்துக்களுக்கு போகம், தருவதுமான உனது திருவடிகளைப் பணிகிறேன். ஹே நர்மதாதேவி!நீ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரது இருப்பிடத்தை பாதுகாத்து வருபவளாயிற்றே!

7.அஹோத்ருதம் ஸ்வநம் ச்ருதம் மஹேசகேசஜாதடே

கிராதஸ¨த பாடவேஷ§ பண்டிதே சடே நடே I

துரந்த பாப தாபஹாரி ஸர்வ ஜந்து சர்மதே

த்வதீபபாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே II

கங்கைக்கரையில் நான் கண்டதும் கேட்பதும் உண்மைதான் போலும். c கிராதர்களுக்கும், ஸ¨தருக்கும், பாவத்திற்கும், பண்டிதருக்கும், பாமரருக்கும், எல்லையற்ற பாபங்களைப் போக்கி க்ஷேமத்தை நல்குபவள் நர்மதாதேவி. அவளது திருவடிகளை வணங்குகிறேன்.

8.இதம் து நர்மதாஷ்டகம் த்ரிகாலமேவ யே ஸதா

படந்தி தே நிரந்தரம் நயந்தி துர்கதிம் கதா I

ஸுலப்ய தேஹ துர்லபம் மஹேசதாம கௌரவம்

புனர்பவா நரா நவை விலோகயந்திரௌரவம் II

இந்த நர்மதாஷ்டகத்தை மூன்று வேளையும் விடாமல் படிப்பவர் ஒருபோதும் கெட்டநிலையை அடையமாட்டார்கள். அன்றியும், இந்த உடலிலேயே கிடைத்தற்கரிய கடவுள் தன்மையைப் பெறுவார்கள். மறுபிறவி எடுத்து ரௌரவம் முதலிய நரகத்தை கண்ணாலும் காணமாட்டார்கள்.

நர்மதாஷ்டகம் முற்றிற்று. htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it